நனைகின்றது நதியின் கரை 14(4)

“ஏய்….நீ ரொம்ப பேசுற…இடத்தை காலி பண்ணு…” அவசர அவசரமாக தன் செக் புக்கை எடுத்து 5 லட்சம் என நிரப்பி கையெழுத்திட்டு அவள் முன் வீசுகீறார் அனவரதன்.

“பொறுக்கிட்டுப் போ…”

சட்டென அதை கையில் எடுத்த சங்கல்யா சடசடவென கிழித்து எறிந்தாள்.

“இந்த காசுக்காக ஒன்னும் நான் இங்க வரலை….அரண் அண்ணாவும் திரியேகன் அங்கிளும் அன்புங்ற ஜீவ நதி….அவங்க பக்கத்துல பாலை வனம் இருந்தா கூட ஈரமாகிடும்….அவங்க பக்கத்துல நான் இருந்திருக்கேன்….தட் லவ் கம்பல்ட் மீ…..அவங்களுக்கு, சுகாக்கு எல்லோருக்கும் இப்படி நீங்க வயாசான காலத்துல தனியா இருந்து மன வேதனைப் படுறது கஷ்டமா இருக்கு…..ஏன் எனக்கே உங்கள நினச்சா பாவமாத்தான் இருக்கு…..உங்க பேத்திய பார்த்திருக்கீங்க தானே…. என்ன ஒரு குழந்தை…..போய் பாருங்க….. திரியேகன் அங்கிள் மடியிலயும்…அரண் அண்ணா தோள்லயும் அவ ஆடுற ஆட்டத்தை…. உங்க வறட்டு பிடிவாதத்தால எதை லாஸ் பண்றீங்கன்னு புரியுதா…. அதுக்காகத்தான் வந்தேன்….. நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்…..”

அனவரதனுக்கு பல காலமாக அவரை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதும் எஸ் சார் என தலையாட்டியே பழக்கம். குடும்பத்தில் முதல் பையன், முதல் டிகிரி கோல்டர், முதலில் வெளிநாடு போனவர், முதல் பணக்காரர், தென் அவர் கம்பெனியில் சி ஈ ஓ….ஆக தான் நினைப்பதுதான் எப்போதும் சரி என வாழ்ந்து கொண்டிருப்பவர்.  இந்த சாட்டையடி ட்ரீட்மென்ட் அவரை கொஞ்சம் அடுத்தவர் பக்கத்தை நினைத்துப் பார்க்க வைத்ததென்னவோ நிஜம்.

அவருக்கு இந்த நிகழ்சிகள், அரண் தான் அட், மகளின் தற்கொலை மிரட்டல், அரணது 6 மாத கோமா என எல்லாம் ந்யூ இன்ஃபோ…..முன்னால யாராவது இதை சொல்ல ட்ரை பண்றப்பல்லாம் அவங்கள பேசவிட்டால் தானே….. ஆக இப்போது யோசிக்கையில் இதெல்லாம் லாஜிகலி சங்கல்யா சொல்வதைத்தான் உறுதி செய்கிறது.

முன்பாவது இதெல்லாம் தெரியும் முன் அவர் பக்க வியூஸ்தான் அவருக்கு படு பெர்ஃபெக்டாக  தோன்றும்….இப்பொழுது அதற்கு வாய்ப்பே இல்லைதான். ஆனாலும் அதை ஒத்துக் கொள்ள அவருக்கு சுத்தமாக மனம் இல்லை.

இதுவும் அரணது அடுத்த கட்ட நடவடிக்கைக்கான சதி என்று நினைக்கத்தான் பிடிக்கிறது. ஆனால் பேத்தியைப் பற்றி சொன்ன விஷயம்…..அதோடு காசுக்காக மட்டுமே வேலைக்கு வந்த இந்த சங்கல்யா செக்கை கிழித்து எறிவது இதெல்லாம் அவர் மனதின் அஸ்திவாரங்களை ஆட்டிப் பார்க்கிறது. இப்பொழுது இவர் என்ன செய்ய வேண்டும்????

இதற்குள் திரும்பி நடக்க தொடங்கிய சங்கல்யா, சட்டென நின்றாள். “ஆமா உங்களுக்கு திரியேகன் அங்கிள் ஃபேமிலி கூட தான ப்ரச்சனை….அன்பரசி அம்மா கூட என்ன சண்டை…சின்ன வயசுல இருந்து சுகாவ தூக்கி வளத்தவங்க….நாளைக்கு நீங்க நினச்சா கூட பார்க்க முடியுமோ இல்லையோ…..புஷ்பம் ஆன்டிய கூட போகவிடாம வச்சிருக்கீங்க? ஜோனத் கூட ஊர்ல இல்லை…இந்த ஊர்ல உங்க ஃபேமிலிய விட அவங்களுக்கு க்ளோஸ் யாரு?…..உங்களுக்கு ஹெல்ப் மட்டும் ஜோனத்ட்ட கேட்டு வந்தீங்க….இப்ப அங்க உங்க மகளும் மருமகனும் இருப்பாங்கன்னுட்டு வர மனசு இல்லை என்ன?”

அன்பரசி மீதோ ப்ரபாத் மீதோ  கோபம் என்று அனவரதனுக்கு எதுவும் இல்லைதான். மன தடை மருமகன் தான். இப்பொழுதோ போக வேண்டும் என தோன்றுகிறது. அதோடு மகளும் மருமகனும் அங்கு இருக்கிறார்கள் என்றால் பேத்தி கண்ணில் பட வாய்ப்பு அதிகம். மகட்ட கூட ஈகோ பார்க்க முடியுது…பேத்திட்ட அப்டில்லாம் எதுவும் தோணலையே…..வீடியோ க்ளிப்லயே எத்தனை நாள் பார்க்க….? ஆனால் திடுதிப் என எப்படி போய் பார்ப்பதாம்? பார்க்கும் போது என்ன பேச? எப்படி அவர்கள் முகத்தில் விழிக்க? தன்மானம் தர்மசங்கடபடுகிறது.

“அபவ் ஆல் எனக்கு ஒரு விஷயம்தான் புரியவே இல்லை….திரியேகன் அங்கிள் கூட உங்களுக்கு என்ன ப்ரச்சனை……? நீங்க பெருசா நினைக்ற உங்க ஊர், உங்க சொந்தம், பணம், ஃபிஸினஸ், சக்‌ஸஸ்ஃபுல் டேலண்டட் ஃபேமஸ் வாரிசுன்னு எல்லாமே அவங்கட்ட இருக்குது…… அதுக்காக நியாயப்படி உங்களுக்கு அவங்கள பிடிக்க தானே செய்யனும்…..அதுவும் இப்ப அதெல்லாம் உங்க பொண்ணுக்கு தான சொந்தம்….நமக்கு பிடிச்சது அடுத்தவங்கட்ட இருந்தா ஃபேவரிடிசம்ன்ற பேர்ல அட்மையர் செய்றதும்….இல்லை அதுக்காவே அவங்களை வெறுத்து என்வியா ஃபீல் பண்றதும் நம்ம சாய்ஸ்தான்….. ஆக ஒருவகையில இப்ப நீங்க உங்க பொண்ணப் பார்த்து பொறமப் படுறீங்கன்னு அர்த்தம் வருது….“

கதவை திறந்து கொண்டு போய் விட்டாள் சங்கல்யா.

ஆக கடைசில என்னை பொறாமபிடிச்சவன்னு இந்த பொண்ணு சொல்லிட்டு….அதுவும் என் மகளப் பார்த்து….திரியேகனை பார்த்து…. ஸ்தம்பித்துப் போனார் அவர்.

சட்டென தன் மனம் மீது இருந்த ஒரு இரும்பு கவசம் கழன்று விழுவது போல் ஒரு உணர்வு அவருக்கு….

இந்த பொண்ணு சொல்றது சரிதான். என் பார்வையில தான் தவறு….பொறாமை….

அவசரமாக அறையை விட்டு வெளியே வந்தார் சங்கல்யாவைத் தேடி.

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே…..என்ட்ட சொன்னத என் வைஃப்ட்ட  சொல்ல முடியுமா ப்ளீஸ்……”

அவளோ ஒரு கணம் யோசித்தாள். இதுல என்ன சதி இருக்கும்??? “இல்ல வேணாம் நான் இங்க பக்கத்துல எங்கயாவது வெயிட் பண்றேன்….அவங்கள இங்கயே வர சொல்லுங்க…..” யாரை நம்பியும் எங்கு செல்லவும் மனமில்லை.

அடுத்த முக்கால் மணி நேரத்தில்  புஷ்பம் இவள் எதிரில். இவள் விஷயத்தை சொல்ல….   “ஆமா ஆக்சிடெண்ட் வரை உள்ளதை சுகி இப்டித்தான் சொன்னா…..பட் இந்த கோமா விஷயம் எனக்கு இப்பதான் தெரியும்….இதெல்லாம் உங்கட்ட சொல்ல எவ்ளவோ ட்ரை பண்ணிருக்கேன் முன்னால….நீங்க பேச விட்டதே இல்ல…. ”

தான் எந்த வகையிலும் சங்கல்யாவால் ஏமாற்றப் படவில்லை என இப்பொழுது அனவரதனுக்கு  உறுதி தானே….

“புஷ்பம் அப்டியே கிளம்பு ஹாஸ்பிட்டலுக்கு போவோம்…” மனைவியிடம் சொன்னவர்

“நீயும் கிளம்புமா  எங்க கூட …….உன்னை எங்க ட்ராப் பண்ணனும்னு சொல்லு……இந்த டைம்ல தனியா போறது அவ்ளவு சேஃப் இல்லை…” என்றார் இவளிடம். நன்றி உணர்வு அவரிடம்.

அவர் சொல்வதும் சரிதான். மணி 9 .30 யாவது இருக்கும். ஹாஸ்டல் ரீச்சாக 10. 15. ஹாஸ்டல் பக்கத்தில் சில வெற்று தெருக்களை கடக்க வேண்டி இருக்கும். இத்தனை மணிக்கு அது சேஃப் இல்லைதான்.

புஷ்பமும் உடன் வருவதால் பயம் ஒன்றும் இல்லை. ஆக பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.

அவ்வளவுதான் தெரியும் சங்கல்யாவுக்கு. முந்திய இரவு முழுவதும் தூங்கி இருக்கவில்லை அவள். பகல் முழுவதும் இந்த நிமிடம் வரை துளி தூக்கம் இல்லை.

அடுத்த பக்கம்