நனைகின்றது நதியின் கரை 11(3)

ஜீவாவின் குரலை நேரில் கேட்டிருக்கிறாள் சுகவி. அதுவும் சில நொடிப் பொழுதுகள். ஃபோனில் இல்லவே இல்லை. ஆனால் இந்த விது வில் அவள் உள்ளம் துள்ள முதலில் ஜீவா என அதை தன் குரலில் காண்பித்தாள் தான்.

ஆனால் அடுத்து அரண் அதற்கு பதில் சொல்லும் முன்பாக கூட அவள் அந்த மாயையிலிருந்து விடுபட்டுவிட்டாள். ப்ரபாத்துடன் ஜீவா வந்திருந்தால் இந்த பால்பாக்கெட் ஏன் அரண் தான் ஜீவன் என உளறிக் கொண்டிருக்கப் போகிறான்? ஆக அரண் ஜீவா போல் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறான்…அண்ட் திஸ் விது இஸ் ஃப்ரெம் அரண் த ஆக்டர்.

கத்த முடிந்த அளவு கத்தி கொதித்துக் கொண்டு வருவதையெல்லாம் அவன் மீது கொட்டி தீர்க்க வேண்டும் போல் வருகிறதுதான். ஆனால் அப்பா காதில் விழுந்தால் ஜீவாவை கண்டு பிடிக்க இருக்கும் கதவும் கூட அல்லவா அடைந்து போகும்.

ஆக “ப்ரபா நான் உயிரோட வேணும்னு நினச்சன்னா எனக்கு ஜீவாவ கொண்டு வர வழியப் பாரு….நான் செத்தாலும் சாவனே தவிர  உன் சாடிஸ்ட் ஃப்ரெண்டோட ப்ளாட்டுக்கு  பலியாக மாட்டேன்….”  இணைப்பை துண்டித்து விட்டாள் சுகவி.

அடுத்து அவசரமாக ஜீவாவை FB ல்  தேடினாள். அதே நேரம் அரணும் FB இல் தான் லாகின் செய்தான்.

அதிலிருந்து வாய்ஸ் கால் அவளுக்கு.

இணைப்பை ஏற்றவள் கதறும் சத்தம் வாய் வழியே வெளியேறி அப்பா காதில் விழுந்து விடக் கூடாது என தன் ஒரு கையால் வாயை இறுக்கி மூடிக் கொள்ள அவள் விம்மும் சத்தத்தில் செத்துப் பிழைத்தான் கேட்டிருந்தவன் சில நூறு முறை.

“விதுமா….ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா கேளேன்……ப்ளீஸ்டா….ப்ளீஸ்பா…” அரண் இதுவரை யாரிடமும் எதற்காகவும் கெஞ்சாத அளவில் கெஞ்ச

அவன் குரல்தான் அடையாளம் தெரிகிறதே சுகவிக்கு…..இனி என்ன இருக்கிறதாம்…..??

“என் ஜீவாவ என்ட்ட இருந்து பிடிங்கிட்டதாவோ……. அவங்கள ரீச் பண்ண முடியாம எல்லா வழியையும் அடைச்சுட்டதாவோ கனவு காணாத….. அவங்கட்ட பாஸ்வேர்டை வாங்கிட்டா…..நீ அவங்களாக முடியுமாடா…..ஐ நோ கவ் டூ ரீச் ஹிம்….அவங்களும் அவ்ளவு ஈசியா என்னை விட்டு கொடுத்றமாட்டாங்க…..கண்டிப்பா உன்ட ஏமாந்து போக மாட்டாங்க….” அரணிடம் ஏன் அழ வேண்டும்? அவனிடம் சவால்விட்டுவிட்டு இணைப்பை துண்டித்தாள்.

அரணுக்கும் ப்ரபாத்துக்கும் என்ன செய்யவென்றே தெரியவில்லை. ஒரு வார்த்தை இவனை காதலிப்பதாக சுகவி ஒத்துக் கொண்டால் போதும்…அரண் அவளை எப்படியும் உள்ளிருந்து வெளியே கொண்டு வந்துவிடுவான் தான். இப்படி முடியில்லாத மொட்டைப் பிடிவாதம் பிடிப்பவளை என்ன செய்வதாம்?

அடுத்து ப்ரபாத் அரணின் எந்த அழைப்புகளையும் அவள் ஏற்கவே இல்லை. இப்பொழுது என்ன செய்யவாம்??? அரணுக்கு இல்லை சுகவி என விட்டுத்தான் ஆக வேண்டும்…..விருப்பம் இல்லாதவளை வேறு என்ன செய்யவாம்? ஆனால் அப்படி விட்டுவிடவும் முடியவில்லை. காதல் அரண் புறம் ஒருதலையாக இருந்தால் அப்படித்தான் முடிவு எடுத்திருப்பார்கள் நண்பர்கள். அதுதான் நியாயமும் கூட.

ஆனால் இந்த சுகவியோ FBல் விடாது பெய்யும் அடை மழைபோல் அழுகையும் கெஞ்சலும் மிரட்டலுமாக ஜீவாவுக்கு செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள். எப்படியும் அவனுக்கும் தானே அந்த அக்கவ்ண்ட் டீடெய்ல் தெரியும் ஒரு முறையாவது பார்ப்பான் தானே……

ஆக இப்பொழுது டெக்‌ஸ்ட் மெசேஜிலும் அரண் சுகவிதாவுக்கு அனைத்தையும் விளக்கிப் பார்த்தான் தான்….அது ஒன்றைத்தானே அவள் படிக்கவாவது செய்கின்றாள்?

ஆனால் அதையெல்லாம் சுகவிதா ஏற்றுக்கொண்டால் கதை என்னாவதாம்? சுகவிதா எல்லாவற்றையும் படித்தாள்தான். கவன கவனமாக படித்தாள்தான். சாரிமா நான் அரணை நம்பி ஏமாந்துட்டேன்…..நான் வந்து உன்னை நேர்ல பார்க்றேன் என்ற வகையாக ஜீவா எதாவது சொல்லிவிட மாட்டானா என்ற ஒரே நோக்கத்திற்காக……

ப்ளீஸ் ஜீவா புரிஞ்சுகோங்க ஜீவா…..அரணோட பணம் அந்தஸ்து அப்பியரென்ஸ் எதுவும் எனக்கு பிடிக்காது…ஐ ஹேட் ஹிம்…..எனக்கு உங்களை மட்டும்தான் பிடிக்கும்….தயவு செய்து வந்துடுங்க…… இந்த  டெக்‌ஸ்ட்டை மட்டும் ஆயிரமாயிரம் முறை அனுப்பிக் கொண்டிருந்தாள் சுகவிதா.

ஒவ்வொரு நாளும் நேர் கண்ட நரகமென கொடுமையாக கழிந்தது ஒரு மூன்று நாட்கள் இந்த மூவருக்கும்.

ன்று அந்த பெலிக்‌ஸ் இவளை சம்பிராதயபடி பெண் பார்க்க வருகிறான். அப்படியே தட்டு மாற்றிக் கொள்வதாகவும் ஏற்பாடு.

அவள் அம்மாவிடம் அழுது கெஞ்சி பார்த்தாள் சுகவிதா. ஆனால் ஏன் வேண்டாம் என்பதற்கான காரணத்தைத் தான் அவளால் உருப்படியாக சொல்ல முடியவில்லை. ஜீவாவை என்னவென்று சொல்லுவாள் இப்பொழுது??? கற்பனைக் காற்று நிலையல்லவா அவனது ?

“நானும் கல்யாணம்னதும் இப்டித்தான் சுகிமா பயந்தேன்……பயத்துல எனக்கு ஃபீவரே வந்துட்டு…..ஒரு டென்டேஸ் நான் எழும்பவே இல்லை….அவ்ளவு பயந்தேன்….பட் கல்யாணத்துக்கு அப்றம் நாள் போகப் போக எல்லாம் சரியா போச்சு கண்ணா….” அவர் ஃபோபியா பொண்ணு  பயந்து போய் அழுதுன்னு நினச்சுட்டார்.

ஆக எந்த தடையும் இல்லாமல் வந்து நின்றான் பெலிக்‌ஸ்…… இப்பொழுது இது தான் லாஸ்ட் சான்ஸ். அவள் நம்பிக்கையும் இதுவே. பெலிக்‌ஸிடம்  தனியாக பேச வேண்டும் என்றாள் சுகவிதா.

அனைவரும் ஒத்துக் கொள்ள ஒரு வகையில் பெரும் நிம்மதியாக இருந்தது சுகவிதாவுக்கு.   அவனே இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டால் பின் அவளுக்கு ஜீவாவை தேட நாள் கிடைக்குமே…..

பெலிக்‌ஸுடன் பேச கிடைத்த வாய்ப்பில் தனது விருப்பமின்மையை தெளிவாக இவள் எடுத்துச் சொல்ல, அவன் அதை கண்டு கொள்ளவே இல்லை. எல்லார்ட்டயும் சொல்லியாச்சு நீ தான் என் வைஃப்னு…அதை மாத்த என்னால முடியாது….

அடுத்த பக்கம்