நனைகின்றது நதியின் கரை 13(2)

அதுவே இல்லை என்பவளை கட்டாயப் படுத்துவது எவ்வளவு கொடுமையான அனுபவம் மேலும் ஃப்ரூட்லெஸ் ஒன் என அவனுக்கு புரியத்தான் செய்கிறது. ஆனால் டென்னிஸ் ராஜ்யத்தின் மகராணியாய் நின்று கொண்டிருப்பவளை திருமணம் என்ற பெயரில் பதவி இறக்குவது எப்படியாம்? அதுவும் அவள் முன்பு எதற்காக செய்தாளோ ஆனால் செய்த கடும் உழைப்புகளும் தியாங்களும் உண்மையல்லவா?

ஆக அந்த பாஷனை… டென்னிஸ் மேல் ஒரு பிடிப்பை ஏற்படுத்த எவ்வளவோ பேசிப் பார்த்தான்.

“எனக்கு கரியர்னு ஒன்னு இருக்கனும்னா அது ஏன் என் அப்பாவுக்கு பிடிச்ச டென்னிஸா இருக்கனும்….இனிமேலாவது என் லைஃபை நான் வாழக் கூடாதா? சரி முன்னால என் அப்பாவுக்காக விளையாடின மாதிரி இனி உங்களுக்காக விளையாடுறேன்…” அவள் இந்த கோணத்தில் நிகழ்வைப் பார்க்கவும் கிளம்பிப் போய் அவளை கூட்டி வந்துவிட்டான்.

“இது ஒரு ப்ரேக்கா இருக்கட்டும்….உனக்கு திரும்ப விளையாட தோணுறப்ப விளையாடு “ என சொல்லி ஒரு வழியாய்  ரிடெயர்மென்ட் என்ற முடிவை அவளை தள்ளிப் போட வைத்திருந்தான்.

மீண்டும் சுகவிதா குஷ், ஹாப்பி, மகிழ்ச்சி. ஆனால் இந்த முடிவு அனவரதனுக்கு எப்படி புரிந்திருக்கும் என சொல்ல தேவையில்லை.

“ப்ளான் பண்ணி என் பொண்ணு கரியரை காலி பண்ணிட்டான் அந்த திரியேகன் அவன் சன் மூலமா. ஆனா சொல்றவன் சொல்றான்னா இவளுக்கு எங்க போச்சாம் அறிவு…..? “ இப்படித்தான் கொந்தளித்துப் போய் இருந்தார் அவர்.

தோடு முடிந்ததா சுகவிதாவின் தவிப்பு என்றால் அதுவும் இல்லை. அரணுக்கு க்ரிகெட் டூர். அவ்வப்போது அவனோடு சென்று தங்க கிரிகெட் போர்ட் அனுமதித்தாலும் அனைத்து நாளுமா அவனை பார்க்க அனுமதி இருக்கிறது?

தனிமையில் காய்ந்தாள். அதே ஊரில் அம்மாவை வைத்துக் கொண்டு அவரை வேறு பார்க்க முடியாத நிலை….அம்மா சொன்னது ஞாபகம் வருகிறது.

“நாம் குழந்தை வச்சுப்போம் ஜீவா….”

தாயாகும் ஆசை எல்லா தமபதிக்கும் இயல்பில் இருப்பதுதான். அரணுக்கும் சுகாவிற்கும் அதில் ஆயிரம் கனவுகள். இருவரும் ஒற்றைப் பிள்ளைகள் அல்லவா…”மூனு குட்டீஸாவது  வேணும்…” இது ரெண்டுபேரின் ஒத்த மனம்.

ஆனால் டென்னிஸிற்காக  அதை கன்சிடர் செய்யும் நிலையில் அரணும் அவளும் அப்பொழுது வரை இல்லை. ஆனால் இப்பொழுது அது சரி எனப் பட்டது அவளுக்கு.

ஆனால் சுகவிதாவின் 21 வயதிற்கு இது டூ இயர்லி என்று தோன்றியது அவள் கணவனுக்கு. அதோடு டென்னிஸிற்கு அவள் திரும்ப இருக்கும் வாய்ப்புகள் மொத்தமாய் அடைபடும் வாய்ப்பும் இதில் அதிகம். ஆக மென்மையாய் ஆனால் உறுதியாய் மறுத்தான் அரண்.

இந்த சூழலில் அவர்களது பாமிலி ப்ளானிங் ப்ரோசீரை தாண்டி அன்எக்‌ஸ்பெக்டட் ப்ரெக்னன்சி.

அரண்டு போனாள் சுகவிதா. அரண் இவள் அவனை ஏமாற்றி கருதரித்ததாய் நினைத்துவிட்டால்?

“நிஜமா எப்டி ஆச்சுன்னே தெரியலை ஜீவா…..நான் உங்களை ஏமாத்தலைபா…..ப்ரெக்னென்சி பாஸிடிவ் வந்திருக்கு ” அழுது கொண்டே இப்படித்தான் ஃபோனில் அவனுக்கு அந்த செய்தியை அறிவித்தாள்.

“லூசு….உன்ன நம்பாம நான் யார நம்ப?” என்றவன் அடுத்த சில மணி நேரத்தில் அவளுடன் இருந்தான். அவளோடு இருக்க ஸ்பெஷல் பெர்மிஷனில் வந்திருந்தான். குழந்தை அப்பொழுதைக்கு வேண்டாம் என நினைத்தான் தான் ஆனால் வந்து உதித்த பின் அது அவனுக்கும் உயிரல்லவா? அதோடு இந்த நேரத்தில போய் இவன் விது அழுதுட்டு வேற இருக்கா.

எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு சந்தோஷமாக மனைவியை வைத்துக் கொள்ள முனைந்தான் அரண்.

கர்பகாலத்தில் மனைவியை தாங்க கணவனின் மனம் பாய்ந்தோடுவது இயல்புதான். பெரியவர்கள் துணை வேறு இல்லாத நிலை. அதோடு அவள் மனதில் ஒரு மூலையில் கூட இது இவனுக்கு  விருப்பமில்லாத குழந்தை என்றோ…இல்லை அவளை இவன் நம்பவில்லை என்றோ நினைவு வந்து விடக் கூடாது என்ற அஅடட் பர்டன் வேறு அரண் மனதில்.

அவளுக்கு நோ சொல்லும் பழக்கத்தை மொத்தமாக கைவிட்டான் அவன். அவள் இழுத்த இழுப்பிற்கெல்லாம் வளைந்தான்.

அதுவரை டைட் ஃபிட்னெஸ் ரெஜிமில் வளர்ந்தவள் தான் சுகவிதா…ஆனால் இந்த நாற்பத்து நாலு மணி நேரமும் இருக்கும் நவ்சியா…ஆம் அப்படித்தான் நாளே நீண்டு போனதாய் பட்டது இடைவிடாத வாமிட்டிங் சென்சேஷனில்….அவளுக்கு அனுமதிக்கப்பட்ட வாக்கிங் போக கூட முடியவில்லை.

எல்லா நேரமும் பூனைக்குட்டிப் போல் அரண் கைக்குள் சுருண்டு கொண்டால் நன்றாக இருக்கும் போல் இருந்தது அவளுக்கு. அவன் வீட்டில் இருந்தாலும் இல்லையெனினும் படுக்கை அறையே அவளது பெர்மனட் ப்ளேஸ் என்பதுபோல் ஆனது.

அடுத்த ப்ரச்சனை அவளுக்கு வாமிடிங் சென்சேஷன் வயிற்றைப் பிரட்டி எடுத்தாலும்….வாமிட் என்று ஒன்று ஆகவே இல்லை….அந்த நேரத்தில் அது நல்ல விஷயமாக பட்டாலும் வெயிட் கெய்ன் டாப் கியரில் எகிறியது…

ஆம் ஏனோ அந்த தாங்க முடியாத நவ்சியா பால்போல் எதாவது குடித்தாலோ அல்லது புளி குழம்பில் சாதம் சாப்பிட்டாலோ  சில நிமிடங்கள் அடங்குவது போல் ஒரு உணர்வு….ஆக பசிக்கிறதோ இல்லையோ எதையாவது குடித்துக் கொண்டோ அல்லது சாப்பிட்டுக் கொண்டோ அவள். வாமிட் வேறு இல்லை…ஒரே படுக்கை…பின் வெயிட் ஏறாமல் என்ன செய்யுமாம்?

அவ்வப் பொழுது அவளுக்கு அட்வைஸ் செய்தாலும்…..கூட இருக்கும் போது கெஞ்சி கொஞ்சி அவளை வாக்கிங் கூட்டிப் போனாலும் அரணும் அவளை எதற்காகவும் கட்டாயப் படுத்தவில்லை. முன்பு சொன்ன காரணம் உபயம்.

அடுத்த பக்கம்