நனைகின்றது நதியின் கரை 14(3)

அரண் வீட்டை விட்டு வெளியே வந்து ஆட்டோ அல்லது பஸ் கிடைக்குமா என காத்திருக்க ஆரம்பித்தாள்.

இப்பொழுது இவள் மொபைல் சிணுங்குகிறது.

இவளோட மொபைலதான் ஜோனத் எடுத்துகிட்டானே….சோ அவன் ஞாபகமா அவன் கொடுத்த இந்த மொபைலை கொண்டு போறது தப்பில்ல என்ற சமாதானத்தோடு இவள் எடுத்து வந்திருந்த அந்த மொபைல் தான்…..

ஏதோ நம்பர். யாரா இருக்கும்? எடுத்து காதில் வைத்தாள்.

“கிளம்பிட்டியா…?” ஜோனத்தான். இத்தனைக்குப் பிறகும் இவள் கிளம்பி இருக்க மாட்டாள் என என்ன ஒரு நம்பிக்கை இவள் மேல்…. ஆனாலும் அவன் குரல் கேட்கவும் அடி மனதில் இது என்ன உணர்வு?? பாலை நிலத்தில் பாதை மாறி வந்து விழுந்த பாலாறு போல்.

“ம்…அரண் சார் வீட்ல இருந்து கிளம்பிட்டேன்…..இப்ப அந்த செவிட்டு அனவரதனுக்கு ரிப்போர்ட் செய்ய போய்ட்டு இருக்கேன்….” இயல்பாய் இருப்பதாய் காண்பித்துக் கொள்ள முயன்றாள்.

கண்ணில் இருந்து ஏன் கண்ணீர் வழிகிறது? இந்த கால் முடியாமல் அப்படியே கன்டின்யூ ஆகாதா என ஏன் தோன்றுகிறது?

“தென் ஓகே…” என்று கால் முடிவுக்கு வருகிறது என்ற வெறுமை உணர்வை இவளுக்குள் கொணர்ந்தவன்

“ பைதவே இந்த விஷயமா என்ன ப்ரச்சனைனாலும் நீ என்னை போன்ல காண்டாக்ட் செய்……ஆனா அம்மாவ பார்க்க மட்டும் வந்து நின்னுடாத….”

இவளுக்கு பதில் சொல்லும் வாய்ப்பை கூட தராமல் கால் கட்.

இன்னும் கூட இவ திரும்பி வந்து நிப்பாளோன்னு இவனுக்கு பயம் இருக்கு போல…. பஸ் வரவும் அதில் ஏறிக் கொண்டாள்.  ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து ஆட்டோவுக்கு மாறி அனவரதன் அலுவலகம் நெருங்கும் நேரம் அங்கு போய் என்ன பேச வேண்டும் என்ற ஆராய்ச்சி….

அவரை சந்திக்க. இவள் செல்லும் போது அவர் அலுவலகத்தில் இல்லை. அப்புறமும் வந்தவுடன் இம்பார்ட்டன்ட் மீட்டிங் என்றனர்.

ஏறத்தாழ இவளை சந்திக்க அவர் அப்பாய்ண்ட்மென்ட் கொடுத்த போது இருட்ட தொடங்கி இருந்தது. அதாவது முழு பகலும் அவருக்காக காத்திருந்திருக்கிறாள். எதுவும் அட்வான்ஸ் கேட்டு வந்திருப்பாள் என்ற எண்ணம் அனவரதனுக்கு.

“இப்பவே எதுக்கு வந்த…?”

“என்னை வீட்டை விட்டு துரத்திட்டாங்க……சொல்லாம போனா வருத்தப் படுவீங்கன்னு வந்தேன்…. பேப்பர் கொடுத்தீங்கன்னா ரிப்போர்ட் எழுதி கொடுத்துடுவேன்….லஅப்டாப்னா ஐ’ல் டைப்…”

“இல்ல சொல்லு….”

“ஆன் ஒன் கண்டிஷன் பேசி முடிக்ற வரை இடையில பேசக் கூடாது…..” சொல்லிக் கொண்டே டேபிள் மேல் இருந்த பேப்பர் வெயிட் உட்பட சில சாமான்களை எடுத்து ஒரு கவருக்குள் போட்டு தனியே வைத்தாள். தூக்கி அடிச்சுடார்னா?

அனவரதன் ஒரு வகை இறுக்கத்துடன் அதை பார்த்திருந்தார். கண்டிப்பா வீட்ல நடந்த நிறைய விஷயம் இவளுக்கு தெரிஞ்சிருக்கு…..

அரண் சொன்ன அரண் சுகவிதா சம்பவங்களை அப்படியே அவரிடம் சொன்னாள் சங்கல்யா.

“ஆக உன்னையும் ஏமாத்திட்டாங்க…..?” அனவரதன் தான்.

“ஃபார் வாட்?”

“அதான் இப்படி வந்து என்ட்ட சாட்சி சொல்ல…..”

“இந்த விஷயத்தை அரண் அண்ணா எப்ப என்ட்ட சொன்னாங்க தெரியுமா…? “  ஜோனத்துடனான எங்கேஜ்மென்டிலிருந்து, அனவரதன் சொன்னது, இவள் கோபத்தில் செய்த வேலை…பீச் இன்சிடென்ட்….போலீஸ் பயம்,  கத்தி வெட்டு, அரண்  சொன்ன காரணம் என எல்லாவற்றையும்  சொன்னாள். “இதுல நீங்க எங்க வர்றீங்க?”

“எப்டியும் ஒரு நாள் நீ என்ட்ட வந்து சொல்லனும்னு ஆப்பர்சூனிடிய யூஸ் செய்து உன்னை பொய் சொல்லி இம்ப்ரெஸ் செய்திருப்பான் அந்த அரண்…” அமைதியாய் அழுத்தமாய் அனவரதன்.

“அப்டி உங்களை நம்ப வைக்றதுல அவங்களுக்கு என்ன லாபம்…?…நீங்க தான் அவங்க எனிமி ஆச்சே…..நீங்க தனியா கிடந்து அழுதுகிட்டு கிடந்தா தானே அவங்களுக்கு சந்தோஷம்….”

“அவன் இத வச்சு செய்றதுக்குன்னு இன்னும் எதாவது ப்ளான் வச்சிருப்பான்…கன்னிங் ஃபெல்லோ…”

அவ்வளவுதான் சங்குவின் பொறுமை சாட் பூட் த்ரீ….ஓடி ஒளிஞ்சுகிட்டு.

“என்ன நானும்தான் பார்த்துகிட்டே இருக்கேன்…ஒரு அளவே இல்லாம முட்டாள்தனமா உளறிகிட்டே இருக்கீங்க….நம்பவே மாட்டேன்னு முடிவுல இருக்றவர் எதுக்கு என்னை அங்க அனுப்பி வைக்கனும்? அதுவும் கன்னா பின்னானு மிரட்டி…..?

நானும் தான் கேட்கேன் பொறாமை பட்டு உங்க மக கேரியரை காலி செய்யன்னே கல்யாணம் செய்த அரண், சுகா கரியரை காலி செய்து கன்சீவாக்கி உங்க வீட்ல வந்து வீசிட்டுப் போய்ட்டு

…..அப்றமா ஆள்  வச்சு சீக்ரெட்டா உங்க பொண்ணை போட்டுத் தள்றதை விட்டுட்டு, தான் செத்தா கூட பிரவாயில்லைனு தானே வந்து ஆக்சிடெண்ட் செய்து….அதுவும் தன் 7 நாள் குழந்தை உள்ள இருக்றப்ப அடிச்சுட்டு…..6 மாசமா கோமால விழுந்து , திரும்ப  எந்திரிச்சு வந்த உடனே  உங்க பொண்ண எதுக்கு திரும்பியும் கூட்டிட்டுப் போய்ட்டாராம்….??? மூளைனு ஒன்னு இருந்தா உங்களுக்கு இதெல்லாம் புரியும்….”

அடுத்த பக்கம்