நனைகின்றது நதியின் கரை 10(3)

ஜீவாவிற்கு அரணின் அதாவது @ ன் கவிதைகள், ஆர்டிக்கிள்ஸ் மிகவும் பிடித்துப் போனது போலும்.  @ன் கவிதைகளுக்கு தொடர்ந்து கமெண்ட் செய்வது அவள் வழக்கமாகியது.

சும்மா நல்லாருக்குது…சூப்பர் என்ற அளவில் அது இருக்காது.

கவிதையின் கரு, பெரும்பாலும் அரண் தேர்ந்தேடுக்கும் சூழல்கள், அவனது அதற்கான பதில்கள், பார்வைகள்……இதை அவள் பெரிதும் ரசித்தாள்…இல்லை ஆராதித்தாள், பல வகையில் இருவரது ஒப்பினியஸும் ஒத்துப் போயின.

அரணுக்கு ஃபேன்ஸ் என்பது புதிது கிடையாது. ஆனால் இது நிச்சயம் வேறு வகை. ஒத்த கருத்துக்கள்….ஒரு வகை நட்பை அவனுமே உணர ஆரம்பித்தான்தான். விளையாட்டை ஆராதிக்க ஆயிரம் நபர்களை அவன் பார்க்கலாம்…அவன் மனதோடு ஒத்து போவதென்பது வேறல்லவா?

இதில் குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவெனில் அரண் ஜீவாவை முதலில் ஆண் என புரிந்து கொண்டான்.

அவன் @ என்ற அடையாளத்துக்கு உருவாக்கிய FB ஐடியில் ஜீவா ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்தாள். இவன் அதை ஏற்க….அவ்வப் போது இவனுக்கு மெசேஜ்கள் வரும் அவளிடமிருந்து.

பின் மெல்ல அது text சாட் ஆகியது. அதுவும் எப்பொழுதாவது தான். அதுவும் பேச்சுக்கள் அரணின் கவிதைகளை சுற்றியே இருக்கும். நோ பெர்சனல் இன்ஃபோ…மரியாதை எல்லையை கடக்காத கலந்துரையாடல்கள்.

எக்க்ஷெம்ஷன் இந்த ஒரு கான்வர்ஷேன் மட்டும்.

“உங்கள @னு அட்ரெஸ் செய்யறது எப்டியோ இருக்குது சார் …. உயிருள்ள நேம் எதாவது இருந்தா நல்லா இருக்கும்…”

‘’உயிருள்ள நேம்னா ஜீவா சார் நேம்தான் தெரியுது…..’’ இது இவனது ரிப்ளை

“சரி அப்ப நீங்க ஜீவா சார், நான் ஜீவா மேம்…”

என ரிப்ளை அவளிடமிருந்து….

அப்படித்தான் இவன் ஜீவாவானது. அந்த ஜீவா பெண் எனவும் அப்போதுதான் இவனுக்கு தெரியும்….லைஃப் ப்ரொசீடட்……ஏறத்தாழ ஒரு வருடமாய் நடக்கும் கதை இது….

ப்பொழுது இவன் கேள்விக்கான பதிலை புஷ்பம் சொன்னார்.

“ஆமா… AV நு கமென்ட் செய்றது அங்கிள்….ஜீவா னு செய்றது இந்த பெரிய மனுஷி…..பார்த்தீங்கன்னா தெரியும்….அப்பாவும் பொண்னும் உருகி உருகி கமெண்ட் போட்ருப்பாங்க….”

.  இவனுக்குள் விவரிக்க முடியாத ஆர்ப்பரிப்பு. ஒருவகை சமாதானம்….குழந்தை கால நாட்களை வைத்து இவனை வெறுப்பவள் இவன் உள் மனதை மதிக்கிறாளே…..

அதோடு ஜீவாவாக இவனது கவிதை கட்டுரைகளை அவளால் ஏன் அதிகமாக உணர ஒத்துக்கொள்ள முடிந்தது என்பதும் இப்போது அவனுக்கு புரிகிறது. இவனைப் போலவேதான் அவள் வாழ்க்கையும்…ஒற்றைக் குழந்தை……ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிடி….

அதற்குள் சுகவிதாவோ அலறினாள்.

“அம்மா….எதை எங்க பேசனும்னு இல்ல உங்களுக்கு….”

அதோடு இவனை வேறு எச்சரித்தாள்.

“ஹலோ நீங்க அங்க வந்து எதாவது டிஸ்டர்ப் செய்ங்க அப்றம் இருக்குது…..”

பதிலேதும் சொல்லாமல் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அரண். அரணாக இவன் மேல் என்ன ஒரு மரியாதை வைத்திருக்கிறாள் இவள்!!!

@ ன் FB அக்கவ்ண்டை  திறந்து பார்த்தான்….  நேற்று… இப்பொழுது எல்லாம்…. இவனுக்குத்தான் மெசேஜ் அனுப்பிக்  கொண்டிருந்திருக்கிறாள் சுகவிதா…. இவன் எதிரில் இருந்து கொண்டே…அத்தனை சோக முக பாவத்துடன்….

‘சார் எனக்கு ஒரு பெரிய ப்ரச்சனை…எப்டி ஹேண்டில் செய்றதுன்னு எப்டி யோசிச்சும் தெரியலை…..உங்களால இதுக்கு சொல்யூஷன் சொல்ல முடியும்னு ஒரு நம்பிக்கை…கேட்கலாமா? கேட்கிறது தப்புனா சாரி…’

‘இதோட 100த் டைம் செக் செய்துட்டேன்னு நினைக்றேன்….உங்க ரிப்ளை இல்லையா ரொம்பவே டென்ஷனாகுது….’

‘டைம் போய்ட்டே இருக்கு…என் லைஃப் எங்க போய் நிக்க போகுதுன்னு தெரியலை….”

‘சூசைட்லாம் செய்ய மாட்டேன்…பட் என்ன செய்யனும்னு சுத்தமா தெரியலை….’

ஆடிப் போனான் அரண்.

அப்படி என்ன ப்ரச்சனை அவளுக்கு?

ஆனால் எதிரில் அவளை வைத்துக் கொண்டு இவன் எப்படி அவளிடம் chat செய்வதாம்? ப்ரபுட்ட எல்லாத்தையும் ஷேர் செய்வாளே…அவனுக்கு தெரிஞ்சிருக்கும்….பட் அவன்ட்ட கூட இவ முன்னால இருந்துட்டு இவளப் பத்தி கேட்க முடியாதே….

மீண்டும் வெதர்  சரியாகி இவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் வரும் வரையுமே சுகவிதா மொபைலைவிட்டு தலையை வெளியே எடுக்கவே இல்லை… இவன் பாய்லிங்.

ஹோட்டலுக்கு வரவும் அவன் சுகவிதா மெசேஜ்க்கு பதில் அனுப்பினான்….

இவனுக்காக காத்திருந்தவளாயிற்றே…நொடியில் ஆன் லைனில் வந்தாள். டெக்‌ஸ் chat.

அடுத்த பக்கம்