நனைகின்றது நதியின் கரை 10(6)

ன்று இரவு….குளிர் கொன்று எடுத்துக் கொண்டிருந்தது….இவனது அறையின் ஜன்னலிலிருந்து வெளியே தெரிந்த வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் அரண்…..

அந்த ஹோட்டலின் ஸ்விம்மிங் பூல் நிரம்பி இருந்தது… இப்பொழுது இருக்கும் வெதரில், யாராவது கேட்டுக் கொண்டிருந்தாலொழிய அதை நிரப்பி இருக்க மாட்டார்கள்…….

என்னதான் வெண்ணீராய் இருந்தாலும் இந்த  க்ளைமேட்டில் யாருக்கு இப்படி நீச்சலடிக்கவெல்லாம் தோன்றுகிறதாம்…?

இவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒரு பெண் வந்து நிற்பது தெரிகிறது…..வெளிச்சத்தில் அது சுகவிதா எனவும் ஓரளவு புரிகிறது…… ஃபுல்லி கவர்ட் ட்ரெஸ்….கண்டிப்பாக குளிக்க வந்தவள்  இல்லைதான்…. ஆனா இவனுக்கு கேள்வி என்னன்னா ஸ்விம்மிங் பூலை பார்க்கவே அவ பயங்கரமா பயப்படுவாளே….இங்க என்ன செய்றா…?

ஏதோ தோன்ற அவசர அவசரமாக கிளம்பி அங்கு சென்றான்….. இவன் பூலைப் பார்த்து போய்க் கொண்டிருக்கும் போதே முழு உடையுடன் அவள் குளத்திற்குள் குதித்துவிட்டாள்…..மிரண்டு போனான் அரண்…. சூசைட்டா???

“ஏய்…..என்ன செய்ற….? “ இவன் அவளை நோக்கி ஓட,

அவளோ “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்……போடா இங்க எதுக்கு வந்த….? குளிக்றேன்ல….தூரப் போ….” கத்தினாள்.

வின்டர் வேரில் ஸ்விமிங் பூலில் குளிக்கும் ஒரே நபர் அவளாகத்தான் இருக்கும். வாட்’ஸ் ஹெர் இன்டென்ஷன்?

இருந்த குறை வெளிச்சத்திலும் தெளிவாக தெரிகிறது…. அவள் முகத்தில் அத்தனை உணர்வுகளை சமாளிக்கும் ஸ்ட்ரெஸ்….

பயப்படாமல் இருப்பது போல் காண்பிக்க அத்தனை முயற்சி….அல்லது பயப்பாடாமல் இருக்க அத்தனை முயற்சி என்றும் சொல்லலாம்…

“போடி….ஆடு மாடு குளிக்றது கூட அழகா இருக்கும்…உன்னப் போய் எவன் பார்ப்பான்…?” அவட்ட இவன் கெஞ்சினால் காது கொடுத்து கேட்பாளா?

அவள் பூலின் ஆழமற்ற பகுதியில் தான் இறங்கி இருந்தாள். பூலின் தரை ஒரு புறமிருந்து மறு புறம் நோக்கி சரிந்து ஆழம் அதிகமாகிக் கொண்டே போகும்படி அமைக்கப் பட்டிருந்தது.

ஏற்கனவே அரண்டு போயிருந்தவள் இவனைப் பார்த்து இன்னுமாய் அதிர ஸ்லிபாகி  அவள் இருந்த இடத்தைவிட ஆழமான பகுதியில் விழுந்தாள்….

முன்பு பூலில் விழும்போது அவள் பயந்த அளவு ஞாபகம் வர சட்டென இவனும் இப்பொழுது பூலில் இறங்கிவிட்டான்….அவளை தூக்கி நிறுத்தினான்…

“ஸ்விம்மிங் படிக்றதுனா யாரையாவது கூட்டிட்டு வந்து படிக்க வேண்டியதான…இது என்ன லூசு மாதிரி….?”

பயத்தில் அவள் முகம் ஏறத் தாழ நீல நிறமாகி இருக்க சிடு சிடுத்தான் அரண்.

“அது எங்களுக்கு தெரியும்….நீ உன் வேலையப் பார்த்துட்டு போடா….சை….வந்து என் உயிர எடுக்கான்…” புலம்பியபடி அவள் பூலைவிட்டு வெளியேற இவனும் கிளம்பி அறைக்கு வந்துவிட்டான்.

ஆனாலும் மறுநாள் அவனது @ ஐ டிக்கு சுகவிதாவிடமிருந்து ஒரு மெசேஜ்….

“எனக்கு அக்குவாஃபோபியா ஜீவா…..ஸ்விமிங் பூலப் பார்த்தாலே மூச்சு திணறும்……அதோட அடி ஆழத்துல நான் விழுந்து கிடக்ற மாதிரி ஒரு ஃபீல் வரும்….

ரொம்ப பயங்கரமா பயமா இருக்கும்…. அப்டியே லங்க்ஸ்லாம் வாட்டரால நிரம்பி மூக்சுவிடவே விடமுடியாம நெஞ்சல்லாம் வலிக்க வலிக்க….எதோ இருட்டுக்குள்ள முங்கி முங்கி… நானே இல்லாம போறமாதிரி ……அதுதான் டெத்ன்ற மாதிரி….பயங்கர லோன்லியா….அவ்ளவு கஷ்டமா இருக்கும் பூலப் பார்க்கவே….

பட் அந்த மன்யத் விஷயத்துல  நீங்க சொன்னீங்க தெரியுமா ஃபேஸ் த சிச்சுவேஷன்… யூ ஆர் நாட் அலோன்…..மெஜாரிட்டி கேர்ள்ஸ் இத ஸேஃபாதான் தாண்டி இருக்காங்க நீயும் சேஃபாதான் இருப்பன்னு நினச்சுக்கோன்னு…. அது அந்த டைம்ல ரொம்ப ஹெல்பிங்கா இருந்துது….பயம் அப்டியே போய்ட்டு…..

அத வச்சு எப்டி பயத்தை ஹேன்டில் செய்யனும்னு கத்துகிட்டேன்……

எல்லோரும் ஸ்விம் பண்றாங்கதான….எல்லோரும் முங்கி போக முடியும்தான…பட் யாருமே முங்குறது இல்லைனு நினச்சுகிட்டேனா….இப்ப நானே தனியா ஸ்விமிங் பழகிட்டேன்…ஜஸ்ட் ஒன் நைட்ல…..

உங்கள நினச்சுட்டே நேத்து என்னால ஃபர்ஸ்ட் டைம் பூல்ல விளையாட முடிஞ்சுதே….அதுவும் தனியா….”

மற்ற நேரமாக இருந்தால் இது அரணை அவ்வளவு பாதித்து இருக்குமா என தெரியவில்லை….அவளை முன்பு பூலில் தூக்கிப் போட்ட போது அவளது பயத்தை பக்கத்திலிருந்து பார்த்தவன் அல்லவா….இப்பொழுது அவளாக இவ்வளவு தூரம் இறங்குகிறாள் என்றால்…..

உயிர் உருகிப் போனான் அவன்…

ஒரு குழந்தை போல அவள் ஜீவாவிடம் முழுமையாய் சரணடைகிறாள் என அரணுக்குப் புரியாமலில்லை.

ஆனால் அதை தடுக்கத்தான் என்ன செய்யவென அவனுக்குத் தெரியவில்லை. ஒரு பக்கம் அரணாய் அவனைப் பார்க்க கூட தாங்காமல் வெறுத்துக் கொண்டு, இன்னொரு பக்கம் இப்படி என்றால்….???

ப்ரபாத்திடம் இதை சொன்னதும் “பூல்லயா….?” என்ற அவனது ஒற்றை வார்த்தையோடு வாயடைத்துப் போனான் அவன்.

இதில் மறுநாள் அவளது ஸ்கியிங் வீடியோ….அதுவும் நைட் ஸ்கியிங்..… மீண்டும் அதே டயலாக்….”உங்கள நினச்சுட்டே போனேன் ஜீவா…”

ஜீவா கானல் நீர் என தெரிய வரும் போது அவள் எப்படித் தாங்கப் போகிறாளாம்? தவிப்பாய் இருந்தது அரணுக்கு.

ஆனால்  சட்டென புரிகின்றது, அரண் மேல் உள்ள வெறுப்பில் அத்தனையும் நாடகம் என்று சொல்லி, ஜீவாவை அவளால் அத்தனை எளிதாக தூக்கிப் போட்டுவிட முடியும்….. சோ கடைசியில் ஹர்ட் ஆகப் போவது இவன்தான்….இப்பொழுது இவன் இதயம் வலிக்கிறது…..

அன்று Chat இல்  “சேஃபா இரு…செக்யூரிடி காட்ஸ் வச்சுகோன்னு சொன்னதுக்கு எல்லாத்தையும் தனியா செய்துட்டு இருக்கியா நீ….எதுனாலும் ப்ராப்பர் ட்யூடர் அண்ட் செக்யூரிட்டியோட செய்….” என சுகவிதாவிடம் சொல்லி வைத்தாலும்

அதோடு அவளிடம் பெர்சனலாய் பழக கூடாது எனவும் முடிவு செய்து கொண்டான். FB பக்கம் போகக் கூடாது என்றும் தீர்மானித்துக் கொண்டான்.…..

அடுத்த பக்கம்