நனைகின்றது நதியின் கரை 10(13)

ஆக ஜீவா இவளது அப்பாவின் கடன் ப்ரச்சனையை தீர்த்து வைக்க உதவி கேட்டது அரணிடம் போலும். அதை செய்து கொடுத்துவிட்டு பதில் உபகாரமாக அந்த அரண்  ஜீவாவை இவளை விட்டு விலக கேட்டிருக்கிறான். சாடிஸ்ட்……!!!!

இவளது ஜீவா மீதான காதல் அரணுக்கு தெரிந்திருக்குமாயிருக்கும். ஜீவாவே அதை சொல்லி இருக்கலாம்…..

இல்லை இவளது @ட்டிற்கான கமெண்ட்ஸை வைத்து ஊகித்திருக்கலாம் அரண்.

@டிற்கு ஜீவா என கமெண்ட் செய்யும் பெண் சுகவிதா என  இவளது அம்மா அவனிடம் Are ல் வைத்து உளறி வைத்தார் தானே…

எப்படியோ இவள் சந்தோஷத்தை வேரறுக்க, இவளை கொல்லாமல் கொன்று பார்க்க, அணு அணுவாய் வதைக்க அந்த அரண் இப்படி செய்திருப்பானாய் இருக்கும்….

பழி வாங்கும் வெறி பிடித்தவன் தானே அவன்……

ஆனால் அரண் கேட்டுக் கொண்ட்டதற்காக இந்த ஜீவா எதற்காக இவளைவிட்டு விலக வேண்டும்…???

இவள் அப்பாவின் பணத்தை காப்பாற்றி கொடுத்துவிட்டு, இவள் வாழ்க்கையை குழி தோண்டி புதைக்க ஜீவா எப்படி முடிவெடுத்தான்?

அவன் ஒரு நாளும் பணத்திற்கு இப்படி ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் நபராக பட்டதில்லையே இவளுக்கு…..மன்யத்திடமிருந்து காப்பாற்றி ஃபெலிக்‌ஸிடம் இவளை பலி இடுவதில் ஜீவா என்ன வித்யாசத்தைக் கண்டான்?????

இந்த கேள்விக்கு  சுகவிதா பதில் கண்ட விதம் தான் விபரீதத்தின் உச்சம்…

தொடரும்…

நனைகின்றது நதியின் கரை 11

Leave a Reply