நனைகின்றது நதியின் கரை 11(5)

“ப்ரபு நீ இதுல இன்வால்வாகி இருக்கன்னு எந்த வகையிலும் தோணக் கூடாது … அன்னைக்கு ஐபில் இருக்றது ரொம்ப நல்ல விஷயம்….ரெண்டு பேரும் க்ரவ்ண்ட்ல நிப்போம்…அங்கிளுக்கு எந்த டவ்ட்டும் வராது…. கடைசில நான் மட்டும் வெளிய வந்துடுவேன்…நீ க்ரவ்ண்ட ஹேண்டில் பண்ணிக்கோ….”

“மாப்ள நீ அவள மறச்சு வைக்க உன் வீடுதான் பெஸ்ட்….. கிட்நாப் பண்ணி உன் வீட்லயே  கொண்டு வந்து மறச்சு வைப்பன்னு நினைக்க சான்ஸ் கம்மி….. முதல்ல செம்பரம்பாக்கம் லேக் பக்கத்துல இருக்ற சுகாவோட ஃபார்ம் ஹவுஸ்கே போய்டுங்க…..

அனவரதன் அங்கிள் நினச்ச மாதிரி அங்க எதுவும் செட் ஆகலைபோல…..சும்மா பூட்டிதான் கிடக்குது…..இங்க உன் வீட்ல சுகாவ தேடி அங்கிள் வந்துட்டு போனதும் நீ சுகாவோட இங்க வந்துடு….…” ஒவ்வொன்றிலும் ஆயிரம் கவனமெடுத்து ப்ளான்.

“அதெல்லாம் சரி…அங்கிள் இதுக்கு என்னடா சொல்லுவாங்க…?” அரணிண் அப்பாவைப் பற்றி ப்ரபாத்தின் கன்சர்ன்.

“கண்டிப்பா சுகவி எக்கேடும் கெடட்டும் உனக்கென்னன்னு சொல்ல மாட்டாங்க…. நான் அவள மேரேஜ் பண்ண போறேன்னு சொன்னாலும் கண்டிப்பா நோ சொல்ல மாட்டாங்க….

மன்யத் விஷயத்துல நான் ஹெல்ப் கேட்டப்ப அப்பா பிகேவ் பண்ண விதம் அப்படி….ஆனா இதுக்கு என்ன சொல்லுவாங்கன்னு தெரியலை….இதவிட பெட்டரா எதுவும் சொன்னாலும் சொல்லுவாங்க….பேசிப் பார்க்கனும்….” அரணின் அணுகுமுறை டுவர்ட்ஸ் அப்பா.

“அதோட எல்லாத்துக்கும் மேல ரொம்ப முக்கியமான விஷயம்….நீ அவள கூட்டிட்டு வந்த பிறகு, அவ ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிச்சு கூலான பின்னால……இப்டி மிரட்டினாளே அதுக்காக அவ வாய்ல நல்லா நாலு அடி போடு…” வேற யாரு ப்ரபாத்தான்.

“என் கோட்டா ஏற்கனவே ரெண்டு இருக்குது ….அன்னைக்கு பீச்ல வச்சு மிரட்டினாளே அதுக்கு….. இதையும் சேர்த்தா சிக்‌ஸர்….. சாத்திடுவோம்…..ப்ரொவைடட் உன் தங்கச்சி அதுக்கு ஒத்துகிடனும்…”

“அட பாவி…”

“பின்னே அதுக்கு ஒரு தடவை ஜெயிலுக்கு அனுப்புவாளே யார் போறதாம்…?”

“அதுக்கில்லடா உனக்கு சிக்‌ஸர் அடிக்க என் தங்கச்சிதான் கிடச்சாளா?”

“அதானப் பாத்தேன் பால்பாக்கெட் வெள்ளெலிய விட அவ விரோதிய சப்போர்ட் பண்ணுதேன்னு…..”

அடுத்து அரண் சென்று நின்றது தன் அப்பாவிடம். அவரிடம் நடந்த அனைத்தின் சம்மரி சொன்னான் அவன். அதோடு அவனது அடுத்தகட்ட திட்டத்தையும். அப்பா இவன் வரையில் ஆங்ரி பெர்சன் கிடையாது ஆனால் அவரிடம் பேசும் போது ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்க்கும் எஃபெக்ட் இருக்கும். தன் தவறுகள் புரியும்.

“அடுத்தவங்க நம்ம பத்தி என்ன நினைப்பாங்கன்னு அனவரதன் ரொம்ப வருத்தப் படுவார்தான்….. ஆனா எப்பவும் நியாய அநியாயம் பார்க்கனுமே தவிர மான அவமானம் பார்க்க கூடாதுன்றது என் நம்பிக்கை…. அதோட சுகாவுக்கு இப்ப நீ ஹெல்ப் பண்ணாம விட்டு அவ எதாவது செய்துகிட்டான்னா வாழ்நாளைக்கும் உனக்கும் எனக்கும் ஏன் அந்த அனவரதனுக்குமே வலிக்கும். ஆனாலும் இதப் பத்தி முடிவு சொல்றதுக்கு எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.” என முடித்தார்.

ங்கு சுகவிதா வீட்டிலோ புஷ்பம் பரிதவிக்க தொடங்கி இருந்தார். முதலில் மகள் இயல்பான கல்யாண டென்ஷனில் இருக்கிறாள் என்றுதான் அவரும் நினைத்திருந்தார்.

அதோடு பல மாதமாய் இந்த பெலிக்‌ஸும் விரும்பி மகளை பெண் கேட்ட கதை அவருக்கும் தெரியும். விரும்பி கேட்கிறவன் மகளை நன்றாக வைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கை.

ஆனால் நாள் போகப் போக அவருக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது. அவர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்தான். ஆனால் திருமணத்திற்குப் பின் அமெரிக்க வாசி. பலதரப்பட்ட நட்பிற்கு அறிமுகமானவர்.

இப்பொழுதுதெல்லாம் கல்யாணம் நிச்சயமான பிள்ளைகள் ஃபோனிலேயே உயிர்வாழ்வதும், கிடைக்கும் சான்ஸிலெல்லாம் சங்கோஜமின்றி மீட் பண்ணிக் கொள்வதும் என்று இருப்பது தான் இயல்பு என அவருக்கும் தெரியும்.

ஆனால் சுகியும் மருமகானாய் வரப் போகிறவனுக்கும் இடையில் அப்படி எந்த கெமிஸ் ட்ரியும் இல்லை. இருவரும் நேரில் சந்திக்க அனவரதன் அனுமதிக்க மாட்டாராய் இருக்கலாம், ஆனால் மகள் ஃபோனில் பேசியே தெரியவில்லையே…..

அதோடு அது இது என்று ஒவ்வொரு விஷயம் விசாரிக்கவும் பெலிக்ஸ் வீட்டில் இருந்து யார் யாரோ வர்றாங்க போறாங்க…..மாப்ள பையன் ஏன் வரவே இல்லை….?

மகள் சிரித்துப் பார்த்து பலயுகம் ஆன மாதிரி ஒரு ஃபீல்….

அவரே சுகியை தனியாக சந்தித்துப் பேச நினைத்தால் அதற்கு வழி இல்லை. எப்பவும் கூட இருந்து வில்லடிக்கும் ஒரு கோஷ்டி. ஏதோ மனதிற்குள் பலமாய் நெருடுகிறது பெற்ற அன்னைக்கு.

சுகி யாரையும் லவ் பண்றாளோ? அது அவ அப்பாக்கும் தெரிஞ்சிருக்குமோ? அதான் இப்டி நாசுக்கா அடச்சு வச்சிருக்கிறாரோ? மிரண்டு போனார் அவர்.

எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார் இவர் ஆனால் மகளின் கல்யாண வாழ்க்கையை போய்  ஹஸ்பண்டோட ஈகோக்கு இரையாக்க முடியாது. அதோடு சுகிக்கு காதல் என்றதும் ஏனோ மனக் கண்ணில் அந்த அரண் முகம் தான் வருகிறது இந்த அம்மாவுக்கு.

Are ல் வைத்து பார்த்ததுதான். மகள் முகம் வாடி இருக்கவும் அவன் முகத்தில் வந்து அமர்ந்த அந்த கன்சர்ன்ட் லுக். தாயுள்ளத்தை அப்பொழுதே அது அசைத்தது உண்மை.

ஆரம்பத்துல இருந்து எல்லாம் ஒழுங்கா போயிருந்தா இந்த பையனே சுகாக்கு அமைஞ்சிருந்தாலும் அமஞ்சிருப்பான்…. மகளை மட்டுமல்ல அவ பிறந்த வீட்டையும் சந்தோஷமா வச்சுக்க தெரிஞ்சவன்….. என்று ஒரு எண்ணம் அப்பொழுதே.

அரண் றதால அப்பா ஒத்துக்க மாட்டார்னு நினச்சு மகள் மனசுல உள்ளத சொல்லவே இல்லையோ? அதை அவரா தெரிஞ்சு வச்சுகிட்ட அவ அப்பாவும் இவர்ட்ட சொல்லலையோ? இப்படியாய் ஓடியது அவர் மனது.

மகளை தனிமையில் பிடித்து விசாரித்தார்.

அடுத்த பக்கம்