நனைகின்றது நதியின் கரை 10(7)

ப்பொழுது அரணும் சுகவிதாவும் இந்தியா திரும்பியாகிவிட்டது. அவன் தன் முடிவின் படி அவள் மெசேஜ்களை பார்ப்பதை கூட தவிர்த்தான்.

அரண் தன்னை படு பிஸியாக வைத்துக் கொண்டான். ஆனாலும் ஒய்வு கிடைக்கும் நேரத்தில்  அவன் மனம் சுகவிதாவையே சுற்றத்தான் செய்தது.

அன்று  ஸ்கைவாக் சென்றிருந்தான் அரண். திரும்பி வர எண்ணி பார்க்கிங்கிற்கு லிஃப்டில் சென்றான்.

இவன் லிஃப்டை விட்டு வெளிப்பட்ட நேரம் இவனை அடுத்து இடபுறம் நின்ற கார் கதவை திறந்து கொண்டு இறங்கியது சுகவியே தான்.

சட்டென வசந்தகாலம் இவன் விழிகளில். ஆனால் எல்லாம் ஒரு நொடிதான். எங்கிருந்து வந்தார்கள் என புரியும் முன் ஒருவன் அவள் தலையில் பிஸ்டலை வைக்க, அடுத்தவன் அருகிலிருந்த பல்புகளை துளையிட்டான் தோட்டாகளால்.

நொடிக்கும் குறைவான நேரத்தில் நிலைமையை உணர்ந்த அரண் சட்டென தன் இடப்புறம் நின்றவளை இழுத்துக் தன் மார்போடு சேர்த்து தூக்கியபடி  வலப்புறமாக ஸிக் ஸாக்காக ஓட துவங்கினான்.

பல்ப்புகள் உடைக்கப் பட்டு இருளாய் இருப்பதாலும் ஸிக் ஸாக்காய் ஓடுவதாலும் சுடப் படும் வாய்ப்பு குறைவு.

அப்படி சுடப் பட்டாலும் பின்னால் துரத்தும் அந்த தடி மாடுகள் இவன் முதுகைத்தான் சுட முடிய வேண்டுமே தவிர, புல்லட் சுகவியை தொட்டுவிடக் கூடாது என்பது அவன் எண்ணம்.

சுகவிதா துள்ளினாளோ திமிறினாலோ கூட அவள் மீது புல்லட் பட வாய்ப்பு இருக்கிறது.

“தனியா சுத்தாதன்னு சொன்னேன்ல….ஏன் இங்க தனியா வந்த…. ?.” எதைச் சொன்னால் அவள் வாயடைக்க முடியுமோ அதை சொல்லி வைத்தான்.

“ஜீவாஆஆ!!!”

“ஆமா….தயவு செய்து அசையாத…”

நடந்த நிகழ்வுகளின் துவக்கத்தில் பலமாய் அதிர்ந்து மிரண்டுதான் போயிருந்தாள்  சுகவிதா. ஆனால் தான் ஜீவாவின் கரத்தில் இருக்கிறேன் என புரிந்த நொடியே அசாத்ய தைரியம் நம்பிக்கை.

இவளை தூக்கிக் கொண்டு எவ்வளவு ஓட முடியும் அவனால்?

“விடுங்க ஜீவா….நானும் ஃபாஸ்ட்டா தான் ஓடுவேன்….உங்க கூட ஓடி வரேன்….”

“இல்ல புல்லட் ஷாட் உன் மேல பட்றக் கூடாது…..”

அவன் மொத்த நோக்கமும் புரிந்துவிட, ஐ லவ் யூவோ, அழகு புஜ்ஜும்மா கொஞ்சலோ சொல்லவே முடியாத, ஆழ அகலம் அடி நுனி அளவிடமுடியாத அடர் காதலை அப்பட்டமாய் உணர்ந்தாள் அவள்.

தன்னை விட இவளை அதிகமாக நேசிக்கும் அவன் உணர்வு விளங்க…..அவன் மேல் தனக்கு இருக்கும் காதல் தவறில்லை என அந்த நொடி ஆணித்தரமாக புரிய…….

ஆம் அவன் கவிதைகளைப் படிக்கும் போது அது வெறும் ஃபேவரிடிசம் என தோன்றிய உணர்வு,

அவனுடம் பேச ஆரம்பித்த காலத்தில் இது அதையும் தாண்டி வேறோ என குழப்பிய ஒன்று,

சமீப காலத்தில் Are  ல் அவனுடன் மனம்விட்டு பேசத் தொடங்கிய பின் இது முகம் தெரியா ஒருவன் மேல் வரும் முட்டாள் தன காதல் என்று வருத்திய ஒன்று,

இப்பொழுது இந்த நொடி அங்கீகரிக்க தக்க உள்ளுணர்வு என தோன்றுகிறது அவளுக்கு. உ

யிர் வாழும் காலம் மட்டும் இவனுடன்தான் இனி இவள்.

இதற்குள் வலபுறமாக ஓடியவன் ரைட் டர்ன், ரைட் டர்ன், ரைட் டர்ன் 4வது ரைட் டர்னில் பார்க்கிங்கை ஒரு வட்டமிட்டு இவள் கார் புறமே வந்திருந்தான். கார் கதவு திறந்திருக்க அதற்குள் அவளைத் திணித்தவன்

“கிளம்பு “ மூச்சிளைக்க அலறலும் உறுமலுமாக ஒரு கர்ஜனை கட்டளை..

துரத்துபவர்கள் பின்னால் ஓடி வர…..இவள் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து அங்கேயே விட்டிருந்த கீயை வைத்து   காரை ஸ்டார்ட் செய்யப் போனவள்,

“வாங்க ஜீவா” என கெஞ்சலும் மிரட்சியுமாக கத்தினாள்.

“ஜஸ்ட் உன் பின்னால வர்றேன் மூவ்..”

அங்கிருந்து பறக்கும் பிஸ்டல் தோட்டாவிற்கு விலகி அருகிலிருந்த அடுத்த காருக்கு அடியில் உருண்டான்.

வேறு வழி இன்றி இவள் கிளம்ப, அருகிலிருந்த தன் காரை திறந்து கொண்டே அதை நோக்கி ஓடியவன் இரண்டாம் நொடி அந்த காரில் சுகவியின் காரை பின்  தொடர்ந்தான். அவளை யாரும் மீண்டுமாய் பிடித்துவிடக் கூடாதே…

சுகவி இதுவரை இருட்டில் ஜீவா முகம் பார்க்கவில்லை. இப்பொழுது பின்னால் வரும் அவன் காரில் முகம் பார்க்க முயல்கிறாள். ஆனால் அத்தனை ட்ராஃபிக்கில் முகம் தெரிந்துவிட்டாலும்….

இதற்குள் தன்னுடன் வந்திருந்த செக்யூரிடி வாகனத்திற்கு அவள் தகவல் சொல்ல அவர்கள் அவள் வாகனத்திற்கு அருகில் வந்து சேர, இப்பொழுது ஜீவாவின் காரைக் காணவில்லை.

அரண் அவள் பாதுகாப்பு உறுதிப் பட்டவுடன் விலகிக் கொண்டான்.

இன்னும் அரணாய் தன்னை வெளிப் படுத்தும் நேரம் வரவில்லை. அந்த லோன் இன்னும் ட்ரான்ஸ்ஃபர் ஆகவில்லையே….

அந்த கிட்நாப்பர்ஸ் பிடிக்கப்பட்டு விட்டார்கள். இவளை கடத்தி சென்று இவள் அப்பாவை மிரட்டி பணம் பறிக்க நினைத்தவர்களாம் அவர்கள்.

வீட்டிற்கு வந்ததும் FBயில் கேள்வி மேல் கேள்வி கேட்டவனிடம் எல்லாவற்றையும் சொன்னாள் சுகவிதா. அவனோ அவளை காய்ச்சி எடுத்துவிட்டான்.

“இப்டிதான் சேஃப்டி பத்தி அக்கறையே இல்லாம வருவியா நீ” அதுதான் அந்த திட்டின் சாரம்சம்.

சுகவிதாவிற்கு அவனது ஒவ்வொரு திட்டும் ஆனந்த சுக மழை, அன்பின் மொழி நிலை. உரிமையுடன் திட்டுகிறானே…

என்னவன்…என் மீது எல்லா உரிமையும் உள்ளவன்…எனை ஆளவும், தோள் சேரவும், உயிர் சூழவும் உயிருற்றவன். உற்றவன் எனக்குற்றவன். ஜீவன் என் ஜீவன்.

அடுத்த பக்கம்