நனைகின்றது நதியின் கரை 10(4)

Stalkers…..பெரும்பாலான செலிப்ரிடிஸுக்கு இந்த ப்ரச்சனை உண்டுதான். அது சில சமயம் மிக ஆபத்தான அளவிற்கு போவதும் உண்டு.

சுகவிக்கும் அதுதான் நடந்து கொண்டிருந்தது. சுகவிதாவை அவள் செல்லும் அனைத்து டோர்னமென்ட்ஸுக்கும் துரத்திக் கொண்டிருந்தான் ஒருவன், அவன் பெயர் மன்யத்.

வெறும் டெடி பேர், சாக்லேட்ஸ் என இல்லாமல் அவனது கன்னா பின்னாவென்ற கிஃப்ட்ஸ் அதோடு படு அருவருப்பாய் கடிதங்கள்….அவள் தங்கும் ஹோட்டல் வந்து சேரும்.

அதோடு அவன் நிறுத்திக் கொள்வான் எனதான் சுகவிதாவும் அனவரதனும் நினைத்ததே….ஆனால் அவன் வேறுவகையில் இவளுக்கு வலை விரித்திருக்கிறான்.

அனவரதனின் தொழில் ஒரு செழித்த சாம்ராஜ்யம்தான். எ சாஃப்ட்வேர் கன்சர்ன்ஸ்…ஆனால் அது ஒன்றுதான் அவரது தொழில்.

சமீபத்தில் ஒரு நம்பிக்கையான நிதி நிறுவனம் அவரது தொழில் விஸ்தாரிப்பிற்கென கடன் தர முன் வந்தது. விசாரிக்கும் போது அதன் டீல்கள் நன்றாக, நியாயமானதாக தோன்ற அனவரதனும் அதை ஏற்றிருந்தார்.

அனைத்து தொழில்  நிறுவனங்களிலும் நடப்பதுதான் இது. சுகவிதாவின் பெரும் பங்கு சம்பாத்யமும் இந்த விஸ்தாரிப்பில்  முதலீடு செய்யப் பட்டது.

அது மன்யத்தின் நிறுவனம் என அனவரதனுக்கு தெரிந்திருந்தால் நிச்சயமாக இப்படி ஒரு ஸ்டெப்பை அவர் எடுத்திருக்கமாட்டார்…..ஆனால் இவர் கண்ணை மறைத்து அவன் ஏமாற்றி இருந்தான்.

இப்பொழுது சில டெக்கி வைட் காலர் கிரைம், சில கோல்மால்கள் மூலம் அனவரதன் நிறுவனம் உடனடியாக அந்த கடனை அடைக்க வேண்டும் அல்லது ப்ளெட்ஜ் செய்திருக்கும் அவரது நிறுவனத்தை, அவரது தொழிலை அவர் அந்த நிதி நிறுவனத்திற்கு கொடுத்துவிட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தான்.

அல்லது அதை தவிர்க்க அவன் சுகவிதாவை மணம் முடித்துக் கேட்டான்.

“உங்கப்பாட்டயும் உன்ட்டயும் கல்யாணத்துக்காக ஒழுங்கா அப்ரோச் பண்ணேன்……காது கொடுத்து கேட்கவே இல்லை…..திஸ் இஸ் மை வே டு மேக் யூ போத் லிசன்….சரின்னு சொல்லு…என் வைஃபை இப்பவே டிவோர்ஸ் செய்துட்டு உன்னை மேரி பண்றேன்” என்றான் இவளிடமே…..

அப்படித்தான் விஷயம் இவளுக்கே தெரியும். அனவரதன் இந்த நிலையை வீட்டில் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை….

இப்பொழுதும் விஷயம் அவள் அம்மாவிற்கு தெரியாது…இவள் பதறிப் போய் தந்தையிடம் கேட்க,

முடிந்தவரை இந்த ப்ரச்சனையை சமாளிக்கப் பார்ப்பது….அல்லது கம்பெனியை கொடுத்துவிட்டு….பேக் டூ ஸ்கொயர் ஒன்…..வேறு நிறுவனத்தில் வேலை தேடிப் போய்விடுவது என்ற மன நிலையில் அவர் இருப்பது தெரிய வந்தது இவளுக்கு.

அப்பாவை அப்படி நினைத்துப் பார்க்கவே கொடுமையாக இருந்தது சுகவிதாவுக்கு.

ஆனால் வேறு வழி இல்லை என்றால் கம்பெனியை இழந்துவிட்டு வர  இவள் தயார்தான். இவள் இன்னும் சம்பாதிக்க போகிறாள் தான். அவள் பெற்றோரை அதே உயர்தர வாழ்க்கையுடன் இவள் பார்த்துக் கொள்வாள்தான்.

ஆனால் வித வித ஃபோபியா உள்ள சுகவிக்கு இப்பொழுது வேறு பயம்….இந்த மன்யத் இதோடு நிறுத்துவான் என்று எப்படி சொல்ல? அவன் படு எதிர்பார்ப்போடு போட்ட திட்டம் இப்படி ஃப்ளாப் ஆன பின்பு இன்னும் ஆக்ரோஷமாகி என்ன செய்ய மாட்டான்?

அத்தனை பணபலம், பேக்ரவ்ண்ட் இவளுக்கு இருக்கும் போதே இத்தனையாய் அடித்துவிட்டான்….இனி இவள் தன்னை எப்படி டிஃபெண்ட் செய்யப் போகிறாள்?

கன்னா பின்னா என பயம் ஓட அவளுக்கு எதையும் நிதானமாக யோசிக்க கூட முடியவில்லை.

இவர்களது கம்பெனியை மன்யத்திடம் ஒப்படைக்க போகும் முடிவை அவனிடம் இவளது அப்பா சொல்லும் வரை, அவன் இவள் மீது அத்து மீற மாட்டான் என்ற நம்பிக்கை இவளுக்கு. அதன் பின்???

ஒவ்வொரு நொடியையும் நெருப்பில் கரைத்துக் கொண்டிருந்தாள்.

விஷயத்தை அவள் ப்ரபாத்திடம் சொல்லவில்லை. ஏனெனில் அதை கேட்டு அவன் மிகவும் வருத்தப் படுவான், அந்த மன்யத் மேல் கோபப்படுவான். அந்த கோபத்தின் விளைவு என்னதாய் வேண்டுமானாலும் இருக்கலாம்…..மன்யத் ப்ரபாத்தை கொன்றுவிட்டால்???

இந்த விஷயங்களில் யார் அடையாளமும் குறிப்பிடாமல் சூழலை மட்டுமாய், தான் ஜீவா என அழைக்கும் அரணிடம் chat இல் தெரிவித்தாள் சுகவிதா.

இடையில் அவள் அழ ஆரம்பித்திருந்தாள். அரண் நீ வா போ என ஒருமைக்கு தாவி இருந்தான். எப்பொழுது சுகவிதாவின் ஜீவா சார் ஜீவா ஆகியது என யாருக்கும் தெரியாது.

‘இந்த விஷயத்துக்கு பயப்பட ஆரம்பிச்சா…ஒரு பொண்ணும் வீட்டை விட்டு வெளிய வந்துட முடியாது…..உனக்குன்னு இல்ல,  வசதியானவங்க, வசதியில்லாதவங்கன்னு பாரபட்சமே இல்லாம நிறைய பொண்ணுங்களுக்கு உள்ள ப்ராப்ள்மதான் இது….

இப்டி எவனாவது லூசால துரத்தப்படுறத சொல்றேன்….யூ ஆர் நாட் அலோன்….அதனால இத நான் சின்ன விஷயம்னு சொல்லலை…..மோஸ்ட் ஆஃப் த கேஸ்ல பொண்ணுங்க சேஃபா எஸ்கேப் ஆகிருக்காங்க…சோ நீயும் சேஃபா இருப்பன்னு நம்பு….

பயப்படுறதால எந்த சொலுஷனும் வரப் போறது இல்லை…..தேவையான செக்யூரிடி காட்ஸ் வச்சுக்கோ……முன்னயும்  அவன் உன்னவிட பணக்காரந்தான்….ஆனா உன்ன அவன் இஷ்டத்துக்குத்தான் வளைக்கப் பாத்துருக்கானே தவிர…உன்ட்ட பிஸிகலி மோதலை…சோ முன்னால என்ன ரிஸ்க் இருந்துதோ அதுதான் இப்பவும் இருக்குதுன்னு நினை….பானிக் ஆகாத…அப்பாவுக்கு சப்போர்ட்டிவா இரு…நீ டென்ஷனானா அது அவங்களுக்கு இன்னும் அதிகமா பயமா இருக்கும்….

கன்னாபின்னானு கற்பனை செய்றதவிட்டுட்டு ஃபேஸ் த சிச்சுவேஷன்…. லீகல் சைட் எதாவது செய்ய முடியுமான்னு பாரு….ப்ரே…ஹவ் ஃபெய்த்…

சொல்ல முடிந்ததெல்லாம் chat இல் அவளிடம் சொல்லிக் கொண்டே இங்கு ப்ரபாத்தை மொபைலில் அழைத்தான் அரண்.

விஷயத்தை சொல்லி அவளை துரத்தும் அந்த நபர் யார் என கேட்டறிந்தான். மன்யத்தின் இப்போதைய திட்டம்தான் ப்ரபாத்திற்கு தெரியாதே தவிர, அவன் முன்பிருந்து சுகவிதாவை துரத்திக் கொண்டிருக்கிறான் என ப்ரபாத்திற்கு தெரியுமே.

அடுத்து மன்யத் பற்றி விசாரித்தான் அதற்கான இவர்களது ரெகுலர் ஏஜென்சியில்..…..அவனுக்கு ஆப்பு ஸ்ட்ராடஜிகலி அடிக்கனுமே….

இவன் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாக கிட்டதட்ட 1 மணிநேரத்தில் ஃபர்ஸ்ட் ரிப்போர்ட் கொடுத்துவிட்டது அந்த ஏஜென்சி. காரணம் மன்யத் இவர்களது அரண் க்ரூப்ஸிற்கு தொழில் முறையில் நன்கு அறிமுகம்.

ரிப்போர்ட் மூலம் மன்யத்தின் குடுமி இவன் கையிலேயேதான் இருக்கிறது என தெரிய வந்ததுதான் அன்எக்‌ஸ்பெக்டட் ட்விஸ்ட்…

அடுத்த பக்கம்