நனைகின்றது நதியின் கரை 15

நேரம் செல்ல செல்ல என்ன செய்யவென்று சங்கல்யாவுக்கு தெரியவில்லை. அவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அவனோடு போய் ஒண்டிக் கொள்வாள் தான். அப்படி தவிப்பாக பயமாக இருந்தது அவளுக்கு.

ஆனால் இவளுக்கே இப்படி என்றால் அவனுக்கு எப்படி இருக்குமோ? அதில் அவனை இவள் வேறு தொந்தரவு செய்ததாகிவிடக் கூடாது.

இவள் கையை யாரோ பிடிப்பதை உணர்ந்து தன்னவன் மேலிருந்த பார்வையை விலக்கி திரும்பிப் பார்த்தாள். சுகவிதா…

“வாங்க லியா” என்ற படி  அவள் அழைக்க என்ன ஏது என்று புரியாமல் இவள் எழுந்தாள்.

இவளை அழைத்துப் போய் ஜோனத் அருகிலிருந்த அடுத்த இருக்கையில் அமர்த்திய சுகவிதா இவளது கையை பிடித்து அவன் கைக்குள் வைத்தாள்.

இவள் இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை. அவன் இப்பொழுது என்ன சொல்லி ரியாக்ட் செய்வானோ?! முகம் வெளிற மூச்சடைக்க இவள் விழிக்க, அவன் தன் கைக்குள் வைத்த இவள் கையை பற்றிக் கொண்டான். ஆனால் அதன் பின்பு எந்த ரியாக்க்ஷனும் இல்லை.

அதுவே அப்போதைக்கு உலகமகா பெரிய விஷயமாகப் பட்டது சங்கல்யாவுக்கு. முன்புக்கு இப்பொழுது ஒருவித பாஸிடிவ் ஃபீல்.

நிமிர்ந்து சுகவிதாவைப் பார்த்தாள். அவள் சின்ன தலையசைப்புடன் போய் அரண் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

நேரம் போய்க் கொண்டு இருந்தது.

மீண்டுமாய் விழிப்பு வர கண் திறந்தாள் சங்கல்யா.  ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. கண் பார்வையில் எதிரில் பட்டது அந்த வெண்ணிற சுவரும்….கஷ்மீரி வைட் க்ரானைட் தரையும். ‘ஓ ஹாஸ்பிட்டல்….!!! தூங்கிட்டாளா? அச்சோ….’ பதறும் போதே புரிகிறது அவள் யார் மடியிலோ படுத்திருக்கிறாள். அதிர்ந்து உருண்ட கண்ணில் படுகிறது ஜோனத் முகம்.

அருகிலிருந்த சேரில் உட்கார்ந்திருந்தவள் அவன் மடியில் தலை சாய்த்து படுத்திருக்கிறாள். அவன் இடக் கை இவள் பக்கவாட்டு முகத்தில்…..அவன் கண்களோ சுவரை வெறித்திருந்தது…..

ஓ மை காட்!!! அத்தனை பேர் முன்னிலையில், அவன் மடியில், அதுவும் இந்த சூழலில்…. துள்ளி எழுந்தாள்.

அப்பொழுதுதான் அவள் விழித்துவிட்டதை உணர்ந்த ஜோனத் அவளை முறைத்தான்.

அதேநேரம் அவனை வரச் சொல்லி வருகிறது டாக்டரின் அழைப்பு…

அவன் தாடை இறுக எழுந்து கொள்ள இவளுக்கு அடி முடியெல்லாம் அலறுகிறது மௌன ஓலம்.

சர்ஜரி என்னாச்சு?!!!

இவள் புறமாக திரும்பி கை நீட்டினான் அவன். கூட வர சொல்றான்…

ஐயோ!! அங்கு என்ன செய்தி காத்திருக்கிறதோ….? பயத்தில் வேர்த்துப் போகிறது அவளுக்கு.

மறுப்பாக அவசர அவசரமாக இடவலமாக தலையாட்டினாள் பெண். அவன் ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு போய்விட்டான் அரண் பின் தொடர…..

அடுத்து அவனைப் பார்க்கும் வரை பட பட இதயம்.

வரும்போதே அவன் முகம் சொல்கிறதுதான் ஆப்பரேஷன் நல்லவிதமாய் நடந்து முடிந்திருக்கிறது என்ற செய்தியை. நிம்மதி வந்துவிட்டது இவளுக்கு.

குழந்தையை ரொம்ப நேரம் ஹாஸ்பிட்டலில் வைத்திருக்க வேண்டாம் என புஷ்பம் மட்டும் இங்கு இல்லை. ஹயாவுடன் வீட்டுக்குப் போயிருந்தார். மற்ற அனைவரும் இங்கு தான்.

“சர்ஜரி சக்‌ஸஸ்…..இனி அம்மா பாடி இந்த சர்ஜரிக்கு செட்டிலாகனுமாம்…..ஃப்யூ டேஸ்ல ஸ்டேபிள் ஆயிடுவாங்க…..இப்ப யாரும் பார்க்க முடியாதாம்….நாளைக்கு பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க…. “

அத்தனை பேருக்குமாக அவன் சொல்லிக் கொண்டிருக்க சற்று தள்ளி அவள் இருந்த இடத்தில் எழுந்து நின்றபடி அவன் சொல்வதை கவனித்துக் கொண்டிருந்தாள் இவள்.

அடுத்து இரவு யார் மருத்துவமனையில் தங்குவதென டிஸ்கஷன். ஆப்வியஸ்லி அவன் அங்கு தான் தங்குவேன் என்றான். ஆனால் மற்றவர்கள் தான் ஒத்துக் கொள்ளவில்லை.

“எப்படியும் இனி அம்மாவை இப்போதைக்கு பார்க்கவிடப் போறது இல்லை…. நைட் ட்ராஃபிக் கூட இருக்காது எமெர்ஜென்ஸின்னா 10 மினிட்ஸ்ல இங்க ரீச் ஆயிடலாம்….நீ 24 அவர்ஸ் ட்ராவல் செய்து வந்துருக்க……அவளும் நேத்து நைட்ல இருந்து தூங்கலை போல…..அதோட முதல் நாளே ரெண்டு பேரும் தனி தனியா தங்க வேண்டாம்…..”

ஆளாளுக்கு ஒவ்வொன்றாய் சொல்லி இவர்கள் அரண் வீட்டில் தங்குவெதன முடிவானது. அரணும் சுகாவும் கூட வீட்டில் தான். நேற்றிலிருந்து அரணும் தானே ஹாஸ்பிட்டலில்  இருக்கிறான். அன்று ஹாஸ்பிட்டலில் தங்கியது திரியேகன்.

இவளுக்குமே அந்த முடிவு பிடிக்கவிலைதான். ஒரு வயதானவரை அங்கு தங்க சொல்லிவிட்டு  இவர்கள் எப்படி வீட்டிற்கு போவதாம்? ஆனால் எல்லோரும் சொல்லும் போது எவ்வளவுதான் முரட்டடியாய் மறுக்க முடியும்….? அதுவும் அரண் ஜோனத் மறுப்பு கூட மதிப்பிழக்கும் போது….?

ஆக அரண் வீட்டில் இவளுக்கான அறையில் அல்லாமல் வேறு ஒரு அறையில் இவர்கள். படுக்கையின் அளவு இருவருக்குமாயிருக்க வேண்டும் என்பது அறை மாற்றத்திற்கு காரணமாயிருக்கலாம்.

சுகவிதாதான் ஓடி ஓடி இவளுக்கு இன்ஸ்ட்ரெக்க்ஷன்….இது இங்க இருக்குது….அது அங்க….என்ன வேணும்னாலும்…எப்பனாலும் கூப்டுங்க…. என.

“ இப்படி நின்னே லியாவ பயங்காட்டாம கொஞ்சமாவது தூங்கு…” என்ற ஒற்றை அறிவுரை ஜோனத்துக்கு.

அவன் அந்த அறைக்குள் வந்த நேரத்திலிருந்து அங்கு ஒரு ஓரத்திலிருந்த சுவர் உயர ஃப்ரென்ச் வின்டோவின் கர்டனை விலக்கிவிட்டு அதன் வழியே வெளியே பார்த்தபடி நின்றிருந்தான்.

அடுத்த பக்கம்