நனைகின்றது நதியின் கரை 13(7)

6 மாதத்திற்கு பிறகு ஒரு நாள் கண் திறந்து பார்த்த போது எது என்னவென்றே முதலில் புரியவில்லை அரணுக்கு.

மெல்ல மெல்ல விஷயம் புரியும் போதே முதலில் மனதில் வருவது விதுவும் அவனது பால்குட்டியும் தான். அவசரப் பட்டுவிட்டான். விதுவை எந்த காரணத்திற்காகவும் அவளது அம்மா வீட்டில் தனியாக விட்டிறுக்க கூடாது…..இவன் தப்புதான் எல்லாம் இவன் தப்புத்தான்….

எதிரிலிருந்த அப்பாவின் கண்ணீரைப் பார்க்கவும் தான் தனக்கு உடல்நிலை சரி இல்லை என்பதே உறைக்கிறது அவனுக்கு…

விதுவையும் பால்குட்டியையும் பார்க்க மனம் தவிக்கிறது. அவளுக்கு அம்னீசியா என்றவுடன் அரண்டு போனான். யார் இவனது விதுவை இவனுக்கு தரப் போகிறார்களாம்? ஆக சூழ்நிலையை விசாரித்து,

அவனுக்கு எழுந்து நடமாட முடிந்தவுடன் விதுவையும் அவன் வாரிசையும் வாரிக் கொண்டு வந்துவிட்டான். அவனுக்கு விபரம் தெரிந்து அப்பா ப்ரபு யாரிடமும்  சொல்லாமல் அவன் செய்த ஒரே காரியம் இதுதான்.

அவன் ஹெல்த் கண்டிஷனை காரணமாய் சொல்லி காத்திருக்க சொல்வார்கள் என்ற மனநிலை காரணம்.

“சுகவியும் ஹயா செல்லமும் கைல வந்த பிறகுதான் எனக்கு உயிர் வந்த மாதிரி இருக்குது…..ஆனா அவளுக்கு இன்னும் அம்னீஷியா சரி ஆகலை இல்லையா….எங்களோட பழைய சண்டை மட்டும் தான் நியாபகம் வருதாம்….அதான் அப்ப நீ பார்க்றப்ப அவ அப்டி ரியாக்ட் செய்துட்டு இருந்தா….ஆனா இப்ப வி ஆர் ஃபைன்…”

அரண்  சொல்லிக் கொண்டு போக அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தாள் சங்கல்யா. அந்த அமைதி எல்லாம் வெளிப் பார்வைக்குத்தான். உள்ளுக்குள் ஆயிரம் அலை பிறழ்வு….

நிச்சயமாய் இந்த மூவரின் உறவுநிலையும் அவளுக்கு பிடித்திருக்கிறது. என்ன ஒரு லைஃப் அவங்களது என்றுதான் நினைக்க தோன்றுகிறது…. அரண் மேல் ஆழ்ந்த மரியாதையும் அவனிடம் ஒரு இனம் புரியாத பாதுகாப்பு உணர்வும் வருகிறது என்றால்…

ஜோனத் மேல் ஏற்கனவே இருக்கும் அந்த ஏதோ ஒன்று இன்னும் அதிகமாய்….அவனுடைய கோபத்திலிருந்து எல்லாவற்றையும் பிடிக்கிறது…..அரணை காலரைப் பிடித்து அவன் கத்திய காட்சியும்….ஹயாவை மடியில் வைத்து பால் புகட்ட முனைந்த காட்சியும்….அவனை இன்னுமாய் ரசிக்கத் தோன்றுகிறது….. ஹி டிபென்ட்ஸ் ஹிஸ் பீபுள் இவள மாதிரியே என்ற ஒரு தாட் வேறு….

ஆனால் எதோ ஒரு ஓரத்தில் நிச்சயமாய்  ஓர் ஆழ அடி முடியற்ற பயம்ம்ம்ம்ம்……

அந்த பன்னீர் செல்வம் என்னல்லாம் சொல்லி இவ அம்மாவ ஏமாத்தினானோ? இது மாதிரிதான் இருந்திருக்குமோ அந்த கதை

“சின்ன வயசில இருந்து ப்ரபு சுகவி ரிலேஷன்ஷிப்பை பார்த்து வளர்ந்தவன் நான்…. எனக்கு சிம்பிலிங்கும் கிடையாதா….எப்டியோ மனசுல ப்ரபுவோட வைஃப்தான் என் சிஸ்னு ஒரு தாட் செட்டாயிட்டு…..”

விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் சங்கல்யா. அவளுக்குள் ஒரு ஆசிட் புரிதல்… அரண்ட்ட ஜோனத் எதையும் மறச்சிருக்க மாட்டான்…..இப்போ இவ இங்க எதுக்கு வந்திருக்கான்னு கூட அரணுக்கு தெரியும்….. அப்டின்னா?

“திடீர்னு இப்ப இந்த ஏஜ்ல மீட் பண்ணிட்டு சுகவியும் ப்ரபுவும் பழகிற மாதிரிலாம் நாம பழக முடியாதுதான்…..பட் என் மனசுல உனக்கு என்ன ப்ளேஸ்னு சொல்லி வைக்கிறேன்….” அரண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் மொபைல் சிணுங்குகிறது.

இணைப்பை ஏற்றான்…

“ஹேய்…வாட்….????!!!!!.….இப்பவே வர்றேன்….டேக் கேர் ஆஃப் ஹெர்….” அவன் ஃபோன் பேசிய விதத்திலேயே விஷயம் விபரீதம் எனப் புரிய

“அன்பரசி ஆன்டிக்கு…ப்ரபு அம்மாவுக்கு ஷெஸ்ட் பெய்னாம்….ஹஸ்பிட்டல்ல அட்மிட் செய்திருக்காங்க…. “ அரணின் விளக்கத்தில் நடுங்கிப் போனாள் சங்கல்யா.

“ஐயோ…அண்ணா எனக்கு பயமா இருக்கே…இப்பவே கொண்டு போய் விடுங்களேன்….நான் யார்ட்டயும் எதுவும் பேச மாட்டேன்….எதையும் லீக் அவ்ட் செய்ய மாட்டேன்….போகாதன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்….” கெஞ்சினாள் இவள்.

எப்பவும் இவளுக்கு அன்பரசி அம்மாவை ரொம்பவேப் பிடிக்கும்…. இப்ப அது ஜோனத்தோட அம்மான்றப்ப……அதுவும் அவன் ஊர்ல வேற இல்லன்றப்ப….

அரண் இவளை ஒரு பார்வை பார்த்தான்.

“நீ வராமலா லியா?” அவன் கேட்ட விதமே தன் கேள்வி தப்போ என இவளை நினைக்க வைக்க அவசர அவசரமாக தேவை என்று நினைப்பவைகளை எடுத்துக் கொண்டு அரணுடன் இவள் கார் ஏறிய நேரம் அவனுக்கு அடுத்த அழைப்பு…. அவர்களது சிமெண்ட் ஃபேக்டரியிலிருந்து

“சார் நம்ம ஃபேக்டரில பாம் ப்ளாஸ்ட்…..அப்பா உள்ள இருக்காங்க…..அ…….அவங்கள பத்தி எந்த நியூஸும் இல்லை…. “

அடுத்த ஐந்தாம் நிமிடம் அரண் ஃபாக்டரியைப் பார்த்தும் சங்கல்யா ஹாஸ்பிட்டலைப் பார்த்தும் பறந்து கொண்டிருந்தனர்…..இரண்டு பேர் மனநிலையும் எப்படி இருந்தது என சொல்லத் தேவையில்லை…..

அடுத்த பக்கம்