நனைகின்றது நதியின் கரை 11(6)

சுகவிதாவிற்கு அம்மா எதற்காக இப்படி விசாரிக்கிறார் என்றெல்லாம் தெரியாது. ஏனெனில் புஷ்பம் அரண் பெயரை எல்லாம் உளறி வைக்கவில்லை.

“உனக்கு கல்யாணத்தைப் பார்த்து பயமா இருக்குன்னு நினச்சேன் சுகிமா….இப்ப என்னமோ இந்த மாப்பிள்ள தான் பிடிக்கலையோன்னு தோணுது…..”

இருந்த எமோஷனல் பிரஷரில் கதறிவிட்டாள் சுகவிதா. அப்பொழுதும் ஜீவாவைப் பற்றிப் பேச அவளுக்கு தைரியமில்லை.

“அந்த பெலிக்ஸ்‌ட்ட அவ்ளவு சொல்றேன்மா எனக்கு இந்த வெட்டிங்ல விருப்பம் இல்லைனு…அவன் என்னைப் பத்தி கண்டுக்கவே இல்லைமா……இந்த மேரேஜ் பத்தி அவன் ஏற்கனவே எல்லார்ட்டயும் சொல்லிட்டானாம்……அதனால நான் அவனை கல்யாணம் செய்துதான் ஆகனுமாம்…எவ்ளவு முக்கியமான விஷயத்தில என்னை, என் முடிவை அவன் மதிக்கலை? அதுவும் அவன் ப்ரெஸ்டீஜுக்காக….. இவனா பின்னால என்னை மதிச்சு குடும்பம் நடத்தப் போறான் ? எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்மா…..”

புஷ்பத்தின் மொத்த நிம்மதியை கொன்றுபோட இது போதுமானதாக இருந்தது. பையனிடம் போய் ஒரு பெண் தனக்கு விருப்பமில்லை என்று சொல்வதென்றால்? அதை கூட பையன் அசட்டை செய்வதென்றால்…..?கண்டிப்பாய் இது நல்லதிற்கு இல்லை….

அவர் தன் கணவனிடம் இதையெல்லாம் சொல்ல முடியாது. சொன்னால் இவர் எதை நினைத்து கலங்குகிறார் என்பதெல்லாம் அவருக்கு உறைக்காது.

‘நான் பார்த்த பையன்ட்ட எவ்ளவு தைரியம் இருந்தா இவ உன்னைப் பிடிக்கலைனு சொல்லுவா? அப்ப எனக்கு இந்த வீட்ல என்ன மரியாதை இருக்கு?’ என்று ஆடி விடுவார் ஆடி… அது ஒன்றும் ப்ரச்சனையை தீர்க்கப் போவது இல்லை. பெரிதாக வேண்டுமானல் ஆக்கும். இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? இன்னும் 7 நாளில் கல்யாணம்.

ஒன்றும் புரியாமல் நெஞ்சடைத்துக் கொண்டு வருகிறது அவருக்கு. உணர்வுகளில் உள்ளமெங்கும் சிறை சுவர்கள். எப்பொழுது இப்படி தவிப்பாய் இருந்தாலும் சர்ச்சுக்கு போவது அவர் பழக்கம். அங்குள்ள 24 மணி நேர ஜெப அறையில் அமர்ந்து ஆண்டவரை துதித்துப் பாடிவிட்டு வருவது அவரது வழக்கம்.

துதி விலங்குகளை கழற்றி சிறை கதவுகளை திறக்கும் என்பது அவர் அனுபவம்.

சர்ச்சை விட்டு வெளியே வரும் போது மனதில் காரணம் புரியாத சமாதானம். அதோடு எதிரில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது திரியேகன்.

“ வணக்கம், நல்லா இருக்கீங்களா மிசர்ஸ். அனவரதன்? சுகா மேரேஜுக்காக ப்ரேயர் பண்ண வந்தீங்களா? நானும் அதுக்காக ப்ரே பண்ணிக்கிறேன்….” என்றார் அவர்.

“கண்டிப்பா சார்….உங்களல்லாம் ரொம்ப டென்ஷனாக்கி இருப்போம்….தயவு செய்து அதெல்லாம் மன்னிச்சுருங்க….அவள ப்ளெஸ் பண்னுங்க…. அவ  லைஃப் நல்லா இருக்கனும்….” எப்படியாவது மகள் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமே என்ற தவிப்பு அவளது அம்மாவிடம்.

“சுகா ஒரு குழந்த….அவ நல்லாத்தான் இருப்பா….மத்த எதையும் நான் மனசுல வச்சுகிடலை மிசர்ஸ். அனவரதன்.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு வாண்டு இவர்களிடமாக ஓடி வருகிறது. 4 அல்லது 5 வயது இருக்கலாம். அரையடி நீளத்தில் காலடி அகலத்தில் ஒரு சிறு அட்டை அதை ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டு ஓடுகிறது.

அதில் ஒரு புறம்

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.

மறுபுறம்

நானே வழியும் சத்யமும் ஜீவனுமாயிருக்கிறேன்.

என்று பிரிண்டாகி இருந்த வேத வார்த்தைகள்.

திருப்பிப் பார்த்து படித்துக் கொண்ட இருவர் மனதிலும் நிம்மதி அலைகள்.

அதன் பின்பு தன் மகனை சந்திக்கும் போது திரியேகன் சொல்லிவிட்டார். “சுகா விஷயத்துல நீ சொல்றபடி செய்டா…..எல்லாம் சரியாத்தான் வரும்” அவருக்கு அப்படி தோன்றிவிட்டது.

அங்கு சுகவிதா வீட்டிலோ புஷ்பம்

“உனக்காக ப்ரேயர் பண்ணிட்டு இருக்கப்பவும் இந்த வார்த்தைதான் கிடச்சுது….வெளிய வரவும் ஒரு குட்டி இதையே கொடுத்துட்டுப் போகுது….மனச போட்டுக் குழப்பிக்காத எல்லாம் நல்லாத்தான் நடக்கும்” என்றார்.  ஆனால் அப்படி என்னது நல்லதாக நடந்துவிடப் போகிறது என்றுதான் அவருக்கு தெரியவில்லை.

சுகவிதாவுக்கோ என்னது நல்லதாக நடக்கும் என்று கூட புரிந்துவிட்டது.

‘கண்டிப்பா ஜீவன் வந்துடுவான்’

FB வழியா ஜீவன் மெசேஜ் செய்தால் அரண் அதைப் பார்த்திடுவானே….அதான் ஜீவன் FB ல எதுவும் சொல்லலை. பட் வந்துடுவான்.

அடுத்த பக்கம்