நனைகின்றது நதியின் கரை 11(9)

சுகவிதாவுக்கு அரண் மேல் கடும் வெறுப்புதான் எப்போதும். அப்படித்தான் அவள் பல காலமாய் உணர்ந்தும் இருக்கிறாள். அவன் ஞாபகம் வந்தாலே கொதிக்கும்தான்.

ஆனால் அவனை சமீப காலமாகத் தான் நேரில் பார்க்கும் வாய்ப்புகள். ஏனோ நேரில் பார்க்கும் போது அப்படி ஒரு கொதிப்பை அவள் உணரவில்லை என்பது உண்மை.

அவன் என் எனிமி…அவன்ட்ட நான் இப்டித்தான் நடந்துகிடனும் என இவள் தன்னைத் தானே ஞாபகபடுத்திக் கொண்டுதான் நடமாட வேண்டி இருந்தது.

அதற்கு அர்த்தம் அவள் அரணைப் பார்த்து அட்ராக்ட் ஆனாள் என்றெல்லாம் இல்லை. இவள் எரிச்சல் படும் படி அவன் எதையும் செய்தது இல்லை. பார்வையில் கூட ஒரு கண்ணியம் இருக்கும். அவ்வளவே.

ஆக இன்றும் அதே போலும் ஒரு உணர்வு….

அடுத்தும் அவன் சொன்ன காரணங்கள் முழுதாய் ஏற்றுக் கொள்ளும் படியாய் இல்லை எனினும்,  முழு பொய்யாகவும் தோன்றவில்லை…

அதோடு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வில் ப்ராஃபிட் இவளுக்கு ஏராளம்….பெலிக்‌ஸ்ட்ட இருந்து தப்பிச்சுட்டா தானே…..ஜீவாவை தேட டைம் கிடச்சிருக்கு……ஆக ஒருவகையில் அவள் அரண் ப்ரசன்னத்தில் கம்ஃபர்டபிளாகவே இருந்தாள்.

ஆனால் அவன் பின்னிருந்து அணைக்கவும் மிரண்டு போனாள்.

ஆக எல்லாம் நடிப்பா? இதற்குத்தானா? துள்ளி திமிறி அவன் பிடியிலிருந்து விலக பார்க்கிறாள் அவள்.

ஆண் பிடியல்லவா? அவனது பிடியின் இறுக்கத்தை மீறமுடியவில்லை. இப்பொழுது அவன் கை அவள் இடையில் ஓட உச்ச கட்ட பயத்தில் மயங்கி சரிந்தாள் சுகவிதா.

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 12

Leave a Reply