நனைகின்றது நதியின் கரை 14 (2)

“என்னாச்சு லியா? எதாவது பெரிய இஷ்யூவா?…எதுனாலும் சொல்லு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்…”

அவன் உண்மையாய் சொல்கிறான் என இவளுக்கும் தெரியும் தான்…. அது அவனது குணம். ஆக அரண்  இந்த சூழ்நிலையில் இவள் டைரியை திருடி விற்க முயன்றதை ஜோனத்திடம் சொல்லி இருக்க மாட்டான். அப்படியானால் அவனுக்கு அதை சொன்னது யார்…?

அதை அரண் ஜோனத்திடம் சொல்லாமல் மறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் இவளுக்கு இல்லைதான்….ஆனால் ஏற்கனவே தன் அம்மா குறித்த மனவேதனையில் இருப்பவனிடம் இதை யார் ஏன் இப்பொழுது சொல்ல வேண்டும்?

சட்டென நினைவில் வருகிறது பாம்ப்ப்ளாஸ்ட்…. அரண் ஜோனத் இவர்களை சுற்றி சதி வலை பின்னப்படுகிறதோ?

“அண்ணா அந்த பாம்ப்ளாஸ்ட்…அது யார் வேலைனு….?” கேட்க ஆரம்பிக்கவும் தான் ஞாபகம் வருகிறது…..இவட்ட இதை சொல்வானாமா?….

“தெரியலை லியா…இன்னும் ஒரு லீடும் கிடைக்கலை….. “ அவன் எந்த சிந்தனையும் இன்றி சொன்னான்.

“அவங்க டார்கட் ப்ராபர்டி டிஸ்ட்ரக்க்ஷன் தான்…..அப்பா அன் எக்‌ஸ்பெக்ட்டடா உள்ள போய்ட்டாங்க போல….ஃபினான்ஸியல் லாஸ்தான் ஹெவி….நல்ல விஷயம் என்னன்னா நோ டெத் டோல்…. அவங்க அதை எய்ம் பண்ணவே இல்லை….இன்ஃபாக்ட் அவாய்ட் பண்ண பக்காவா ப்ளான் செய்திருக்காங்க….”

“ஓ…” அப்டின்னா செய்தவங்க இன்டென்ஷன் என்ன? இவள் மனம் இப்படி ஓட

“இதையெல்லாமா இப்ப நினச்சு குழம்பிகிட்டு இருக்க….நீ முதல்ல வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு… யூ வில் ஃபீல் பெட்டர்….ஹாஸ்பிட்டலையே பார்த்துகிட்டு இருந்தா பாஸிடிவான எதுவும் ஞாபகம் வராது….ஆன்டிக்கு ஒன்னும் ஆகாது….நைட் முழுக்க நீ தூங்கலை….”

அவன் அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டு இருப்பதை திரும்பவுமாக சொல்ல எளிதாக ஒத்துக் கொண்டாள் இம்முறை.

கிளம்பனும். ஜோனத் வர்றதுக்கு முன்னால இங்க இருந்து போய்டனும்.

ஜோனத், அரண், சுகவிதா……இத்தனை காலம் வெறும் காட்சிப் பொருட்களாய் தெரிந்தவர்கள், இன்று மனமும் உணர்வும் உள்ள மனிதர்களாய், இவள் மனதிற்கு நெருங்கியவர்களாய்…. சொல்லப்போனால் சொந்தங்களாய் தெரிய…… மீண்டும் செலிப்ரெடிகளாய் மட்டுமே இனி இவள் அவர்களை பார்க்க வேண்டிய நிலைக்கு போயாக வேண்டும்…..

திரும்ப இவங்க யாரையும் பார்க்க முடியாது… என்ற நினைவு மூச்சடைக்க நெருஞ்சி முள்ளாய் நெஞ்சம். நிறைந்திருக்கும் போது இலவம் பஞ்சாய் எடையற்று இருப்பதும்…..இழப்பின் வெறுமையில் கிலோ கிலோவாய் கணப்பதும் இது என்ன வினோத இதயம்….???

வர மறுத்த மனதை தர தர என இழுத்துக் கொண்டு, அரணிடம்  விடை பெற்று அவனது வீட்டிற்கு சென்றாள்.

அரணுக்கு ஆபத்தோ? ஜோனத்தையும் அரணையும் பிரிக்க பார்காங்களோ? இவ விஷயத்தை ஜோனத்ட்ட சொன்னது யாரு?? இந்த சிந்தனை அடி மனதில் ஓட…..பிரிவு துயர் பெருமளவில் ஆட்டிப் படைக்க தனக்கான அறைக்கு சென்று, குளியலோடு ஒரு அழுகை.

பாட்டி இறந்த பொழுதும் இப்படித்தான் இருந்தது. அதன் பின் சமாளிக்க வில்லையா…. சரியாகிவிடும் மனம் பின்னொரு நாளில். சமாதனாம் செய்து கொண்டாள் தன்னுள்.

தான் வந்த அன்று போட்டிருந்த சல்வாருக்கு மாறிக் கொண்டாள்.

பின் அவளுக்கு கொடுக்கப் பட்டிருந்த அனைத்தையும் ஒழுங்கும் கிரமுமாய் அடுக்கி வைத்தாள். இப்பொழுது கிளம்பி ஆக வேண்டும்.

ஜோனத்திடம் தான் அரண் டைரியை ஏன் எடுத்தேன்…அதற்காக எப்படி இப்பொழுது மனம் வருந்துகிறேன் என இவள் சொல்லாமலே சென்றாக வேண்டுமே. ஆக அதை ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டுப் போகும் எண்ணத்தில் ஹாஸ்பிட்டலில் இருந்து வரும்போதே ஏதோ ஒரு பில்லோ அல்லது பழைய ப்ரெஸ்க்ரிப்ஷனோ எதையோ எடுத்து வந்திருந்தாள். அதன் பின் பக்கம் எழுத வெற்று இடம்.

இவளை வீட்டில் விட வந்த கார் ட்ரைவரிடம்

“ ஒரு பென் கிடைக்குமா…கொஞ்சம் அவசரமா வேணும்….” ஆக பென்னும் இவள் வசம்.

ரத்தின சுருக்கமாக அதை எழுதி நிச்சயத்திற்கென இவளுக்கு கொடுக்கப்பட்ட நகைகள் அடங்கிய ஜ்வெல் பாக்சிற்கு மேல் வைத்து விட்டு கிளம்பினாள்.

அறையை விட்டு வீட்டு வாசலை நோக்கி இவள் செல்ல எங்கிருந்தோ விழுகிறது சுகவிதாவின் சத்தம் “அப்பா ப்ளீஸ் சொன்னா கேளுங்க….இன்னேரம் ஆன்டியப் பார்க்க நீங்க ஹாஸ்பிட்டல் வந்துருக்கனும்…. ”

ஏற்கனவே ஜோனத்தின் நிம்மதி என்ற ஒரே காரணத்திற்காக கிளம்பினாலும் இந்த பாம்ப்ளாஸ்ட் இத்யாதியில் இவள் அரணுக்கு எதையோ அரை குறையாய்…செய்ய முடிந்த உதவியை……செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் போவதாய் ஒரு குறுகுறுப்பு.

இந்த சத்தத்தில் அதே போல் அவள் இன்னுமொன்றை  அரைகுறையாய்  விட்டுச் செல்கிறாள் என தோன்றிவிட்டது.

ஜோனத் கூட சொன்னானே அனவரதன் அங்கிள்ட்ட ரிப்போர்ட் செய்துடுன்னு…..

இந்த நேரத்தில் அனவரதன் தன் ஆஃபீஸில் தான் இருப்பார். சொல்றதே சொல்றோம் செவிட்ல அறஞ்ச மாதிரி சொல்லனும்…. அப்பதான் இந்த மாதிரி ஆள்களுக்கு காது கேட்கும்.

அடுத்த பக்கம்