நனைகின்றது நதியின் கரை 10(2)

அதன் பின் அவர் இவனிடம் இலகுவான விஷயங்களாக சள சளத்துக் கொண்டிருந்தார். சுகவிதாவின் பக்கம் பார்வை செலுத்தாமல் கவனமாக தவிர்த்து, அவனும் அவரிடமாக மட்டுமாக பேசிக் கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் “டீ குடிச்சா நல்லா இருக்கும் போல இருக்கு…” என்ற புஷ்பம் அவர்கள் கொண்டு வந்திருந்த பேக்கிலிருந்து தேவையானவைகளை எடுக்க, அவரும் இவனுமாக சேர்ந்து டீ தயாரித்தனர்….

“ஸ்கீயிங்க்கு இதெல்லாமா எடுத்துட்டு வந்தோம்னு நினச்சுடாதீங்க தம்பி…..” என்றவர் குரலை மிகவும் இறக்கி “சுகிக்கு ஸ்கீயிங்னா பயங்கர பயம்….சும்மா பிக்னிக் மதிரிதான் ப்ளான் பண்ணி வந்தோம்….அதுவும் வரமாட்டேன்னவள தர தரன்னு இழுத்துட்டு வந்திருக்கேன்….” என்றார் ரகசியம் போல்….

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவன் கண்கள் கட்டுப்பாட்டை மீறி சுகவிதா புறமாக சென்றன….. அவள் எதோ ஒரு உலகத்தில் இருந்தாள்….இவர்கள் பேசியது அவள் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை….சுகவிதா முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றமும், சோகமும், வலியும்….

என்னன்னு கேட்கவா முடியும்…

இவன் பார்வையை பின் பற்றிய புஷ்பம் மகள் முகத்தைப் பார்த்துவிட்டு

“அவ ஏதாவது கதை கவிதைன்னு படிச்சுட்டு…அதுக்கெல்லாம் ஆ ஊன்னு ஃபீல் பண்ணிட்டு இருப்பா….அவ அப்பா மாதிரியே….”

இதற்கு இவன் என்ன சொல்ல……?

“நேர்ல இருக்ற மனுஷன்ட்ட ஒழுங்கா பேச மாட்டாங்களாம்…ஆனா இப்டில்லாம் இரக்கப்படுவாங்களாம்…நீங்க ஒன்னும் பெருசா எடுத்துக்காதீங்க.. “ அவர் சொல்ல

அவளப் பார்த்து சோக எக்‌ஸ்ப்ரெஷன் காமிச்சுட்டனோ… டேய் அரண் அடக்கி வாசி…

இரு மணி நேரத்தில் சரியாகும் என்ற பனிக் காற்று சில மணி நேரமாகியும் அடங்கவே இல்லை….இரவு முழுவதும் அங்கு தங்குவதெல்லாம் முடியாத காரியம்….ஸ்டவ் அணைந்துவிட்டால்….குளிர் கூடிவிட்டால் உயிருக்கு உத்திரவாதம் எதுவும் இல்லை.

அரண் அடுத்து என்ன என யோசிக்க ஆரம்பித்துவிட்டான்…..புஷ்பம் முகத்திலும் கவலைக் கோடுகள்…ஆனால் இதற்குள் இருந்த இடத்திலேயே சரிந்து தாய் மடியில் படுத்திருந்த பயந்தாகொள்ளி சுகவிதாவோ

“ப்ச்…இன்னைக்கும் ஜீவா ரிப்ளை பண்ணலைமா……”  ஒருவித இயலாமையுடன் சொல்லியபடி திரும்பிப் படுத்தாள்.

கேட்டிருந்த அரணுக்கு தூக்கி வாரிப் போட்டது என்றால் அவளது அம்மாவோ

“நங்குனு தலையில குட்டினேன்னா தெரியும்…. இங்க எல்லாரும் எத நினச்சு கவலப்பட்டுகிட்டு இருக்கோம்….உனக்கு இப்ப இதான் கவல என்ன…?” என்று அதட்டினார்…

கண்டிப்பாக அப்படியெல்லாம் இருக்காது என தனக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அரண்.

“அது வேரொன்னும் இல்ல தம்பி…சொன்னேனே கவிதை கதைனு அப்பாவும் பொண்ணும் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்கன்னு……அட்னு இப்ப ஒருத்தர் எழுதுறார் தெரியுமா…? அவருக்கு இவங்க ரெண்டு பேரும் பயங்கர ஃபேன் …அவருக்கு அப்பாவும் மகளும் கமெண்ட் எழுதிட்டு, எப்ப ரிப்ளை வருது, என்ன வருதுன்னு நேரம் காலம் இல்லாம பார்த்துட்டு கிடப்பாங்க….

அரண் காலியோ காலி….

“அட் னா….இந்த on line ல எழுதுறாரே அவரா?” இவனுக்கு கன்ஃபர்மேஷன் கண்டிப்பாக வேண்டும்.

ல்லா மனிதர்களுக்கும் தன்னை சுற்றி இருக்கும் சமுதாயம் பற்றி தனக்கென ஒரு பார்வை இருக்கும். அதை அவரகள் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த முனைவதும் இயல்பு.

அதுவும் அரண் போன்று உலகம் சுற்றும் ஒருவனுக்கு, ஒரு விளையாட்டு வீர்னுக்கு அத்தகைய அழுத்தம் அதிகமாகவே இருக்கும்.

அத்தகைய அழுத்தத்தை, சமுதாய அக்கறைகளை, நியாய அநியாய பழக்கங்களை, நிறை குறைகளை, அவன் கருதும் தீர்வுகளை, விளையாட்டு சம்பந்தமாக அவன் எதிர் கொள்ளும் சவால்களை,

அதை அவன் பார்க்கும் கோணங்களை, அவன் வாழ்வை செதுக்கும் உணர்வுகளை அரண் வெளிப்படுத்திய விதம் எழுத்துலகம். துவக்கம் கவிதையில் தான். அவ்வப்பொழுது கவிதைகள் எழுதிக் கொள்வது அவன் வழக்கம். அவன் டைரியில் அது தூங்கிப் போகும்.

அதன் ஒன்லி ரீடர் ப்ராபாத் தான். வேற வழி….ஃப்ரெண்டா இருந்தா இதெல்லாம் அனுபவிச்சு தான ஆகனும்…அவன் அதை புக்கா பப்ளிஷ் செய்யச் சொல்லி அறிச்சு பிடுங்கிக்கிட்டு இருந்தான்றது வேற விஷயம்.

அப்டியாவது இத அடுத்தவங்க தலைல கட்டிட்டு நீ தப்பிச்சுகிடலாம்கிற ஐடியாலதான….இது உனக்கு மட்டுமே கிடச்ச லைஃப் டைம் பனிஷ்மென்ட்…என அரணும் மறுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் ஒரு நாள் ப்ரபாத் அதை கேஷுவலாக திரியேகனிடம் காண்பிக்க…படித்துப் பார்த்தவர்

“ஏன்பா நல்லாதான இருக்கு…..பப்ளிஷ் செய்ய வேண்டியதானே…” என்றார்.

அதன் பின்பு அதை பப்ளிஷ் செய்ய வேண்டும் என தோன்றிவிட்டது அரணுக்கு.

ஆனால் அதை கிரிக்கெட்டர் அரணின் கவிதைகளாக வெளியிட விருப்பம் இல்லை அவனுக்கு. அவன் ஸ்டார்டமின் எஃப்ஃபெக்ட் அதன் மீது விழ வேண்டாம்.

அந்த கவிதைகள் அவன் மனதின் வெளிப்பாடு…..அதை மனதால் பார்ப்போர் மாத்திரம் வாசித்தால் போதும்.

ஆக @ என்ற புனைப் பெயரில் சொந்த பப்ளிகேஷன் வழியாகவே வெளியிட்டான். பின் அவன் பார்வைகளை உரைநடை புத்தகங்களாக வெளியிட்டான் அதே @ என்ற பெயரில்……

@ அவனைப் பொறுத்தவரை  A T அதாவது அரண். T யின் சுருக்கம். புக்கிற்கு வந்த சில வாசகர் கடிதங்கள் மூலம் அவனுக்கு on line publishing அறிமுகமாகியது. அங்குதான் அவன் ஜீவாவை சந்தித்தான்.

ஜீவா ஒரு ரீடர். அவ்வப்பொழுது கமென்ட் போஸ்ட் செய்துவிட்டு போகும் ஒரு நபர்.

அடுத்த பக்கம்