நனைகின்றது நதியின் கரை 11(4)

உன்னையும் அதை மாத்த விட மாட்டேன்….உன் ஸ்டார்டம்……உனக்கு அரண் மேல உள்ள கோபம் எல்லாம் எனக்கு வேணும்….எனக்கும் அரணைப் பிடிக்காது என்றான் அவன். மொத்தத்தில் இவள் மூலம் செலிப்ரிடி ஸ்டேடஸ் எய்ம் செய்தான் பெலிக்‌ஸ்.

அதோடு போகிற போக்கில் இவள் திருமணத்தை இன்னுமாய்  ப்ரிபோன் செய்து 15 நாளில் வெட்டிங் என அறிவித்துவிட்டு போனான் அந்த புல் தடுக்கி பயில்வான்.

சுகவிதா தன் அப்பாவிடம் மறுப்பை சொல்ல தைரியமின்றிதானே இவனிடம் வந்து சொல்கிறாள்? அப்படியானால் வீட்டை மீறும் தைரியம் அவளுக்கு இல்லைதானே…ஆக எப்படியும் நடந்துவிடும் திருமணம் என நினைத்திருந்தான் பெலிக்‌ஸ்

ஆக அத்தனை வழிகளும் அடைக்கப்பட்டு போக அதோடு வெகு அருகில் திருமணம் என்றாக துடித்துப் போனாள் சுகவி. அதோடு இப்பொழுது ஒருவித ஹவுஸ் அரெஸ்ட்டை வேறு இம்ப்ளிமென்ட் செய்திருந்தார் அனவரதன்.

“ஒரே பொண்ணு கல்யாணம் அத்தனை முறையோடயும் பெருசா செய்யப் போறேன்”  அப்டினு சொல்லி சொந்தக்காரங்க குடும்பத்துக்காரங்க என ஒரு பெரும் கூட்டத்தை தன் வீட்டில் சேர்த்துவிட்டார் அவர்.

இவளுடன் இதற்கு முன் இவள் பார்த்திருக்க கூட செய்யாத கசின்ஸ். ஆறேழு பெண்கள் எப்பொழுதும் இவளை சுற்றி. எதையும் கோர்வையாய் ரெண்டு நிமிடம் தொடர்ந்து இவளை சிந்திக்க கூட அவர்கள் அனுமதிக்கவில்லை.

அப்பாவிற்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறுவதை எல்லாம் நினைத்துப் பார்க்க கூட முடியவில்லை சுகவியால். அப்படியே போய் மட்டும் என்ன செய்யவாம்? ஜீவாதான் இவளை தொடர்பு கொள்ளவே இல்லையே….இந்த அரண்தானே ஏதோ உளறிக் கொண்டு கிடக்கிறான்.

இருந்த விரக்தியில் தான் அவள் ஜீவாவிற்கு அந்த அல்டிமேட்டம் நிர்ணயித்தாள்.  “வெட்டிங்  வென்யூல என்டர் ஆகிற வரைக்கும் உங்களை எதிர் பார்ப்பேன் ஜீவா…..அப்ப வந்தீங்கன்னா கூட  உங்க கூட வந்துடுவேன்…. ஆனா அப்பவும் வரலைனா செருமனில எனக்கு இந்த வெட்டிங்ல இஷ்டம் இல்லைனு சொல்லிடுவேன்…. ஆனா நான் இந்த வெட்டிங்கை நிறுத்துனா என் அப்பா சூசைட் பண்ணிப்பேன்னு சொல்லிருக்காங்க….அவங்க ஏன் சாகனும்…. என்னையத்தான் உங்களாலயும் நம்ப முடியலை, என் அப்பாவாலயும் புரிஞ்சுக்க முடியலை…. அதனால நான் தான் சாகனும்….…..கைல பாய்ஷனோட தான் வெட்டிங் வென்யூவே போவேன்…

என் அப்பாவுக்கும், உங்களுக்கும் என் வாழ்க்கை மேல, என் மேல எந்த அக்கறையும் இல்லை…..உங்க ரெண்டு பேருக்கும் நான் தேவை கிடையாது……உங்க ஈகோ உங்க நம்பிக்கை அதுதான் உங்களுக்கு முக்கியம்…..சோ வாட் எல்ஸ் இஸ் லெஃப்ட் ஃபார் மீ….”

இதற்குப் பின் அரணுக்கும் ப்ரபாத்திற்கும் யோசிக்க வேறு எந்த வழியுமின்றிப் போனது.

“சாரிடா ப்ரபு எனக்கு வேற வழி தெரியலை….”

“நானும் இத தான்டா செய்றதா இருந்தேன்….….. கூட்டிட்டு வந்து எங்கயாவது ஒரு ஒன் வீக் ஒளிச்சு வச்சுட்டு இந்த கல்யாண களேபரமெல்லாம் முடிஞ்சதும் அவள அவங்க அப்பாவ ஹேண்டில் செய்ய சொல்லலாம்னு…… “

“அதெல்லாம் நீ செய்தா சரியா வராது ப்ரபு….. அம்மா அங்க வெட்டிங் வென்யூ ல இருக்றப்ப நீ இங்க இவள தூக்கினா அவ்ளவுதான்….அனவரதன் அங்கிள் பத்தி தெரியாதா? என்னை தவிர மத்தவங்க அவங்கட்ட எப்டி நடந்துகிடுறாங்களோ அப்டிதான் அவங்களும் நடந்துப்பாங்க…..

கல்யாண வீட்ல பொண்னு காணாம போயி….…கிட்நாப் பண்ணதும் நீ ன்னு தெரிஞ்சா…..அம்மாவ பிடிச்சு வச்சுடுவார்…… அதுக்காக அம்மாவ வெட்டிங்கு அனுப்பாமல் இருந்தன்னா நீ ஏதோ ப்ளான் செய்றன்னு முதல்லயே அலர்ட் ஆகிடுவார்…..சுகா மாட்டிப்பா….

பெருசா எதுவும் காரணம் இல்லாம அம்மாவாவது சுகவி வெட்டிங்க்கு போகாம இருக்றதாவது? …அதோட நீ சுகவிய கூட்டிட்டு வந்தா, மீடியா கன்னா பின்னானு எழுதும்……எதுனாலும் நான் ஃபேஸ் பண்றது தான்டா சரி…”

“நீ சொல்றது சரி தான்டா……ஆனா நான் செய்தா சுகாக்கு இதோட இன்டென்ஷன் அவள காப்பாத்றதுன்னு புரியும்…..ஆனா நீ செய்தா அத புரிஞ்சிப்பான்னு நிச்சயமா சொல்ல முடியாதே….”

“உன் தங்கச்சி தான….அவளுக்கு என்னைக்குத்தான் எதுதான் சரியா புரிஞ்சுது……? ஆனா அதுக்காகலாம் அவள இந்த சிச்சுவேஷன்ல விட்டுட முடியுமா?”

“அதுக்கில்லடா….அவ பாட்டுக்கு கிட்நாப்னு லீகல் ஆக்க்ஷன் எதாவது போய்ட்டானா…..உன் கிரிகெட் கரியர் வரைக்கும் அடிக்கும்….” தவிப்பாய் ப்ரபாத். அவனுக்கு சுகாவும் ஸேஃபா இருக்கனும் அதற்காக அரணை பலியிடவும் அவனால் முடியாது

“பாரு நீயும் அவள மாதிரியே யோசிக்ற பாரு…… ஜீவாவும் அரணும் வெவ்வேறங்க்ற மாதிரி…..அவ ஜீவான்னு என்னை தான்டா லவ் பண்ணிட்டு இருக்கா…… எப்டியும்  அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு என்னைத் தான் நம்பிக்கிட்டு இருக்கா…..

என்னமோ அவ வேற யாரையோ லவ் பண்ற மாதிரியும், என்னைய அவளுக்கு பிடிக்காதுன்ற மாதிரியும்…. ஆனாலும் தேவையில்லாம நான் குறுக்க போற மாதிரியும் இதென்ன அப்ரோச்? எதுனாலும் அவளுக்கு நான் தான் செய்தாகனும்….நல்லதோ கொட்டதோ அதோட கான்சிக்யூயன்ஸையும் நான் தான் ஃபேஸ் பண்ணி ஆகனும்”

அசந்து போய் தன் நண்பனைப் பார்த்தான் ப்ரபாத். மனதளவில் இதுவரை தான் சுமந்திருந்த சுகாவை அரணிடம் மானசீகமாக ஒப்படைத்தான் அவன் அக்கணம். இனி அவன் அவள் அரண்.

அப்புறமென்ன பக்கா ப்ளாட் ஃபார் ப்ரித்விராஜ் செங்க்யுத்தா ஸ்டைல் வெட்டிங் அப்டின்னு நினைச்சுடாதீங்க….

அவளை கடத்தி காப்பாற்றி வந்துவிட்டு கல்யாண களேபரம் முடியவும் அவள் விருப்பப்படி வீட்டிற்கே அனுப்பி விடுவது என்ற முடிவுடன் தான் அப்போதைக்கு.

ப்ளானிங் அண்ட் ப்ளாட்டிங் பை கேப்டன் அண்ட் வைஸ் கேப்டன் அலோன்.

அடுத்த பக்கம்