நனைகின்றது நதியின் கரை 12 (4)

வள் மனதின் செவிகளில்

“விடுங்க ஜீவா….நானும் ஃபாஸ்ட்டா தான் ஓடுவேன்….உங்க கூட ஓடி வரேன்….”

“இல்ல புல்லட் ஷாட் உன் மேல பட்றக் கூடாது…..” முன்பு மால் இன்சிடெண்டில் ஜீவா சொன்னது.

“டேய் அவ போலீஸ் ஸ்டேஷன்ல போய் தனியா நிப்பாடா…. இன்று அரண் சொன்னது.

“இன்று பார்ம் கவுசில் அரண் பின்னிருந்து அணைத்த போது முதலில் பயந்து திமிறினாலும்….ஒரு ஓர  மனதில் ஜீவா அரண் இருவரின் கையும் பிடியும் தோளும் உயரமும் ஒன்று போல் என்ற ஒரு சிறு நினைவு…அதற்கு மேல் நினைக்க தாங்காமல் அவளுக்கு இன்ஸ்டென்ட் மயக்கம் அப்போது. அது இப்பொழுது ஞாபகம் வருகிறது.

“எனக்கு ஜீவாவை புரியுது…கரெக்டா சொல்லனும்னா அவங்க நிறைய உன்ன மாதிரி தெரியுமா……உனக்கு அவங்கள கண்டிப்பா பிடிக்கும்….” முன்பு இவள் இதே ப்ரபாத்திடம் சொன்னது ஞாபகம்.

ஹாலில் இருந்து படி இறங்கும் இவர்களைப் பார்க்கும் திரியேகன் இவள் கண்ணில் படுகிறார்.

“ஜீவா ஓபனா சொல்லிகிட்டது கிடையாது….பட் எனக்கு புரிஞ்ச வரை அவங்களுக்கு வீட்ல அப்பா மட்டும் தான்….என்னை மாதிரி….உன்னை மாதிரி ஒன்லி சைல்ட் சின்ட்ரோம் ஜீவாக்கும் நிறைய இருக்கும்….கண்டிப்பா மேரிட் கிடையாது….” ஜீவா குடும்பம் பற்றி இவள் கொடுத்த சர்டிஃபிகேட் ஞாபகம்.

அங்கிருந்த ஷோகேஸில் அரணின் எண்ணிலடங்கா ட்ரோபிஸ்…..அருகில் வேர்ல்ட் கப் ட்ரோபியுடன் கிரிகெட் யூனிஃபார்மில் அரண் சிரிக்கும் முழு உயர படம் .

“அதோட அவங்க கண்டிப்பா நிறைய நாட்டுக்கு போயிருக்காங்க…..வேர்ல்ட் லெவல் எக்‌ஸ்போஷர்…” ப்ரபாத்திடம் ஜீவா பற்றி இவள் சொன்ன வார்த்தைகள் இப்பொழுது இவள் குரலிலேயே இவள் காதில் கேட்கிறது.

“கீய தா கழுத…”

“நீ இருக்க மூடுக்கு நீ ஒன்னும் ட்ரைவ் பண்ண வேண்டாம்”

“அறைஞ்சேன்னா அத்தன பல்லும் உதுந்துறும்…வாய மூடிட்டு வா….”

“இந்தா அறை பல்லு உதுறுதான்னு பார்ப்போம்….” கன்னத்தை திருப்பி காமித்தாள் அவனுக்கு.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…என தலையைப் பிடித்தவன் “சரி காரை எடுத்து தொ…” என ஆரம்பித்துவிட்டு “சரி..ட்ரைவ் பண்ணு” என்றான்.

காரில் கிளம்பினர் இருவரும்.

“எந்த ஸ்டேஷன்  போகனும் பால்பாக்கெட்?”

“சேப்பாக் கமிஷனர் ஆஃபீஸ்”

சற்று நேரம் மௌனம் .

“எப்டி யோசிச்சுப் பார்த்தாலும் இப்ப எதுக்கு உன்  ஃப்ரெண்ட் என்னை ஸ்டேஷன்க்கு கூட்டிட்டுப் போகச் சொல்றான்னு எனக்கு புரியலை…”

“அதுக்கெல்லாம் க்ரே மேட்டர் வைட் மேட்டர்னு க்ரேனியத்துக்குள்ள ஒன்னு இருக்குமே அது வேணும்….”

“அப்ப உனக்கும் விஷயம் புரியலைன்ற…ஓகே அங்கேயே போய் பார்த்துப்போம்.”

“நீ இன்னைக்கு என்ட்ட உத படமா போக மாட்ட போல… அங்க  உன் அப்பா என் பொண்ணை மீட்டு தர்ற வரை உண்ணாவிரதம்னு….”

அதற்கு மேல் ப்ரபாத்தும் சொல்லவில்லை சுகவியும் பேசவில்லை.

இந்த உண்ணாவிரத எபிசோட் அரண் ப்ரபாத் இருவரும் எதிர்பார்க்காதது. வயசானவர ஒரு வாரம் சாப்டாம இருக்கட்டும்னு எப்படி விடுவதாம்? ஆக அவளை ஒரு வாரமெல்லாம் ஒளித்து வைக்க முடியாது.

சுகவி அரண் வீட்டில் தங்க பிடிவாதமாக மறுத்தால் ப்ரபாத் வீட்டிற்கு கூட்டிப் போய்விடுவது என்றுதான் ப்ளான் பி. இது பிளான் சி யாக புது கதை.

கமிஷனர் ஆஃபீஸ் கேட் கண்ணில் தெரியவும் ப்ரபாத் சொன்னான் “ அரண் உனக்கு எந்த கெடுதலும் பண்ணதில்ல சுகா….ஆனா உன்னால உங்க அப்பாவால அவன் ரொம்பவே கஷ்டபட்டாச்சு…….இப்பவும் நிரந்தரமா அவன் லைஃபை நாசம் பண்ணப் போற……அதுக்கும் நீ தனியா போக கூடாதுன்னு,  துணைக்கு என்ன அனுப்பி வச்சிறுக்கான்……கொஞ்சமாவது அவன புரிஞ்சிக்க மாட்டியா நீ…?”

“அதான் எனக்கு எதோ கிரே மேட்டர் பிங்க் மேட்டர்லாம் இல்லனு சொன்னியே..”

அவளை ஒரு பார்வை பார்த்தவன் அடுத்து எதுவும் சொல்லவில்லை.

போனதும் முதலில் காரை சுற்றி வளைத்தது ப்ரஸ் பீபுள்.

“உங்கள கிரிகெட்டர் அரண் கிட்நாப் பண்ணிட்டதா சொல்றாங்களே மேம்….”

“மன்னிக்கனும்….நானும் அரணும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம்…. பெலிக்‌ஸ் கூட என் இஷ்டத்துக்கு அகெய்ன்ஸ்ட்டா ஃபிக்‌ஸானது மேரேஜ்.

வேற வழி இல்லாம அரண் என்ன இப்டி ரெஸ்க்யூ பண்றதா ஆகிட்டு….இது கம்ப்ளீட்லி பெர்சனல் மேட்டர்…..இதால தேவை இல்லாம பப்ளிக்கை டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்”  அவள் சொல்ல சொல்ல அதிர்ந்து போகாமல் இருந்தது ப்ரபாத் மட்டும்தான்.

அரணுக்காக இவன் ஜஸ்ட் நவ் புரிஞ்சுக்க மாட்டியா என கெஞ்சியதும் பதிலுக்கு அவள் எகிறாமல்  ஜோக்கடித்தாளே அந்த நொடியிலிருந்து  இந்த ட்விஸ்ட்டை  எதிர்பார்த்திருந்தான் ப்ரபாத்.

அடுத்து சரமாரியாய் கேள்விகள்.

“அவர உங்களுக்கு எப்பவுமே பிடிக்காதே….”

“அது முன்னால உள்ள ஒரு மிஸண்டர்ஸ்டாண்டிங்…அவங்க என்னை எப்பவும் அப்படி பேசியதே கிடையாதே…”

“எப்ப இருந்து விரும்புறீங்க…?”

நெக்‌ஸ்ட் கொஷ்டியன்

“எப்ப வெட்டிங்..?”

‘கொஞ்ச நேரத்தில் அரண் வந்து அனவ்ன்ஸ் செய்வாங்க.” என்றவள் திரும்பி பார்க்கவும் தன் மொபைலை எடுத்து நீட்டினான் ப்ராபாத்.

“அவன் லைன்ல தான் இருக்கான் “ என்று மெல்ல கிசுகிசுத்தான். அவள் முகமெங்கும் வெட்க சிதறல். செம்மை ப்ளஷ்.

“அரண் “

“வெட்க படுறப்ப செமயா இருக்க விதுகுட்டி”

இன்னுமாய் கூடிக் கொண்டு போனது கன்னச் சிவப்பு பெண்ணுக்கு.

“இன்னும் கிளம்பலையா நீங்க…?”

“ம்கூம்….நீ முதல் தடவை அரண்ட்ட ஐ லவ் யூ மூட்ல பேசுறப்ப உன் ஃபேஸ் எக்‌ஸ்ப்ரெஷன பார்க்கிறதுக்காக டி.வி முன்னால வெயிட் பண்ணிட்டு இருந்தேன்…”

உள்ளுக்குள் தித்திக்கும் தீ மழை. ஆனால் இத்தனை கேமிரா முன் என்ன சொல்வாள் அவள்.

“வெட்டிங் டேட் அனவ்ன்ஸ் செய்யனும்….”

“எனக்கு இந்த நிமிஷம்னாலும் ஓகே….”

“அதை வந்து சொல்லுங்க….”

“ இன்னைக்குன்னு சொல்லவா…?”

அடுத்த பக்கம்