நனைகின்றது நதியின் கரை 10(8)

ரணுக்கோ சுகவிதாவை தவிர்த்தாக வேண்டும் என்றுதான் அறிவுக்குப் படுகிறது. ஆனால் அதை நடை முறைப் படுத்த தான் முடியவில்லை.

FB  பக்கம் கூட போகாமல் இருந்தவன் அந்த ஸ்கைவாக் நிகழ்ச்சி அன்று பேசிவிட்டான்.

அவள் பத்திரமாய் வீடு போய் சேர்ந்தாள், இனி இப்படி கவனக் குறைவாக செக்யூரிடியைவிட்டு வெகு தூரம் விலகி வர மாட்டாள் என்றெல்லாம் உறுதி செய்யாமல் இவன் எப்படி நிம்மதியாய் இருப்பதாம்??

அதன் பின்னோ சுகவி இவனுடன் பேசுவதில் வெளிப்படையாய் தெரிய தொடங்கியது  காதல். இவன் மீதான அவளது விருப்பம், அக்கறை எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தினாள்.

நான் உன்னை காதலிக்கிறேன் என வாய்விட்டு சொல்லவில்லையே தவிர அவளது அத்தனையிலும் காதல் வாசம்.

அதோடு இவனைப் பற்றி தெரிந்து கொள்ள துடித்தாள். அவளிடம் மறைக்க இவனுக்கு வேதனையாக இருக்கிறது, சொல்லவும் வழி தெரியவில்லை. அவளோ தவிக்க தொடங்கி இருந்தாள்.

அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் அவளது வலியை இவனால் உணர முடிந்தது.

“ஏன் ஜீவா நான் உங்களப் பத்தி எது கேட்டாலும் சொல்ல மாட்டேன்றீங்க…? உங்களப் பத்தி தெரிஞ்சா என்ன ப்ரச்சனையாகிடும்னு நினைக்கீங்க….?

எந்த விஷயமா இருந்தாலும் நான் உங்க கூடதான் இருப்பேன்….ஐ மீன் உங்களுக்கு ஃபேவரா உங்களுக்கு சப்போர்டிவாத்தான் இருப்பேன்….

ஏன் இப்டி என்னை நம்பாம விலகி விலகிப் போறீங்க….? என் மனசு புரியலையா ஜீவா? என்னை நம்பமாட்டீங்களா?“ அவள் கெஞ்சத் தொடங்கி இருந்தாள் இவனிடம்.

அதைத் தாங்க இவனுக்கு முடியவில்லை.

அதோடு இப்பொழுது அவள் அனுபவிக்கும் அத்தனை வலிக்கும் பின்னாளில் இவனைத்தான் காரணமாக்குவாள். ஏதோ அவளை அழவைக்கவே இவன் இப்படி எல்லாம் நாடகம் ஆடியதாக நம்பித் தொலைப்பாள்.

அவன் க்ரிகெட் விளையாடுவதே அவளைவிட அவன் பெரிய ஆள் என காண்பித்துக் கொள்ளத்தான் என சந்தேகம் இன்றி நம்புபவளாயிற்றே…. அரண் உயிரோடு இருப்பதே சுகவிதாவை மூக்குடைக்கத்தான் என்பது போல் ஒரு பார்வை அவன் மீது…. சமீபத்தில் தான் அவள் அரண் பத்தி இதுவரை கொடுத்திருந்த அனைத்து இன்டர்வியூக்களையும் தேடிப் பிடித்துப் படித்திருந்தான் இவன்.

ஆக திரும்பவும் அரண் அவளைத் தவிர்த்தான்.  மனம் அவள் பற்றியே பர பரத்தாலும் முடிந்த வரை இயல்பாய் இருக்க முயன்று கொண்டிருந்தான் அவன். இவன் FB யில் அவள் மெசேஜ்களை கூடப் பார்க்கவில்லை கடந்த இரு வாரங்களாக.

ரவு 10 மணி. தன் அறையில் படுத்து ஜன்னல் வழியாய் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் அரண். இவன் மொபைல் சிணுங்கியது. ப்ரபாத்திடம் இருந்து அழைப்பு.

“என்னடா…?”

தன் கசினோட பார்டிக்கு  ஈசிஆர் ரிசார்ட்டுக்கு வந்திருந்த சுகவிதா அங்கிருந்து கிளம்பி 4 அவர்ஸ் ஆகிறது.. ஆனால் இன்னும் வீட்டிற்கும் செல்லவில்லை. செல்ஃப் ட்ரைவிங் வேறு அவள் மொபைல் ரிங்காகிறது தான் ஆனால் அவள் அதை ஏற்கவில்லையாம்….

ப்ரபாத்துக்கு அரணை சுகவிதா விஷயத்தில் உள்ளே இழுக்க விருப்பம் இல்லை….. ஆனாலும் இப்பொழுது வேறு யாரிடம் கேட்க?

“அந்த மன்யத் விஷயம் திரும்ப எதுவும் ப்ரச்சனையாகி இருக்காதுல்ல மாப்ள…” ப்ரபாத் தன் கவலையை வெளியிட்டான்.

“நோ சான்ஸ்…..அதுக்கு வழி இல்லை….” அதை மறுக்கும் போதே அரணுக்கு வேறு ஒன்று தோன்றுகிறது.

“ஒன் மினிட் டா…” அவசர அவசரமாக FB யில் லாகின் செய்கிறான் அரண்.

அவளிடமிருந்து 423 மெசேஜஸ். கடைசி சிலவற்றை அவசரமாக படித்தான்.

“நான் எவ்ளவு சொல்லிப் பார்த்துட்டேன் நீங்க என்னை நம்பலை உங்க பக்கம் என்ன இஷ்யூனு கூட சொல்லலை….. ஆனா இதை இப்படியே விட என்னால முடியாது….

நீங்க அவாய்ட் பண்ணிட்டா நான் உங்கள மறந்துடுவேன்னு நினைக்கீங்க பாருங்க….அதை என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியலை….. நீங்கன்னா எனக்காக சாக கூட ரெடியா இருப்பீங்க….ஆனா நான்னா ஜஸ்ட் நீங்க என்ட்ட பேசலைனாலே உங்கள மறந்துடுவேன் என்ன?….

நானும் உங்களுக்காக சாக கூட தயாராத்தான் இருப்பேன் ஜீவா….

இன்னைக்கு நீங்க வந்து எல்லாத்தையும் மனசுவிட்டு பேசி கூப்பிட்டுட்டு போறவரைக்கும் நான் ECR  பீச்ல தான் நிப்பேன்….மத்திய கைலாஷ்ல இருந்து டுவர்ட்ஸ் மஹாப்ஸ் வாங்க…..14 கிலமீட்டர் பிஃபோர் மஹாப்ஸ் லெஃப்ட் சைட்ல ஒரு சவுக்குத் தோப்பு இருக்கும்….அங்கதான் நின்னுட்டு இருப்பேன்….”

கார் கீயை கையில் எடுத்து கொண்டு பார்க்கிங்கை நோக்கி ஓடத் தொடங்கி இருந்தான் ஜீவா.

“டேய்…….அவ ECR ல மஹாப்ஸுக்கு 14 கிலமீட்டர் முன்னால……….நீயும் வா….நானும் கிளம்பிட்டேன்….” இதற்குள் அவனது  கார் வீட்டைவிட்டு வெளியேறி இருந்தது.

இப்பொழுது சுகவிக்கு அழைத்தான் அரண்.

அவள் எண்தான் இவனிடம் இருக்கிறதே…

ஆனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை….. அம்மாவோ ப்ரபாத்தோ வேற நம்பர்ல இருந்து ட்ரை பண்றாங்களா இருக்கும்…. ஜீவாவே இருந்தால் கூட அவன்ட்ட ஃபோன்ல பேசுறதோட இன்னைக்கு விஷயம் முடிஞ்சிடக் கூடாது. அவனை மீட் பண்ணியே ஆகனும்…

இப்படியாக எண்ணம் அவளுக்கு.

அரண் இப்பொழுது FB இல் மெசேஜ் செய்தான்.

“ப்ளீஸ் கிளம்பி சிட்டிக்குள்ள வா….கண்டிப்பா நான் உன்னை வந்து பார்க்றேன்..”

“நோ…..நான் நம்ப தயாராயில்லை…” வெறுத்திருந்தாள் சுகவி.

விரக்தியின் உச்சத்திருந்தாள் அவள். ஆக்சுவலி அவளால் முடிந்த அத்தனை வகையிலும் தான் அவனை மறுக்கப் போவதில்லை என உணர்த்திப் பார்த்திருந்தாள் சுகவி. அத்தனைக் காதலை தனக்குள் வைத்துக் கொண்டு அவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் ?

இவளை ஏன் விலக்குகிறான் என அவளுக்கு புரியவே இல்லை. ஜீவா அவளை அந்த விஷயத்தில் நம்பவே தயாராயில்லை…. அது ஏன் என்று தெரியாமல் இன்று இவள் இங்கிருந்து போகப் போவதில்லை…. ஏன்னு தெரிஞ்சாதானே அதை சரி செய்ய முடியும்?

அடுத்த பக்கம்