நனைகின்றது நதியின் கரை 13 (4)

ஆக முதலில் இரண்டு கத்து கத்திப் பார்த்தவர் மகள் எதுவும் சொல்லாமல் கண்ணில் தண்ணீர் மட்டும் காட்டவும் கடந்த காலத்தைப் பற்றி பேசுவதை சுத்தமாக கைவிட்டார்.

ஆனால் புஷ்பத்திற்கு விஷயம் என்னதாய் இருக்கும் என புரிகிறதுதான். ஆக நிம்மதியுடனே மகளைப் பார்த்துக் கொண்டார். அரண் மேல் இன்னுமாய் நம்பிக்கைதான் அதிகமாகியது மாமியாருக்கு. அவர் ஹஸ்பண்ட் போல் ஈகோ பார்க்காமல் சுகவிக்காக இவ்ளவு இறங்கி வருவதென்றால்…???

எது எப்படியோ அந்த மாதம் சுகவிதா உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருந்தாள் தான். எதையும் குத்தி கிழிக்காமல் அன்பாய் நடந்து கொள்ளும் அப்பா….அப்பா இல்லாத நேரத்தில் இவள் ஜீவாவை ஆயிரம் விதமாய் இவளிடம் புகழ்ந்து கொண்டே இவளை கேர் எடுக்கும் அம்மா….நைட் சீக்ரட்டா முன்னால மாதிரி ஜீவா கூட சாட்டிங்…..

ஹெல்த் கொஞ்சம் இம்ப்ரூவாகி….பிபியும் படிந்து வந்தது. எதிர்பாராத விதமாக ட்யூ டேட்டிற்கு ஒருவாரம் முன்னதாக லேபர் பெய்ன்…..சுகவி லேபர் ரூமிற்குள் செல்லும் போது அரணும் அங்கு இருந்தான்.

ஹயா குட்டி கையில் வந்தாள். சுகப்ரசவம் தான். அரண் கண்ணில் கண்ணீர் கட்டி சுகவி பார்த்த ஒரே நிகழ்வு அதுதான். அத்தனை தவிப்பும் அது முடியவும் வரும் அத்தனை சந்தோஷமுமாய் அவன்…

னவரதனுக்கு அரண் லேபர் ரூமில் இருந்தது தெரியாது. ஆனால் புஷ்பத்திற்கு தெரியும்.  அனவரதனுக்கு தெரியாமல் மருமகனைப் பார்த்து அவர் பேசிய ஒரே தருணம அது….. ஆனால் அது அத்தனை பெரிய இழப்புகளை கொண்டு வரும் என தெரிந்திருந்தால் அவர் அப்படி செய்திருக்கவே மாட்டார் ஃபார் ஷ்யூர்….

“சுகிக்கி நார்மல் டெலிவரினாலும்….ஒரு டூ வீக்‌ஸாவது, அவளே அவளையும் குழந்தையையும் பார்த்துகிடுற அளவுக்கு வர்ற வரைக்கும் எங்க வீட்ல இருக்கட்டுமேங்க…. ப்ளீஸ் அங்க உங்க அம்மா இருந்தா கூட அனுப்பிடுவேன்….எனக்கும் ஒரு ரெண்டு வாரமாவது சுகியையும் பேத்தியையும் பார்த்த மாதிரி இருக்கும்….உங்க மாமா எப்ப இனி பிள்ளைங்கள பார்க்க விடுவாங்களோ?”

கடைசி வரியில் கண்ணில் நீர் கோர்க மன்றாடும் தன் அம்மா ஸ்தானத்தில் இருப்பவரிடம் எப்படி இல்லை என்று சொல்வதாம்….என்ன அவன் விதுவும் பால் குட்டியும் கைக்குள் வர இன்னும் ரெண்டு வாரம் ஆகும்…..கடந்த நான்கு வார நரகத்தை 14 டேஸ் எக்‌ஸ்டென்ட் செய்திருக்குதுனு நினச்சுக்க வேண்டியது தான்…

“உங்க இஷ்டம் ஆன்டி….ஆனா அப்பா பால்குட்டிய பார்க்க ஆசைப் படுவாங்க…எப்டியாவது ஹாஸ்பிட்டல்ல வச்சு அவள எடுத்துட்டுப் போய் காமிச்சுடுங்க….”

ஆக ரெண்டு வாரத்திற்கென சுகவியை அவள் அம்மாவிடம் விட்டுவிட்டு வந்தான் அரண். வெத்து வீட்டில் வரப்போற மனைவி மகளுக்காய் கத்திருந்தான். துணைக்கு அவனது அப்பா.

சுகவிக்கு சுகப்ரசவம் என்பதால் சுகபலமெல்லாம் வேகமாக ரிக்கவர் ஆகி வந்ததுதான். ஆனால் அவளால் தாங்க முடியாதது வேறு இம்சை….வேற என்ன அவ அப்பாதான்.

அரண் க்ரூப்ஸில் ஹயா பிறந்த அன்று  ஸ்வீட் டிஸ்ட்ரிப்யூஷன் மறுநாள் ஹாலிடே என்ற தகவல்  ஏதேச்சையாய் சந்தித்த ஒரு நண்பர் மூலம் அனவரதனுக்கு கிடைக்க அவர் திரியேகனையும் அதோடு சேர்த்து அரணையும் கழுவி காயப் போட ஆரம்பித்தார்.

“பிள்ள வேண்டாம்…அந்த பிள்ளையோட அம்மாவும் வேண்டாம்….ஆனா பந்தா பண்ண உலகத்தை ஏமாத்த ஸ்வீட்டும் லீவுமா செலிப்ரேஷன் மட்டும் வேணுமாம்….” என ஆரம்பித்த அர்ச்சனை அடுத்த அடுத்த நிலைகளை பார்த்து  போய்க்கொண்டு இருந்தது.

டெலிவரி வரை மகள் இருந்த நிலைக்கு அவள் முன்நிலையில் அரண் சம்பந்தபட்ட எதையும் பேச மனமின்றி இருந்தவர் இப்பொழுது மகள் சுக பத்திரம் உறுதிப் படவும் அவள் புகுந்த வீட்டை காய்ச்சி எடுத்தார். கூடவே மகளின் முட்டாள் தனங்களையும் தான்.

என்னதான் அம்மா விழுந்து விழுந்து பார்த்துக் கொண்டாலும்……குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஃபீட் பண்றதுக்காகவாவது அவள் விழித்து இருக்க வேண்டியதாகிறதுதானே….

தூக்கம் இல்லா நாட்களும்….அப்பொழுதுதான் ப்ரசவமாகி இருந்த பச்சை உடம்புமாய்….இந்த அர்ச்சனை சுகவிதாவுக்கு தாங்க கஷ்டமான ஒன்றாய் இருந்தது. ஆனாலும் மௌனமாய் தாங்கிப் போனாள். அவள் அப்பா அவளுக்காக எத்தனை தாங்கி இருப்பார் இதுவரை…

ரு வாரம் முடிந்திருந்தது அன்று.  எப்ப வீட்டுக்கு போவோம்ங்கிற மூடுக்கு அவள் வந்திருந்தாள். காரணம் யார் என்று சொல்ல தேவையில்லை. அன்று அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். எதிரில் அவளது அப்பாவும் அதைத்தான் செய்து கொண்டிருந்தார். அதோடு அஸ்யூஸ்வல் அர்ச்சனை அரணுக்கும் திரியேகனுக்கும் அவர்களிடம் ஏமாந்த இவளுக்கும்.

அவளது வெட்டிங் டே பத்தி பேச்சு. வாயில் வந்ததையெல்லாம் சொல்லி திட்டிக் கொண்டிருந்தவர் மகள் எதற்கும் எதையும் சொல்லாமல் சாப்பிடவும் இருந்த எரிச்சலில் அவள் சாப்பாட்டுத் தட்டை தூக்கி அவள் முகத்தில் எறிந்துவிட்டு…..

“அவன்ட்ட போய் ஏமாந்துட்டு வந்து நிக்கியே…..எல்லாத்தையும் முடிச்சுட்டு எச்சு இலையா உன்னை தூக்கிப் போட்டுட்டு போற அளவுக்கு அவனுக்கு புத்திசாலித்தனம் இருக்கு….ஆனா அத்தனயும் ஏமாந்துட்டு அடுத்த வேளை சோத்துக்கு என் கைய பார்த்து வந்து நிக்ற அளவுக்கு உன் மூளை இருக்கு….” கத்தினார்.

இருந்த மனநிலையில் முகத்தை கழுவிவிட்டு எதுவும் நடவாதது போல், அடுத்த தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடும் பொறுமை எல்லாம் அவளுக்கும் இல்லை.

வந்த கோபத்தில் “ அரண் புத்திசாலின்னா அது அவர் அவங்க அப்பா மாதிரி….நான் இங்க வந்து நிக்கேன்னா என் மூளை உங்கள மாதிரி…” கத்தியவள் கடகடவென உள்ளே போனாள்.  இரண்டு நிமிடத்தில் மகளுடன் வீட்டில் நின்ற  காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

கோபம்.

அப்படியே அவள் தன் வீட்டைப் பார்த்து போயிருந்தால் கூட பெரிதாக எதுவும் நேர்ந்திருக்காதோ என்னவோ?

அடுத்த பக்கம்