நனைகின்றது நதியின் கரை 12(6)

டப்பதெல்லாம் கனவு போல் இருந்தது சுகவிதாவிற்கு. ஆனால் மண மேடைக்கு செல்ல கிளம்பி தயாராய் நின்ற போது அவளால் தாங்க முடியவில்லை. ஒரே அழுகை.

அப்பா இவளது கல்யாணத்தைப் பத்தி இவளிடம் பேசிக் கொள்பவர் கிடையாது. ஆனால் அம்மா அப்படி கிடையாது. எதைப் பார்த்தாலும்… நம்ம சுகா வெட்டிங்கு இப்படி டெக்கரேட் செய்யனும்…அப்படி ட்ரெஸ் செய்யனும்….இந்த செருமனி வைக்கனும்……இவங்கவங்களுக்கு இப்டி இப்டி ட்ரெஸ் எடுக்கனும் என ஆயிரம் சொல்வார்…. இப்ப வீட்ல சாப்டாம விழுந்து கிடப்பாங்க….

அப்பா, அப்பா இல்லையெனில் அண்ணன் தானே மணமகளை மணமகனிடம் அழைத்துச் செல்வது முறை….ஆக இங்கு இவளை அழைத்துச் செல்ல அருகில் நின்றது ப்ரபாத்.

அவன்தான் ஆயிரம் சொல்லி ஆறுதல் செய்தான்….. அதில்   “ உனக்கே தெரியும் உன் அப்பா உன்ட்ட பேசுற அளவுக்கு உன் அம்மாட்ட பேச மாட்டாங்கன்னு….இனிமே அவங்க ரெண்டு பேருக்குள்ள உள்ள ரிலேஷன்ஷிப் ரெக்கவராகும்னு நினைச்சுப் பாரு சுகா…” என்ற பாய்ண்ட் கொஞ்சம் திருப்தியை தந்தது நிஜம்.

ஆனாலும் “எனக்கு அம்மாட்ட பேசனும்….”  என்ற போது கண்ணில் திரும்பவும் நீர்.

அதிசயமாய் ப்ரபாத்தின் அழைப்பை ஏற்றார் புஷ்பம். பொண்ணு மனசு அம்மாவுக்கு புரியுமே….

“ சுகி பொண்ணுங்க யாரும் இல்லாத வீட்டுக்கு கல்யாணாமாகி போற….அங்க போய் அடுத்தவங்க உன்னைப் பார்த்துகிடனும்னு நினைக்காம நீ தான் அதை உன் வீடா நினச்சு எல்லாத்தையும் பார்த்துகிடனும்……

இத்தன கஷ்டபட்டு நடக்குது இந்த மேரேஜ்….அதுக்கு ப்ரயோஜனமே நீ அங்க போய் சந்தோஷமா இருக்ரதுலதான் இருக்குது……அழுதுகிட்டு அழ வச்சுகிட்டு இருக்க கூடாது…..உங்கப்பா பார்த்திருந்த மாப்ளையவிட அரண் தம்பி மாப்ளையா வரதுல எனக்கு ஆயிரம் மடங்கு அதிக சந்தோஷம் தான்….

ஆனா எல்லாம் மறந்து நாங்க வந்து சேர கொஞ்சம் டைம் வேணும்…..வருஷம் போக குழந்தைங்கன்னு வரவும் எல்லாம் சரியாகிடும்…அதனால எதையும் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இருக்கனும்…”

“அரணதான் உங்களுக்கு பிடிச்சிருக்குல்லமா நீங்களாவது வரலாம்ல…” கெஞ்சினாள்.

“உங்கப்பா ஈகோக்கு உன் லைஃபை பலிகொடுக்க கூடாதுன்னு நான் நினைக்க காரணம் உன் மேரேஜ் லைஃப் என்னை பொறுத்த வரைக்கும் அவ்வளவு முக்கியம்…அப்படித்தானே என் மேரேஜ் லைஃபும் எனக்கு…..

உன்னை உன் அரண்ட்ட கொடுத்தாச்சு….இங்க அப்பாக்கு யார் இருக்கா? நான் தானே….அதனால அப்பா சேர்ந்துக்க வரைக்கும் அவரைவிட்டுட்டு அவருக்கு தெரிஞ்சோ தெரியாமலோ உன்ட்ட உறவு கொண்டாட எனக்கு முடியாது. அப்பாக்கு நமக்குன்னு யாரும் இல்லைனு தோணிடும்…. ”

அதன் பிறகு சுகவிதா நோ டர்நிங் பேக். சந்தோஷமாகவே இருந்தாள்.

திருமணவிழா ஆரம்பிக்கவே வெரி லேட். ஆக எல்லாம் முடிந்து அரணுடன் அவன் அறைக்குள் நுழையும் போது ரொம்பவுமே பின்னிரவாகி இருந்தது. சுகவி காதலை பகிர்ந்து கொண்டபின் அதாவது அரண்தான் ஜீவா என ஒத்துக் கொண்ட பின் அவர்களுக்கு கிடைக்கும் முதல் தனிமை. அவளிடம் பேச, தன்னவளை சீண்ட ஆயிரம் இருக்கிறதுதான் அவனிடம்….

ஆனாலும் சூழ்நிலையின் ப்ரமாண்டம்… உண்மையின் ப்ரமிப்பு….நேற்றுவரை இருவர் உறவு நிலைக்கும் இன்றைய நிஜத்திற்கும்….. நாள் முழுவதும் நடந்துவிட்ட மெகா டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸுக்கும்…. அவனுக்கு அவள் அவனவளாய் அருகில் இருக்கிறாள் என்பதே அதி அதிசயமாய்…. அவளை பார்வையால் பருகிக் கொண்டிருந்தான் அவன்…

சுகவிக்கோ அவனை எத்தனை பாடுபடுத்திவிட்டு அதைப் பற்றி ஒரு வார்த்தைப் பேசாமல் ஒன் ஷாட்டில் அவனை கல்யாணம் செய்து கொண்டு….கோடிமடங்கு காதலும்….குறைவில்லாத குற்ற குறுப்புமாய் அவள் நிலை….

“ அரண்….”

அவளது அழைப்பிலேயே அவள் மனம் எங்கிருக்கிறது என புரிந்துவிட்டது அவனுக்கு…. இன்று ப்ரஸ் மீட் சென்ற போது அரண் என அழைத்தாள் தான்…அது அரணும் ஜீவாவும் ஒன்று என நான் புரிந்து கொண்டேன் என்பதின் வெளிப்பாடு….ஆனால் இது வேறு…

“சொல்லு விதுக்குட்டி…”  அவன் மனதில் அவள் மீது எந்த நெருடலும் இல்லை என காண்பித்தாக வேண்டும் அவனுக்கு.

“நீங்க தரேன்னு சொன்னத எனக்கு தரலை…” அவனுக்கு வெகு அருகில் சென்று அவன் முகம் பார்த்து நின்றாள். பரிதாபமாய் ஒரு லுக்.

“என்னது விதுமா?” நிஜமாகவே இப்பொழுது அவன் குழம்பிப் போனான்….

“அன்னைக்கு பீச்ல வச்சு மிரட்னதுக்கு……” அரணுக்கு விஷயம் புரிந்து அதன் தொடர்ச்சியாய் அவன் ப்ரபாத்துடன் பேசிய சிக்‌ஸர் வரை நியாபகம்….

“வாய்ல ரெண்டு போடுவேன்னு சொன்னீங்க”

கண்களை மூடி தன் நாடியை உயர்த்தி

“ரெண்டு போடுங்க ஜீவா அப்பவாவது நிம்மதியா இருக்கும்…” அசையாமல் அவன் முன் அவள்.

செல்லமாய் விளையாட்டாய் ரெண்டு தட்டு தட்டலாம் எனதான் முதலில் அவன் நினைத்தது.

ஆனால் தலையிலிருந்து வழியும் மல்லிகை சரங்களும், நீண்டு ஆடிய ஜிமிக்கிகளும், செழுமையுற்றிருக்கும் கன்னங்களும்,  சிற்சில சலனத்துடன் மூடியிருக்கும் சிப்பி இமைகளும் சீராக சிவந்திருக்கும் அவள் சின்ன உதடுகளும்…..கல்யாணமாகியிருந்த சில மணி நேரங்களும்… கணவனாய் அதில் கவனம் செல்லவும் கதை மாறிப் போனது….

இதழால் தொடங்கி…. அரணாய் அவளை சூழ்ந்து…..அவன் ஜீவன் அவள் என்றாக்கி……. தம்பதி படலம்.

பின்னும் திறந்த மனதுடன் விடிய விடிய விளையாட்டாய் தொடங்கிய சண்டை முதல் சமீபத்திய அனைத்தும் வரை அவரவர் உணர்வை சொல்லி, அடுத்தவர் வார்த்தையை அப்படியே ஏற்று…

அடுத்த பக்கம்