நனைகின்றது நதியின் கரை 10(11)

“ உனக்கு ஒரு சின்ன ஆக்சிடெண்ட்…..அரண் அந்த பக்கம் வந்தான் போல…..அவன் உன்னை என் கூட அனுப்பி வச்சான்….”

உண்மையை தேவையான வகையில் ப்ரெசென்ட் செய்தான் ப்ரபாத்.

ஜீவாவை தனக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ள இது சமயமல்ல….அனவரதன் லோன் ட்ரன்ஸ்ஃபர் ஆகட்டும்… அதே நேரம் அரண் ஒன்றும் உன் எதிரி இல்லை என இவளும் புரிந்து கொள்ளட்டும்….இதுதான் ப்ரபாத் அப்படி சொல்ல நோக்கம்….

‘அரணா….?’ நிச்சயம் இது சுகவிதா சுத்தமாக எதிர்பார்க்காத பதில். அரண்டும் போனாள். ஒரு வகையில் மிரண்டும் போனாள்.

காரணம் அரணுக்கு ஜீவாவை தெரிந்திருக்கும்…..உனக்கு க்ளோஸானவங்க எனக்கு பழக்கம்…..ஜீவா சொன்னது இந்த அரணையா…? இவன் இவளுக்கு க்ளோஸா?!!!! என்ன பொய் சொல்லி வச்சிருக்கானோ இந்த அரண்.  ஜீவாக்கு ஏன் அது புரியல?

Are போகும் முன்பே chat இல் அரண் பத்தி ஓரிரு முறை ஜீவாவும் இவளும் பேசிக் கொண்டது உண்டு….

இவள் அரணை விமர்சிப்பதும்….அவன் அதற்கு விளக்கம் அளிப்பதுமாயும்…ஜீவா எப்பொழுதும் அரணை நியாயப் படுத்துவான்…..முதல்ல ஜீவாட்ட அரண பத்தி முழுசா வார்ன் செய்து வைக்கணும்’ இப்படியாக இதை மனதிற்குள் குறித்துக் கொண்டாள் சுகவிதா.……

அதோடு நேற்று இவள் அதிக நேரம் காணவில்லை என்ற தகவல் வரை அரண் வழியாக ஜீவாவிடம் செல்வதென்றால்…..அதை அரணுக்கு சொல்லும் அறிவு ஜீவி இந்த பால்பாக்கெட் தானே….

முதல்ல அத நிறுத்தனும்….

ஜீவாவைப் பற்றி தன் காதலைப் பற்றி சுகவிதா ப்ரபாத்திடம் வெளியிட்டாள்.

“FB ல பார்க்ற ஒருத்தன் ஒரு கொலைகாரனா, பொறுக்கியா…….பொண்னுங்களை கடத்திட்டு போய் விக்றவனா…ஏன் ஒரு டெரரிஸ்ட்டா கூட இருக்கலாம்…நீ என்ன லூசு மாதிரி இப்டி செய்துட்டு இருக்க….?” முடிந்தவரை மறுக்கப் பார்த்தான் அவன். அரணைப் பற்றி வெளிப்படையாக பேசும் சூழல் இன்னும் வந்திருக்கவில்லையே…

ஆனால் அவனது கேட்க முடிந்த கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவனை வாயடைக்கும் படி பதில் சொன்னாள் சுகவி.

“ FB  ல பார்த்து ஒன்னும் பழகலை….ஜீவா ஒரு ஆத்தர்…அதுவும் நான் ஃபிக்க்ஷன் எழுதுறவங்க…அவங்க வியூஸ் எல்லாத்லயும் ஒரு நேர்மை இருக்கும்….

அவங்க ஆதங்கத்துல ஒரு நியாயம் இருக்கும்….அதுக்கு அவங்க சொல்ற சொலூஷன்ஸ்ல peace இருக்கும்….

மத்த ஆர்ட் மாதிரி கிடையாது ரைட்டிங்…எப்டியும் நம்மோட இன்னர் மைன்ட் அதுல கண்டிப்பா எக்ஸ்‌ப்ரெஸ் ஆகும்…

அதை புரிஞ்சுக்க கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தா போதும்….எனக்கு ஜீவாவை புரியுது…கரெக்டா சொல்லனும்னா அவங்க நிறைய உன்ன மாதிரி தெரியுமா……உனக்கு அவங்கள கண்டிப்பா பிடிக்கும்….”

இதிலேயே ப்ரபாத் ஸ்டம்ப்டாகி திணறியவன்…

“ஆமா எனக்கு அரணத்தான் ரொம்ப பிடிக்கும், அப்ப அரண மேரேஜ் செய்துக்றியா…..?”

“சீ…..”

“ஏய் என்ன சீ… அவனுக்கென்ன….?”

“அவன்ட்ட நீ வேணா ஏமாறுவ….அதுக்கு நான் இல்லப்பா ஆளு….ஜெலசி ஃபெல்லொ…பணத் திமிரு….பழி வாங்றதுக்காக என்ன வேணாலும் செய்வான்….”

“ஏய் அப்டி என்ன அவன் என்னை ஏமாத்திட்டான்….?”

“ப்ச்….பால்பாக்கெட் நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்…நீ இடையில ட்ராஜடி செய்துட்டு இருக்க….”

“சரி சீரியஸானத சொல்லித் தொல….”

“ஜீவா ஓபனா சொல்லிகிட்டது கிடையாது….பட் எனக்கு புரிஞ்ச வரை அவங்களுக்கு வீட்ல அப்பா மட்டும் தான்….என்னை மாதிரி….உன்னை மாதிரி ஒன்லி சைல்ட் சின்ட்ரோம் ஜீவாக்கும் நிறைய இருக்கும்….கண்டிப்பா மேரிட் கிடையாது….

அதோட அவங்க கண்டிப்பா நிறைய நாட்டுக்கு போயிருக்காங்க…..வேர்ல்ட் லெவல் எக்‌ஸ்போஷர்….தட் டூ, மன்யத்த விரட்டனும்னா கண்டிப்பா, நீ கேட்கிற மாதிரி என் அப்பா சம்மதிக்க முடியாத அளவு ஃபினான்ஷியலி லோவா இருக்க சான்ஸே இல்ல….

அப்பாக்கு பிடிச்ச மாதிரி ஹெல்தி அண்ட் ஃபிட்……. அன்னைக்கு மால்ல பார்த்தேனே…. என் மேல புல்லட் பட்றக் கூடாதுன்னு…. “ பெருமூச்சுவிட்டாள் சுகவி

“ஹி லவ்ஸ் மீ ட்ரூலி…அப்பா புரிஞ்சிப்பாங்க ப்ரபாத்…..பட் சொல்ல வேண்டிய விதத்துல சொல்லனும்….யூ நோ, அப்பா ஈகோவ மட்டும் குத்திடக் கூடாது… மத்தபடி அப்பா நோ சொல்ல எதுவும் இல்ல…

ஜீவாக்கு ஸ்கின் டிஸாசடர் எதுவும் இருக்குமோன்னு எனக்கு ஒரு ஃபீல்…என்னை பார்க்க அவாய்ட் பண்றாங்கல்ல…அதான் அப்டி தோனிச்சு….அவங்கட்ட அதெல்லாம் சொல்லிட்டேன் எனக்கு இதெல்லாம் இஷ்யூ கிடையாதுன்னு…. அப்பாவும்  அப்பியரென்ஸுக்கு இம்பார்டன்ஸ் கொடுக்ற ஆள் கிடையாது….

அதோட சாட் செய்துருக்கேன்…..இத்தன நாள்ள ஒரு தடவை கூட ஜீவா ஜோக்குக்கு கூட எதுவும் வரம்பு மீறி பேசுனது கிடையாது தெரியுமா…..? ஜெம்….

எல்லாத்துக்கும் மேல ஜீவா ஓகே சொன்னதும் என் அப்பாட்ட தான இன்ட்ரோ கொடுப்பேன்….எல்லாத்தையும் விசாரிச்சதும் அப்பா சரின்னு சொல்லிடுவாங்க… அப்பாக்கு ஜீவாவ எவ்ளவு பிடிக்கும் தெரியுமா? அப்பா சொல்லித்தான் நானே அவங்க புக்‌ஸை ரீட் பண்ண ஆரம்பிச்சேன்…

கேட்டிருந்த ப்ரபாத் தான் தன் தலையில் அடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று…..

அடுத்த பக்கம்