நனைகின்றது நதியின் கரை 13(5)

அவளது அப்பா வீட்டுக் கார்….நேரே தன் வீட்டிற்குப் போனால் இந்த காரை திருடிக் கொண்டு போனதாய் நாளை அப்பா சொன்னாலும் சொல்லுவார்…..போலீஸ் கேஸாக்கினாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை. ஏற்கனவே கொதித்துக் கொண்டிருக்கும் இவள் மனம்….தன்னவனுக்கு அழைத்தாள்.

“என்னடா விது குட்டி இந்த நேரத்துல….?”

“அப்பா என்னையும் உங்களையும் ரொம்ப திட்றாங்க ஜீவா…நான் சாப்டுட்டு இருந்த தட்டை எடுத்து என் முகத்துல….” அழுகை அதுவாக வருகிறது உரிமையுள்ளவன் குரல் கேட்கவும்.

“பீச் போய்ட்டு இருக்கேன்……ஹயா குட்டி என்ட்டதான் இருக்கா….வந்து எங்கள கூட்டிட்டுப் போங்கப்பா….” பீச்சில் காரை விட்டுவிட்டு அப்பா வீட்டு ட்ரைவரை வந்து எடுத்து போக சொல்ல வேண்டும் என்பது அவள் ப்ளான்.

அவள் குரலில் தெரிந்த கோபம் + அழுகை…அதோடு அவள் ட்ரைவ் செய்கிறாள் என்றவுடன் ரொம்ப துருவாமல் அவள் சொன்ன இடத்திற்கு விரைந்தான் அரண்.

சுகவிதாவைப் பொறுத்த வரையில் பீச் என்றால் அது ஈசிஆர் தான். முன்பு மாதிரி சவுக்கு தோப்பிற்கெல்லாம் போகவில்லை. ஆட்கள் ஓரளவு வந்து போகும் ஒரு இடத்தில் தான் கடல் ஓரத்தில் சென்று காரை நிறுத்தினாள்.

அடித்த வெயிலில் காரைவிட்டு இறங்கவும் மனமில்லை. பேபி கார் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள் மகள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை இவளைத் தவிர இன்னும் இரண்டு கார். நாலைந்து தலைகள். இந்த வெயில்ல இந்த பீச்சுக்கு இதுக்கு மேல யாராவது வந்தால்தான் அதிசயம்…

அரணுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

ற்று நேரத்தில் ஒரு ஆடி Q7 . ஐந்தாறு தடி மாடுகள்….கையில் பீர் முதல் வோட்கா வரை…. அவர்கள் காரை சுற்றி கத்தி ஆர்பாட்டம் செய்து களியாடிக் கொண்டிருந்த க்ரூப், எப்பொழுது எப்படி இவளை கவனித்தனர் என தெரியவில்லை….

“கார்ல சுகவிதாடா….”

“டேய் இருக்காதுடா…இப்பதான் ஹாஸ்பிட்டல்ல இருக்கான்னு சொல்லிகிட்டாங்க…”

“பெட் டுடா…அது சுகவிதா தான்…”

“சரி போய் பாத்றுவோம்…”

வின்டோஸ் க்லோஸ் செய்து ஏசி ஓடிக் கொண்டிருக்கிறது இவளது காரில்….இது எதுவும் அவள் காதுக்கு கேட்கவில்லை….

ஆனால் அந்த கோஷ்டி இவளைப் பார்த்து வர ஆரம்பிக்கவும் இவளுக்கு வயிற்றுக்குள் ஏதோ விங்ஸ் விரிச்சு பறக்குது.

அந்த நேரம் அரணின் அழைப்பு. அவசரமாக எடுக்கிறாள்.

“எங்கடா இருக்க…..? நான் அல்மோஸ்ட் ரீச்ட்…”

இதற்குள் அந்த கும்பலில் ஒருவன் இவள் பக்க கண்ணாடியில் ஓங்கி ஒரு உதை….உள்ள போயிருந்த எந்த டிரிங்கோட வேலையோ அது….

“ ஏய் வெளிய வா நீ..” உதைத்தவன் சொன்னதெல்லாம் இவள் காதில் கேட்கவில்லை.

உதைத்துவிட்டு ஏதோ உளறுகிறான். கூடவே ஒரு கோஷ்டி.

“ஜீவா இங்க யாரோ  ட்ரங்கட்ஸ் காரை அடிக்காங்க….எனக்கு பயமா இருக்கு…”

சொன்னவள் சட்டென காரை கிளப்பி யூ டர்ன் அடித்து பீச்சை விட்டு வெளியே போகும் சாலையில் பறந்தாள்….

நிச்சயம் அந்த கேங்க் இதை எதிர் பார்க்கவில்லை…..அதுகளும் தங்கள் காரில் ஏறி இவள் செய்ததை செய்தது….இவளை துரத்தியது…….

சுகவிதாவைப் பிடித்திருந்தது பயம்…. பின்னால் துரத்துகிறவர்களைப் பார்த்துக் கொண்டே கிளைச்சாலையிலிருந்து முன்னாலிருந்து ஈசிஆர் ரோட்டில் சென்று ஏறினாள் சுகவிதா 180Km/hrs ஸ்பீடில்…நோ ஹார்ன்….நோ இன்டிகேட்டர்….டென்ஷன் காரணம்.

அதே நேரம் சீறிப் பாய்ந்து கிளைச்சாலைக்குள் திரும்பியது அந்த மெகா சைஸ் எஸ் யூ வி. படு ஸ்பீட். ஹார்ன் இன்டிகேட்டர் எல்லாம் உண்டுதான். ஆனால் சுகவிதா கவனிக்கவே இல்லை. சிறு அவகாசம் கூட கொடுக்காமல் சென்று நேருக்கு நேராய் அதனுடன் ஒரு டஅஷ்…..மோதல். அடுத்து நடந்தது என்னவென்று சுகவிதாவுக்கு தெரியாது…. உபயம் பின் மண்டையில் விழுந்த அடி.

ஆனால் அரணுக்கோ ஒன்றை நினைத்து முடிக்கும் வரைக்கும் சுயநினைவு இருந்தது…

‘கடவுளே விதுவும் என் பால்குட்டியும்…..”  ஆம் பயந்து ஓடிவந்த சுகவிதாவின் காரும் அவளுக்காய் பாய்ந்து வந்த அரணின் காரும் தான் நேருக்கு நேராய் மோதி இருந்தது. இதில் அரண் காருக்கு பின்னால் வந்த ட்ரக் வேறு அவன்காரை பின்புறமாய் பதம் பார்த்தது.

அடுத்த பக்கம்