நனைகின்றது நதியின் கரை 13

பி எல் சுகவிதாவிற்கு வசந்த காலமாக இருந்தது. இத்தனைக்கும் அரண் எல்லா நேரமும் இவளுடன் இருந்தான் என்று இல்லை. பகல் பொழுதுகள் ப்ராக்டிஸ் ஆர் மேட்ச் என கிரிகெட்டிற்கு கொடுக்கப்பட இரவுகள் இவளுக்கானது.

இயல்பிலேயே ஒருவர் அருகாமையை ஒருவர் நாடும் காலம், அரணின் கேரிங் நேச்சர், அதோடு அவள் எல்லாவற்றையும் எல்லோரையும் தனக்காக விட்டு வந்திருக்கிறாள் என்ற அவனது உணர்வு…சுகவிதா சொர்க்கத்தை கண்டாள் கர்டசி அரண்.

ஐ பி எல் முடியவும் இன்னுமாய் கூடிப் போனது சுகாவின் சுக எல்லை. ஆம் ஹனிமூன் பீரியட். 24 மணி நேரமும் அவன்.

சாக்லேட் கேர்ள் என தான் இவளை அழைப்பான் அரண். இருவரில் யார் யாருக்கு சாக்லெட் என ஒரு ஆனந்த ஆர்க்யூமென்ட் அதன் பின் அவ்வப்போது உண்டு அவர்களுக்கிடையில்…..

அம்மா அப்பாவின் அன்பை அனுபவித்து வளர்ந்தவள் தான் சுகவிதா எனினும் கணவனின் அன்பில் அடிமைப் படுகிறதே பெண் மனம்!!! அரணைத் தாண்டி உலகம் இல்லை என்றானது அவளுக்கு.

அடுத்து வந்த கிறிஸ்துமஸ். தம்பதியராய் ஃபர்ஸ்ட் கிறிஸ்துமஸ். சென்னையில்தான் செலிப்ரேட் செய்வதாய் திட்டம்.

டிசம்பர்  தொடங்கவும் வீட்டை விழாகோலப் படுத்தி…கிறிஸ்துமஸ் ட்ரீ செட் செய்து… தினமும் அரை மணி நேரம் அந்த ஆண்டில் நடந்த அனைத்திற்காகவும் ஆண்டவருக்கு நன்றி சொல்லி…..

வாரம் இரண்டு முறையாவது. ஒரு நாள் திரியேகன் ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸுக்கு, ஒரு நாள் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸுக்கு, ஒரு நாள் வீட்டில் வேலை செய்கிறவர்களுக்கு…..ஒரு நாள் ரிலேடிவ்ஸுக்கு என  கெட் டுகெதர் அரேஞ்ச் செய்து…..கிஃப்ட் டிஸ்ட்ரிப்யூட் செய்து…சுகவிதா செய்த அத்தனையும் அவளது அம்மா ஸ்டைல்…. அவளுக்கு தெரிந்ததைத் தானே செய்யமுடியும்.

சுகவிதா அம்மா புஷ்பத்திற்கு இன்னொரு பழக்கம் எத்தனை வகை கேக்‌ஸ் வெளியில் கிடைத்தாலும் ட்ரடிஷனல் பலகாரங்களை தானே செய்துதான் அனைத்து கெட் டுகதரிலும் பகிர்வார்.

ஆக சுகவிதாவிற்கு கிஸ்துமஸ் என்றால் அதில் இதுவும் ஒரு பார்ட் மனதளவில். அதனால் அவளுக்கு தெரிந்த ஸ்னாக்‌ஸை செய்ய ஆசைப்பட்டாள். நெட்டில் ரெசிப்பி தேடி எதை எதையோ செய்தும் கூட வைத்தாள். எதிலும் அம்மாவின் டச் இல்லவே இல்லை என்பதோடு இத்தனை வருடம் இந்த விழாவைக் கொண்டாட அம்மா எவ்வளவு வேலை செய்திருப்பார் என்ற எண்ணம்… அதில் தொடங்கி அம்மாவின் ஒவ்வொரு செயலும் அதன் ஆழத்தோட புரிய தொடங்கியது.

எல்லா பொண்ணுங்களுக்கும் வர்றதுதான் இது. என்னதான் கல்யாணத்துக்கு முன்னால  அம்மாவை புரிஞ்சாலும் பிடிச்சாலும் அதுக்கு பிறகு அம்மாவை உணரும் ஆழம் அதிகம். அமைதியான அரெஞ்ச்ட் மேரேஜிலேயே அநியாயத்துக்கு அம்மாவை மிஸ் பண்ற டைம் இது. இதில் சுகா நிலைக்கு ரொம்பவும் ஏங்கிப் போனாள் பெண். அம்மாவைப் பார்க்கனும்…

அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தால் அது அரண் இல்லையே….கிறிஸ்துமஸ் அன்று சுகவிதாவின் அம்மா சர்ச்சில்  எந்த சர்வீஸ் அட்டென் செய்கிறார் என கவனித்து அதே நேரம் சுகாவையும் சர்ச்சுக்கு கூட்டிப் போய் அவளது அம்மாவைக் காண்பித்தான்.

அம்மா தனியாக வந்திருந்தார். அனவரதன் எப்பவும் ரெகுலர் சர்ச் கோயர் கிடையாது. ஆனால் கிறிஸ்துமஸ் அன்று விசிட் செய்வார்தான். இப்ப கடவுள் மேல அவர் கோபத்துல இருக்ற காலம்ன்றதால இதுவும் கட் போல.

இருந்த கூட்டத்தில் அம்மா மகளை பார்க்க கூட இல்லை. சுகவிதாவும் அம்மா தன்னுடன் பேச வேண்டும் என்றெல்லாம் எதிர் பார்த்து அங்கு செல்லவும் இல்லைதான். ஆனால் அம்மாவை தனியாய் பார்க்கவே ஒரு மாதிரியாய் மனதை பிசைந்தது அவளுக்கு. அம்மாவிடம் பேச வேண்டும்….கட்டி பிடிச்சு ஓன்னு கத்தனும் போல ஒரு உணர்வு….

தில் டிசம்பர் முடியவும் தொடங்கியது டென்னிஸ் சீசன்……ஜன்வரி ஆஸ்ட்ரேலியன் ஓபன் தொடங்கி மீண்டும் அவள் ஃப்ரீ ஆக அக்டோபர் முடிய வேண்டும். அதுவரை அவளும் டென்னிஸுமாக வாழ்ந்தாக வேண்டும்.,

அவளது முந்தைய கோச் தான் இப்பொழுதும்…..அவள் டீம் அதாவது கோச் ஃபிட்னஸ் ஃபெசிலிடேடர் என எல்லோரும் முந்தையவர்களே….ஆனால் டென்னிஸ் தான் முந்தையதாய் தோன்றவில்லை அவளுக்கு….. அரணிடமிருந்து அவளைப் பிரிக்கிறதே….

இத்தனைக்கும் அந்த டைம் அரண் ஃப்ரீயாக இருந்ததால் அவளை மெல்போர்னில் சென்று ட்ராப் செய்துவிட்டு வந்தான் அவன். ஆனால் இரண்டு நாள் தான். அதன்பின் அவனிடம் அழத் தொடங்கிவிட்டாள் சுகவிதா.

“எனக்கு எப்பவுமே டென்னிஸ் பிடிக்காது…..குழந்தையா இருக்றப்ப அப்பா சொன்னாங்கன்னு அவங்கள ப்ளீஸ் செய்ய விளையாடினது…. வளந்த பிறகு ஃபுல்லா உங்க மேல உள்ள கோபத்தை காண்பிக்க…உங்களவிட நான் பெரியாள்னு ப்ரூவ் பண்ண மட்டுமே…..இப்ப எதுக்கு விளையாடனும்னே தெரியலை…..ஒவ்வொரு ஷாட்லயும் உங்கள முன்னால எவ்ளவு வெறுத்தேன்னு மட்டும் தான் ஞாபகம் வருது….நரகமா இருக்கு….இதுல இதுக்காக உங்களவிட்டுட்டு தனியா இவ்ளவு தூரம் வந்து….ப்ளீஸ் என்னை விட்றுங்களேன் ஜீவா…..எனக்கு டென்னிஸ்  வேண்டாம்….”

அரண் இவள் கெஞ்சி கேட்டாலும் டென்னிஸிலிருந்து அவள் ரிடையர்மென்ட் வாங்க ஒத்துக் கொள்ள மாட்டான் என்ற நினைவில் அவனிடம் அதைப் பற்றி வாயைக் கூட திறக்காமல்  கிளம்பி சென்றிருந்தவளால் அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியவில்லை…

அரணுக்கு ஸ்போர்ட்ஸ் பாஷன்….ஒவ்வொரு நாளும் சாப்பிடும் சாப்பாட்டிலிருந்து மனதில் நினைக்கின்ற நினவுகள் வரை ஒவ்வொன்றிலும் தேவைப்படும் கட்டுபாடுகள், உடம்பை அடிமையாக அடித்து கட்டுபடுத்தும் வொர்க் அவ்ட்ஸ் அன்ட் ப்ராக்டீஸ் இது எல்லாவற்றிற்கும் அந்த பாஷன் எவ்ளவு தேவை என அவனுக்கு நன்றாக தெரியும்.

அடுத்த பக்கம்