நனைகின்றது நதியின் கரை 12(2)

அதைவிட வர்ற வழியில் ஒரு கூட்டம் அவன் உருவபொம்மையை செருப்பால் அடித்து தீ வைத்தது இவன் பார்வையில் விழ……அதை தாண்டி வருவதற்குள் உயிர் கொதித்துப் போய் இவன்…

எல்லாம் இந்த சுகா பிடிவாதத்தால வந்த வினைதான….. இவளை நோக்கி தட தடவென வந்தான் ப்ரபாத்.

ஞாபகம் தெரிந்து ப்ரபாத் அவளை முழுப் பெயர் சொல்லி கூப்பிட்டது இல்லை. இன்று அத்தனை கோபமா? அதுவும் அரணுக்காக….. அரண் முன்னாலயே…..அதுவும் அவன் இவளை இப்டி கிட்நாப் பண்ணிட்டு வந்து அடச்சு வச்சிருக்கும் போது……உலகமே இவளை கைவிட்டது போல் ஓர் வலி…..கண்ணில் அதுவாக சுட சுட நீர் உற்பத்தி….

ஆனாலும் அம்மாவின் கையில் அடிவாங்கும் குழந்தை அழுதபடி அம்மாவின் காலையே ஓடிச் சென்று கட்டுவது போல்….. கையிலிருந்த பேட்டை தூக்கிப் போட்டுவிட்டு ப்ரபாத்தை நோக்கி ஓடியவள் அவன் கை மணிக் கட்டைப் போய் பிடித்தாள்.

“எதுக்கு என்னை திட்ற…?” கண்கள் குளமாகி இருக்க ப்ரபாத்தைப் பார்த்து கேட்டாள்.

சிறு வயதில் எதற்காவது பயந்துவிட்டாள் எனில் இப்படித்தான் போய் அவன் மணிக்கட்டை பிடிப்பது அவள் வழக்கம்.

வளர்ந்த பின் சுத்தமாய் இல்லாது போன விஷயம்…..இன்று வருகிறது.

மத்த நேரமாய் இருந்தால் நிச்சயமாய் உருகிப் போயிருப்பான் அண்ணன்காரன்.

இன்று கோபம் இறங்க மறுக்கிறது.

“அவன் என்ட்ட தப்பா…..” அவள் குற்றப் பத்திரிக்கை ஆரம்பிக்க

“அவன் உன்னை ஒன்னும் செய்திருக்க மாட்டான்…..” அறைந்தார் போல் வெட்டினான் ப்ரபாத்.

அவ்வளவுதான் கொதித்துப் போனாள் இவள்.

ஆக அரணுக்கு எதிராக என்றால் இவள் சொல்வதை இந்த விஷயத்தில் கூட நம்பமாட்டானா இவன்….? ஈகோ எக்குதப்பாய் ப்ரவோக் ஆகி எகிறியது.

“…அவன் என்ட்ட மிஸ்பிகேவ் செய்தான்னு நான் சொல்றேன்” புயலை ப்ரசவிக்க இருக்கும் வானம் போல் நின்றிருந்தாள் அவள்.

“இங்க பாரு…” அவள் கைகளை அவன் முன் நீட்டினாள். அரண் அவளை பிடித்த போது அவள் திமிறியதில் திருமணத்திற்காய் அணிந்திருந்த பரு நகைகளில் ஏதோ அவள் கைகளில் ஆங்காங்கு கிழித்திருந்தது. நகக் கீறல்கள் என்று சொன்னால் நம்பலாம் எனும் படியாய்….

எந்த சூழலிலும் அரணை சந்தேகப் பட்டிருக்க மாட்டான் ப்ரபாத்…..மற்ற நேரமாய் இருந்தால் என்னதுடா இது…? என கேசுவலாக விளக்கம் கேட்டிருப்பான் சுகாவுக்காக…..ஆனால் இன்றைய கோப கொந்தளிப்பில் அவன் அதை கூட செய்ய தயாராக இல்லை.

“அவன் எப்பவும் தப்பே செய்ய மாட்டான்…..எப்பவும் எதுனாலும் தப்பா செய்றது நீ தான்….” ப்ரபாத்தின் இந்த வார்த்தைகள் சுகவிதாவுக்கு என்னதாய் இருக்கும் என அரணுக்கு புரியும் தானே..

“ப்ரபு…”  என்றபடி அவன் எழுந்து வரும் முன்

“சோ நீ என்ன நம்பலை……அப்போ எனக்கு யாருமே இல்லை…. “ சொல்லியபடி வேக வேகமாக படிகளை நோக்கி ஓடினாள் பெண்.

“டேய் அழுதுட்டே போறாடா….கூப்டுடா மாப்ள….” வேற யாரு அரண் தான்.

“யாரு….? அவ?….உன்னத்தான் அழ வைப்பா….போட்டும் போ”

“ப்ச்…என்ன ப்ரபு நீ, இந்த நேரத்துல போய் சின்ன பிள்ள மாதிரி பிடிவாதம் பிடிச்சுட்டு…. போய் அவட்ட பேசுடா….”

“ஆனா ஒன்னுடா நீ சொன்னதுல ஒன்னு சரி…..அவ உன்ன மண்டைல போட்றுக்கனும் பேட்டால…..உனக்கு தெளிஞ்சிருக்கும்…..” சொல்லிவிட்டுப் பார்த்தால் அங்கே திரும்பவுமாக வந்து நின்றாள் சுகவிதா….

இப்படியே ஓடிப் போனா வெளிய போறது எப்படியாம்…..? ஆக ஐடியாவுடன் திரும்பி வந்திருந்தாள் அவள். சோ இப்டில்லாம் இந்த அரண் நடிச்சா இந்த பால் பாக்கட் ஏமாறாம என்ன செய்யுமாம்…? ஆனாலும் இந்த அரண் எனக்கு ரெக்கமென்ட் செய்ற அளவுக்கு ஆகிப் போச்சு என்ன? நடந்த பேச்சை கேட்டவள் இப்படியாக நினைத்து இன்னுமாய் முறுக்கிய படி  ப்ரபாத் கையிலிருந்த அவன் கார் சாவியை உரிமையாய் வெடுக் என பிடுங்கிக் கொண்டு விரைப்பாய் இறங்கிப் போனாள்.

ப்ரபாத் இருக்கும் போது அவளை யாரும் இழுத்துப் பிடித்தெல்லாம் அடைத்து வைக்க முடியாது என்பது அவளுக்கு தெரியாதா என்ன?

தன் நெத்தியில் இடக் கையால் அடித்து கொண்ட அரண் முகத்தில் அத்தனையையும் மீறி ரசனையும் புன்னகையும்…

வேக வேகமாக படி இறங்கி வந்தாள் சுகவிதா. ப்ரபாத் பேசியதில் அவளுக்கு படு வருத்தம் தான்…. ஆனால் அவனோடு உறவை முறிப்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காரியம்…..இந்த அளவுக்கு இந்த அரண் இவனை ப்ரெய்ன் வாஷ் செய்திருக்கான் நினைத்தபடியே அந்த வீட்டின் ஹாலில் இறங்கினாள்.

அடுத்த பக்கம்