நனைகின்றது நதியின் கரை 15(11)

தங்கள் அறைக்குள் சங்கல்யா பின் நுழைந்தவன்  அவள் எதுவும் கேட்கும் முன் “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பி எஃப்” என்றான். அவளுக்கும் வேறு என்ன வேண்டும்.

நிறைவாய் அவன் முகத்தைப் பார்த்தாள். “அம்மாவப் பார்த்துட்டு வந்தேன்….ஷி இஸ் ஃபைன்….நிம்மதியா சந்தோஷமா இருக்கு…”

“ஓ ஏற்கனவே போய்ட்டு வந்துட்டீங்களா?”

“ம்…கொஞ்ச நேரம் தான் விழிச்சு இருந்தாங்க….உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க….உன்னை கூப்ட தான் வந்தேன்”

“சரி இப்பவே கிளம்புறேன்…” வேகமாக அறையின் உள்பக்கம் பார்த்து திரும்பியவளை கை பிடித்து நிறுத்தினான்.

“இல்ல இப்ப உடனே அம்மாவ பார்க்க முடியாது….அவங்களுக்கு ரெஸ்ட் வேணும் அதனால ரிலாக்‌ஸா கிளம்பு……இன்னொரு விஷயம் உனக்கு ஓகேனா சாரி கட்டிட்டு வா, அம்மாவுக்கு பிடிக்கும்….”

“ஓ..ஓகே…”

போய் இவள் குளித்து புடைவை கட்டி வரும்போது அறையிலிருந்த பெட்டில் கால்களை வெளியே தொங்கவிட்டபடி குறுக்காக படுத்து இரு கைகளையும் தலைக்கு அடியில் அணையாக கொடுத்தபடி தூங்கி இருந்தான் அவன்.

ஏதோ யோசனையில் படுத்தவன் போலும்…

இரண்டு நாளாய் பயணம்…..இரண்டு தூக்கமில்லா இரவுகள்……ஜெட் லாக்…அத்தனை மன உளைச்சல் அம்மாவைப் பார்த்துவிட்டு வரவும் தான் பையனுக்கு தூக்கம் வந்திருக்கிறது…. அவனைப் பார்க்க பாவாமாக இருந்தது அவன் மேல் காதல் கொண்டிருந்தவளுக்கு….

இந்த பொஷிஷன்லயே தூங்கினா கஷ்டமா இருக்காது?

தலைக்கு அடியில் இருந்த கைகளை மெல்ல உருவி விட்ட பின் ஒருவேளை அவன் கால்களை கட்டிலுக்குள் கொண்டுவர இவளால் முடியுமாயிருக்கும்….

அவன் கால்களுக்கு அருகில் நின்றபடி அவன் முகத்திற்கு நேராக குனிந்து, அவன் வல  கையை உருவி, இட கையை மென்மையாக உருவும் போது விழித்துவிட்டான் அவன் காரணம் சரிந்து அவன் மீது விழுந்த இவளது ஈர முடி.

ஒரு கணம் அவனுக்கிருந்த அரை தூக்க நிலைக்கு ஒன்றும் புரியவில்லை எனும் போதும் அடுத்த வினாடி அவன் கண்ணில் தெரிவது அவனது ஃபேவ், பொங்கல் உதடுகள்… சூழ்ந்திருப்பது அவன் செல்ல சிக்‌ஸர் என்பது வரை புரிய….

அத்தனை போராட்டங்களுக்குப் பின் வந்துதித்திருந்த நிம்மதிக்கும் அவள் அருகாமைக்கும்… அவளை மென்மையாய் கைகளால் வளைத்து….அவனுக்கு உரிமையான அந்த பொங்கல் உதடுகளில்… ஸ்வீட் எடு கொண்டாடு….

அதோடு நில்லாமல் அவன் தன்னவளை கைகளில் அள்ள, அவளது “ஜோனத் ப்ளீஸ்” என்ற வார்த்தை. அவ்வளவுதான் சட்டென எல்லாம் உறைக்க நிறுத்திவிட்டான். “சாரி..வெரி சாரி…”

“சாரில்லாம் ஒன்னும் வேண்டாம்….பட் உங்கட்ட கொஞ்சம் பேசனும்….அப்றமா…” அதற்கு பிறகு இதல்லாம் சம்மதம் என மனதில் சொல்ல நினைத்ததைப் பேச பெண்மை தடை போட தரையைப் பார்த்தாள்.

அவள் தயங்கிய குரலும், அவள் முகபாவமும் அவள் சொல்லாமல் நிறுத்தியதை இவனுக்கும் புரிய வைக்கிறதுதானே!…..பேசிய பிறகு தடை இல்லை என்கிறாள்….ஆக இவன் மீதான காதலை….இவனுடனான திருமண உறவை முழுமனதாய் அங்கீகரிக்கிறாள்.

“அதுக்குத்தான் இந்த சாரி…எல்லாத்தையும் பேசி ரிசால்வ் செய்துகாம…” என்று நிறுத்தியவன் ஒரு கணம் எதிரிலிருந்தவள் கண்களை பார்வையால் ஊடுருவினான்…..காதல் ராஜ்யம் அங்கு. பேசி விட வேண்டியது தான் இவன் காதலையும் அதோடு சேர்ந்த அனைத்தையும்.

விலக்கி நிறுத்துவதை விட விரும்பி சேர்வதை அவள் விரும்பும் போது இனி தாமதிப்பது சரி இல்லை….இன்றோடு உடையட்டும் இவர்களது பிரிவு சுவர்.

இறங்கி அடித்து விளையாடுவது அவனது ஸ்டைல்….. எத்தனை நாள்தான் இவளிடம் இப்படி பேச வேண்டுமா அல்லது அப்படியா என குழம்பிக் கொண்டிருப்பதாம்….? ஃபேஸ் இட் மேன்…

“மேரேஜ்ல பார்ட்னர்ஸ்ன்றவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் சமமா ஃபீல் பண்ணனும்…. நான் உன்னை அப்டித்தான் ஃபீல் பண்றேன்…என தொடங்கி ட்ரெயின் இன்சிடென்டை சொன்னால் அவள் இவனிடம் ரொம்பவும் கில்டியாக தாழ்வாக உணருவாளோ இந்த ஸ்டேஜில் என நினைத்து அதை மட்டும் தவிர்த்து…..அவளைப் பற்றி அவனது அத்தனையையும் சொல்லி முடித்தான்.

ஆனால் அவளோ, அவன் முன்பு யூகித்த எந்த வகையிலும் இல்லாமல் வேறு ஒரு கோணத்தில் ரியாக்ட் செய்து வைத்தாள்.

இவன் காதலை அவள் சந்தேகப் படவில்லை.

இவனது வெறும் பிசிகல் டிசையர் எனவும் அவள் நினைக்கவில்லை…..அவன் இழுத்த இழுப்புக்கும் வர அவள் தயாராய் இல்லை.

அவனது டெம்பரரி திருந்தின மூடு என்ற பதம் அவளை தாக்கிய விதம் பயங்கரம். இப்பவும் நான் திருந்திட்டேன்னு நான்தான நினைக்கிறேன்….நாளைக்கே நான் வேற எதாவது ஒரு எதிரடையான சிச்சுவேஷ்ன்ல திரும்பவும் கிரிமினல் வேலை செய்ய மாட்டேன்னு  என்ன நிச்சயம்….?

முன்ன ஜோனத்ட்ட பேசுனப்ப இனி தப்பு பண்ண கூடாதுன்னு மனம் உணர்ந்து தானே முடிவு பண்ணேன்….. பட் இம்மிடியெட்டா எவ்ளவு பெரிய கிரிமினல் வேலை பார்த்து வச்சேன்….சோ இதுவும் அது மாதிரி டெம்பரரி ரிப்பென்டன்ஸா இருக்காதுன்னு என்ன நிச்சயம்?

என்னை மாதிரி இம்பேலன்ஸ்ட் இன்கன்சிஸ்டென்ட் பொண்ணுகூட சேர்ந்து இவன் வாழ்க்கை கெட்டு போகக் கூடாது….

என் பேக்ரவ்ண்ட்ல வந்து பொண்ணுக்கு கல்யாணம்ங்கிறதே தப்பான டெசிஷன்…..கெட்டவனை கல்யாணம் செய்தா அவனால நானும்……நல்லவனை கல்யாணம் செய்தா என்னால அவனும்  நரகத்தைப் பார்த்திருவாங்க…..

இப்படி ஓடியது அவள் மனம்.

‘அம்மா சரியாகி வர்ற வரைக்கும் தான் நான் இங்க இருப்பேன்……. தென் ஐ வில் மேக் ஷ்யூர் ஹீ கெட்ஸ் செட்டில்ட் வித் அ ப்ராப்பர் கேர்ள்…’ இந்த அவளது முடிவு அவளை உயிர் வரை சுட்ட அளவில்தான் தனக்கான அவன் மீதான காதலின் ஆழத்தை உணர்ந்தாள் அவள்.

இப்பதான் கொஞ்சம் முன்னால நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் பி எஃப் என்றவன் நிம்மதியை இவளது இந்த முடிவை சொல்லி கலைத்துப் போட  அவளுக்கு தெம்பு இல்லை. ப்ராப்பர் டைம்ல சொல்லிக்கிடலாம்.

ஆக அதன் பின் அவனிடம் எதுவும் பேசாமல் மௌனமாக கிளம்பித் தயாரானாள்.

அடுத்த பக்கம்