நனைகின்றது நதியின் கரை 12 (5)

“எஸ்…..வர்றப்ப வைட் ஷர்ட்….சூப்பர்பா இருக்கும்” அவள் வைட் கலர் சாரியில் இருந்ததால் மேட்சிங்காக ஃபோட்டோஸ்க்கு நன்றாக இருக்கும் என்பது அவளது எண்ணம்.  முடிந்தவரை மைக்‌ஸை விட்டு வெகுவாக விலகி சிறு குரலில் தான் சொன்னாள்.

ஆனாலும் அதுவும் அவள் பேசிய அனைத்தும் அரண் பார்த்துக் கொண்டிருந்த சுகவிதா கிட்நாப் லைவ் டெலிகாஸ்ட் வரை வந்தது. ஆறுதலான விஷயம் அவன் பேசியது வராததே!!!!

சுகவிதா அரண்தான் ஜீவன் என வீட்டிலிருந்து கிளம்பும் முன் அறிந்துவிட்டாள். அரணுக்கும் ஜீவனுக்குமான ஒற்றுமைகளை ஒப்பிட்ட அவள் மனம் ஒரு வேளை அரண்தான் ஜீவாவாயிருந்தால் என்ற ரீதியில் சிந்திக்கவும் அனைத்து குழப்பமுமே அவளுக்கு நீங்கிப் போனது.

சந்தேகமின்றி தெளிவாக தெரிந்துவிட்டது அவளது ஜீவா தான் அரண் என.

சிறு வயதில் நடந்த சில நிகழ்வுகளுக்கு அவளுக்கு காரணம் தெரியவில்லை எனினும் இப்பொழுது அரண் அவள் மீது உயிரையே வைத்திருக்கிறான் எனபது தெள்ளத் தெளிவு.

அதோடு அரண் நிச்சயமாய் இவள் நம்பியது போல் க்ரீன் ஐட் மான்ஸ்டர் கிடையாது. அம்மா சொன்னது போல் அரணுக்கு இல்லை ஜெலசி…இவள் அப்பாவுக்கும் இவளுக்கும் தான் அவன் மீது என்வி.

அதனால்  அவ,ளால், அவன் எத்தனையை இழந்து கொண்டிருக்கிறான் என்ற தவிப்பு அவளுக்கு.

அதை அவள் தானே சரி செய்தாக வேண்டும். மீடியாவின் பலத்தை அறிந்தவள் அவள். ஆக அதன் மூலம் அவன் இம்ஜை காப்பாற்றி ஆக வேண்டும், அது அவனுக்கான மற்ற ப்ரச்சனைகளை சால்வ் செய்துவிடும்  என்ற ஒரே எண்ணத்தில் தான் அவள் வந்ததே.

ஆக அவன் சம்பந்தப்பட்ட உண்மைகளை அறிவிக்க வேண்டிய விதத்தில் அவள் அறிவித்தாள்.

இந்த அவளது அறிவிப்பில் யூத் மத்தியில் அரண் மெகா ஹீரோவாகிவிடுவான் என அவளுக்குத் தெரியும். அதே நேரம் அவள் அப்பா கொதித்துப் போவார் என்பதும்தான். ஆனால் அரணுக்கு எதிரான அத்தனை விஷயங்களும் மீடியாவிற்கு போயிருக்க அவனைக் காப்பாற்றும் காரியங்களை தெரிந்தே இவள் எப்படி மறைக்கவாம்?

அரணிடம் நின்று தன் புரிதலை வெளியிட்டுவிட்டு வரகூட அவள் விரும்பாததற்கு காரணம்… ‘உன் அப்பா ரொம்ப ஹர்ட் ஆகிடுவாங்க விது….மீடியாவுக்கு போக வேண்டாமே என்று சொல்லிவிடுவானோ என்ற பயம் தான்.

ப்ரபாத்துக்கும்  இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க சுகவிதா வியூதான். எப்படியும் அனவரதன் இந்த காதலை ஒத்துக் கொள்ளப் போவதில்லை….சிரிக்கவும் போவதில்லை.

அவருக்கு இருக்கும் கோபம் இன்னும் அதிகமாகிவிடக் கூடாது என்பதற்காக அரண் கரியரை ஏன் காப்பாத்தாமல் விட வேண்டும்? மொத்த உலகிற்கும் அவனை ஏன் வில்லனாக காட்ட வேண்டும்? அதுவும் அவனை இந்த நிலையில் கொண்டு வந்துவிட்டது சுகவியும் அனவரதனுமே எனும் போது.

ஆக அவன் ட்விஸ்ட்டை புரிந்து கொண்ட பின்னும் சுகவிதாவை தடுக்க முயலவில்லை. முதலில் அரண் வீட்டிலிருந்து கிளம்பும் போது மீடியாவில் வந்து இன்னுமாய் அரணை அவள் கிழிக்கப் போகிறாள் என அவன் பயந்ததற்கு இது சாக்லேட் ட்டொரென்ட்.

அடுத்து சுகவிதா அனவரதனைப் பார்க்கப் போகும் போது அவர் வீட்டிற்கு கிளம்பிப் போயிருந்தார். இவள் இன்டர்வியூவை அவரும் தானே கேட்டிருந்தார். அவரால் தாங்கவே முடியவில்லை.

அதன் பின் அங்கு அரண் வர அவர்கள் திருமண தேதியை இணைந்தே அறிவித்துவிட்டு, தன் சுக பத்திரத்தை குறித்து காவல் துறைக்கு எழுத்து வடிவில் கொடுக்க வேண்டியவைகளை எழுதி கொடுத்துவிட்டு அரணோடு அவள் சென்றது தன்னுடைய வீட்டுக்குத்தான்.

வள் விளக்கத்தை அப்பா ஏற்றுக் கொள்வார் என்றெல்லாம் நம்பிக்கை இல்லை தான். ஆனால் சொல்லியாக வேண்டும். இன்று இல்லையெனினும் ஏதோ ஒரு நாள் இவளைப் புரிய இது தேவை.

அனவரதன் வீட்டுக் கதவு திறக்கவே இல்லை.

அனவரதன் உயிரோடு செத்திருந்தார். மகளை குடும்ப எதிரி, அவளை வருடக் கணக்காய் வெறுக்கும் ஒரு முரடன் துப்பாக்கி முனையில் தூக்கிக் கொண்டு போய் விட்டான்….

என் மகள அவன் என்ன பண்றானோ என்ன பாடு படுத்றானோ என்ற உயிர் வாதையில் நொடி நொடியாய் நினைவுத் தீக்குள் வெந்து கொண்டிருந்தவர், மகள மீட்காம பார்க்காம பச்சத் தண்ணி கூட குடிக்க மாட்டேன் என உயிர் சுருண்டு போய்தான் விழுந்து கிடந்தார்.

திரும்பி வந்த மகள் சொல்கிறாள் இவள் பார்த்த, மாப்பிள்ளையை அவளுக்கு பிடிக்கவில்லையாம். இவர் கட்டாய கல்யாணம் செய்து வைக்க பார்த்தாராம்…அந்த அரண் தான் வந்து இவளை காப்பாத்துனானாம். உலகம் என்ன சொல்லும் இவரை? ஊர்காரன் என்ன பேசுவான்? அவமானம்

அரணை அவ காதலிக்கிறாளாம்……அப்படின்னா எவ்ளவு நாளா அவன் கூட சேர்ந்து இவளும் இவர அவமானபடுத்றதுக்குன்னே நாடகமாடி இருக்கனும்….? ஓடிப் போறதுன்னு முடிவு செய்தவ ஏன் கல்யாணத்தன்னைக்கு ஓடனும்….?

உலகம் முன்னால இவர அசிங்கப் படுத்றதுக்குன்னு அந்த திரியேகனும் அவர் மகனும் திட்டம் போட்டுறுக்காங்க…அதுக்கு இவர் மகளே சம்மதிச்சுருந்திருக்கா…. அதன் பின்பு சுகவிதாவோ அரணோ ப்ரபாத்தோ திரியேகனோ எந்த வகையில் இவரை கம்யூனிகேட் செய்ய முயன்றாலும் அவர் அவர்களுடன் ஒரு வார்த்தை பேசவில்லை.

சுகவிதா மீடியாவில் அரணை விரும்புவதாய் அறிவித்த காட்சியை திரியேகனும் அரண் அருகில் இருந்து தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுதே அதாவது அனவரதன் கமிஷனர் ஆஃபீஸில் இருக்கும் போதே சுகவிதாவின் அம்மா புஷ்பம் எண்ணுக்கு அழைத்திருந்தார்.

அனவரதன் மாதிரி இல்லாமல் புஷ்பம் விஷயத்தை காது கொடுத்து கேட்பாராய் இருக்கும்.

“ முறைப்படி இந்த கல்யாணம் நடந்திருந்தா என் அளவு சதோஷப் படுறவங்க யாரும் இருந்திருக்கமாட்டாங்க திரியேகன் சார்…..ஆனால் ஒத்த பிள்ளதான் வளர்த்தேன்…..அவளையும் ஒழுங்கா வளர்க்கலைனு ஊர்ல பேர் வாங்க வச்சாச்சு….

ப்ச்….போகுது….ஊர்ல எல்லோரும் தினமும் இதையேவா பேசப் போறாங்க….அவ கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும்…..ஆனா அவ அப்பாவோ நானோ வந்துக்க மாட்டோம்…..” எந்த விளக்கமும் சொல்லாமல் கேட்காமல் தன் பக்கத்தை சொல்லி முடித்துவிட்டார்.

மகள் லைஃப் நல்லா அமையனுமேன்னு தவிப்பில் இருந்தவர்தான். ஆனால் அதற்கான வழி இப்படியாய் இருக்கும் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ஷாக் ஸ்டேடஸ்

ஆக அன்று இரவே சிம்பிளாய் திருமணம் அரண் வீட்டு கார்டனிலேயே. மறுநாள் அரண் கொல்கத்தா கிளம்ப வேண்டும் ஐ பி எல் முடியும் வரையுமே இப்படித்தான் இருக்கும். ஆக ஏதோ ஒருவகையில் இது சரி என தோன்றிவிட்டது.

அடுத்த பக்கம்