நனைகின்றது நதியின் கரை 11(2)

“ஓகே சுகா…அப்ப நான் கிளம்புறேன்….பார்க்கலாம்…பை அங்கிள்…” என்ற படி ப்ரபாத் விடை பெற பேந்த பேந்த விழித்தபடி விடை கொடுக்க வேண்டியதாயிற்று அவளுக்கு.

ஆனால் அடுத்த நிமிடம் அவளுக்கு டெக்‌ஸ்ட் செய்தான் ப்ரபாத்.

‘தனியா இருந்துட்டு கால் பண்ணு …’ அனவரதன் மகளை விட்டு நகர்வதாய் இல்லை. வேறு வழி இன்றி பாத் ரூமிற்குள் போய்  ஃபோன் பேச வேண்டியதாயிற்று அவளுக்கு. அது ஒன்றும் நல்ல ஃபீல் தரவில்லை. கில்டி கான்ஷியஸ், மாட்டிக் கொள்வேனோ என்ற பயம், ஜீவா என்ன சொல்ல போகிறானோ என்ற தவிப்பு,  இனி என்ன நடக்கும் என்ற ஆன்சைடி…

இந்த சூழ்நிலையில் தான் அரண் முதன் முதலாக அரணாக அவளுடன் காதல் பேசியாக வேண்டிய கட்டாயம்.

ஆம் ப்ரபாத் வீட்டில் காத்திருந்த அரண் கால் ஆஃப்டர் கால்.

சுகா வீட்டைவிட்டு வெளியே வரவும் ப்ரபாத் உள்ள நிலையை அரணிடம் சொல்லிவிட்டான். ஆக கான் கால் ஆப்ஷன் மட்டுமே பாக்கி இருப்பாத உணர்ந்து சுகாவின் காலுக்காக இருவரும் வெய்டிங்.

முதலில் ப்ரபாத்தான் விஷயத்தை அவளுக்கு சொன்னான். இன்ஃபாக்ட் அரண் கான் காலில் இருப்பது கூட அவளுக்குத் தெரியாது.

“ சுகா சொன்னா புரிஞ்சிக்கோ….. நீ ஜீவான்னு கூப்டுகிட்டு இருக்றது நம்ம அரணைத்தான்…. அட்னு கவிதை எழுதுறது அவன் தான்…. மன்யத் விஷயம் எல்லாம் சால்வ் பண்ணதும் அவன்தான்…” எத்தனை நிமிடம் அவளிடம் பேச முடியுமோ…சுத்தி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் அவன்.

முதல் வரி காதில் விழவும் ஏதோ லைன் ஃபால்டில் விஷயம் தனக்கு காதில் சரியாக விழவிலையோ எனத்தான் நினைத்தாள் சுகவிதா. பாத்ரூமில் சிக்னல் இப்டி கன்னா பின்னானுதான் இருக்கும் போல….

ஆனால் அவள் எவ்வளவு கூர்ந்து கவனித்தாலும் இரண்டாம் மூன்றாம் வரிக்கும் அதே அர்த்தம் தானே வருகிறது…. அதுவும் மன்யத் விஷயத்தை சால்வ் பண்ணீயது அரணாமே…..

இடி இடி என இதயம் இடிக்கும் ஓசை இவள் காதில் விழுகிறது. மூச்சிரைக்க, ஏதோ அடைத்துக் கொண்டு வருவது போல் ….இது என்ன  உணர்வு…? இதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் ? காலுக்கு கீழிருந்த பூமி காணாமல் போனது போல் ஒரு நிலை…. அட்டர் பிட்டர்னெஸ்….அதுவும் ப்ரபாத்திடமிருந்து இப்படி ஒரு செய்தி என்றால்….

கட கட வென ஏதேதோ புரிகின்றது……

ஆக அரணிடம் ஜீவா தன்னை விட்டுக் கொடுக்க காரணம் இது தானா? சமீப காலமாக அரண் இவளிடம் சாஃப்டாக நடந்து கொள்வது போல் நடிப்பதன் நோக்கம் இதுதானா?  Are இல் அவன் பார்த்த கரிசனைப் பார்வைகள்…. அந்த லாக் ஹவிஸ் இன்சிடென்ட்…. உதவும் நோக்கம் போல் ஓடி வந்த ஸ்விம்மிங் பூல் சினாரியோ…..ஒவ்வொரு முறையும் அவன் நல்லவன் போலவும் இவள்தான் சரியில்லை என்பது போலவும் உணரவைத்தானே…..

“அந்த அரண் பையனும் ப்ரபா மாதிரி நல்ல பையனாத்தான் தெரியுது…..  நீயும் உங்கப்பாவும் தான் சும்மா சும்மா அந்த பையன்ட்ட கொம்பு சீவி சண்டித்தனம் பண்றது…. அவங்க பரம்பர பணக்காரங்கன்னு உங்கப்பாவுக்கு ஒரு இன்ஃபிரியாரிடி காம்ளெக்‌ஸ்…..

வசதியானவங்கனாலே கெட்டவங்கதான்னு ஒரு வன்மம்…… டு த பாய்ண்ட் சொல்லனும்னா….உங்கப்பாவுக்கு அவங்க வீடைப் பார்த்து ஜெலஸ்…அதை உன் தலைல நல்லா ஏத்தி வச்சுருக்கார்….. “ அம்மா இப்படி கமெண்ட் சொல்லும் படி நடந்து கொண்டானே….எல்லாம் இதுக்காகத்தானா……

இவளை காதலிப்பது போல் அரண் இவளது ஜீவாவை நம்ப வைத்திருக்கிறான்.

ஜீவா மன்யத் விஷயத்தில் இந்த அரணிடம் உதவி கேட்டதும், அரண் மன்யத்தை மிரட்டி துரத்திவிட்டு அதற்கு ப்ரதியுபகாரமாக ஜீவாவை இவளிடமிருந்து விலக சொல்லி கேட்டிருக்கிறான். அதுவும் தான் சுகவிதாவை காதலிப்பதாக சொல்லி… இல்லையெனில் ஜீவா இவளை விட்டுக் கொடுப்பதாவது…..

ஜீவா ஃபினான்ஷியலி இந்த அரணைவிட கீழான ஸ்டேடஸில் இருப்பான்…….ஒருவேளை ரொம்பவும் கீழாக இருப்பானோ? இந்த அரணின் டிரைவர் அப்படி ஏதாவதாக இருந்தால் அரணது காரைக் கூட கொண்டு வந்திருக்கலாம்…. இருக்கும்….அதனால் தான் ஜீவாவால் தன்னை தன் காதலை இவளிடம் தைரியமாக வெளிப் படுத்த முடியவில்லையாக இருக்கும்…… பாணக்கார அரண், அதுவும் இவள் ப்ரச்சனைகள் சூழ்நிலைகளுக்கு தீர்வு கொண்டுவர முடிகின்ற அரண் அவள நான் லவ் பண்றேன்னு சொன்னதும் ஜீவா விலகிட்டான்…..

இப்படித்தான் நம்பினாள் சுகவிதா.

ஒரு ட்ராமா செய்து தான் சுகவிய லவ் பண்றதா நம்ப வச்சு, ஜீவாவை விலக்கிவிட்டது போல் இந்த அரண் வேற ஏதோ டிராமா பண்ணி ப்ரபாத்தையும் நம்ப வச்சுருக்கான்……இதெல்லாம் அவன் இவளை கஷ்ட படுத்தனும்னே செய்றான்…சாடிஸ்ட்……

ஜீவாவ விலக்கியாச்சு……இனி இவ வேற வழி இல்லாம அந்த பெலிக்‌ஸ கல்யாணம் செய்துடுவானு நினைக்கானோ?……இப்ப ப்ரபாத் வழியா போடுற ட்ராமா….ப்ரபாத் கூட இவளுக்குள்ள ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்றதுக்கா…..? ஒரு வேளை இவ ஏமாந்து போய் அரணைக் கல்யாணம் செய்துட்டா….அவ கரியரை காலி பண்ணி துவச்சு தூக்கி போட்றுவானோ?

இருந்த அந்த சில நிமிட அவகாசத்தில் அதற்குமேல் சுகவிதா ப்ரபாத்தை பேசவே விடவில்லை.

“நீ அரணை நம்பாத…உன்னை ட்ராமா பண்ணி அவன் ஏமாத்றான்….நம்ம பிரிக்க பார்க்றான்…என் லைஃபை நாசம் பண்ண ப்ளான் பண்றான்… தயவு செய்து எப்டியாவது ஜீவாவை கண்டு பிடி ப்ரபாத்…..”

இந்த அர்த்தத்தில் அவளறிந்த அனைத்து வகையிலும் பதற்றமும் அழுகையும் தவிப்புமாய் சொல்லிக் கொண்டே இருந்தாளே தவிர, வாயை மூடிக் காதை திறக்க அவள் தயாராகவே இல்லை.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அரண் இடையிட்டான் தான்….

“விதுமா…ப்ளீஸ் முதல்ல அழுகைய நிறுத்து…”

அடுத்த பக்கம்