நனைகின்றது நதியின் கரை 10(10)

அத்தனை நேரமாய் அவனுக்காய் அவள் தவித்திருந்த தவிப்பிற்கும், பார்வைக்கு கிடைக்காதவனின் அருகாமைக்கும்,  மனதில் இருந்த அவனை இழந்து போவேனோ என்ற பயத்திற்கும் அவனை அணைத்து மார்பில் பம்மினாள். இல்லை முயன்றாள்.

முழுதாய் மயங்கும் முன் அவன் முகம் பார்க்க முயன்ற அவளது முயற்சிகள் இருட்டில் பலிக்காமல் போக….,

“என்னை விட்டுட்டுப் போய்டாதீங்க ஜீவா…ப்ளீஸ் ஜீவா….ஐ லவ் யூ ஜீவா….” எத்தனை தான் முயன்றும், மயங்க கூடாது என்ற அவள் முயற்சி தோல்வியில் முடிய, தவிக்க தகிக்க அவன் மார்பில் மயங்கி சரிந்தாள்.

அவளை கையில் அள்ளிய அரண் தன் காரின் பின் இருக்கையில் வந்து கிடத்தினான்.

“என்னடா ஆச்சு… ஏன் இங்க வந்தா?” ப்ரபாத் முகமெங்கும் பதற்றமும் வலியும்…

“நான் அவளோட மெசேஜஸைப் பார்த்து டூ வீக்ஸ் ஆகுது…..அதுக்கான ரெஸ்பான்ஸ் இது…”

வெறுமையாய் சொன்னான் அரண்.

ப்ரபாத்திற்கு என்ன சொல்லவெனத் தெரியவில்லை.

“நான் அவள அவாய்ட் செய்றேன்னதும்….….அதான்….” அவன் குரல் ஒருவிதமாயிருந்தது.

“அவள பழி வாங்கனுங்கிறதுக்காக மட்டும் தான் நான் உயிரோட இருக்றேன்ற மாதிரி அரண பேசிட்டு….. இங்க இப்டி…முன்னால அவ கொடுத்றுக்க இன்டர்வியூஸெல்லாம் இப்பதான் படிச்சேன்…”

“சரி விடு மாப்ள….சீக்ரம் இந்த மென்டல் டிஸாடர் அவளுக்கு சரியாகிடும்….” சொல்லிவைத்தான் ப்ரபாத். இப்பொழுது வேறு என்ன சொல்ல?

“உன் தங்கச்சிக்கு மென்டல் டிஸாடர் சரியாகுறதுக்குள்ள என்னை ஹார்ட் பேஷண்ட் ஆக்கிடுவா போல…”  இத்தனை மணிக்கு இப்படிச் செய்தால் இவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

சொல்லிய படி தன் கார்க் கீயை ப்ரபாத்திடம் நீட்டினான் அரண். மற்ற இரு காருக்கும் சர்வீஸ் தேவை.

ப்ரபாத்திற்கு அதுவரை அரணின் சுகவி மீதான இந்த ஈர்ப்பு ஒழிந்து போகாதா எனதான் இருந்தது எண்ணம்.

ஆனால் இந்நொடி, இந்த காதல் அரணுக்கும் சுகவிதாக்கும் திருமணமாய் நிறைவேறாதா என தோன்ற தொடங்கியது.

சுகவிதா  மீண்டும் விழிக்கும்போது தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாள். எப்படி வந்தாள் என்றே அவளுக்கு புரியவில்லை….

உண்மையில் வழியில் அரணை அவன் வீட்டில் இறக்கிவிட்டு, அரணின் காரில் இவளை வீட்டில் கொண்டு இறக்கியது ப்ரபாத் தான். சுகவி வீட்டில் அது அரணின் கார் என யாருக்கும் தெரியாது என்ற நம்பிக்கை அவனுக்கு.

ஆனால் அந்த கார் அரணுடையது என அனவரதனுக்கு தெரிந்திருந்தது. சற்று முன்பு அரணை அதில் பார்த்திருந்தார் அவர்.

ஆக வெளியே சென்ற மகள், சுயநினைவு இல்லாமல் அரணின் காரில் வந்து இறங்குகிறாள், உடன் வரும் ப்ரபாத் மட்டும் இல்லையெனில் அன்று அரண் கொலை வழக்கு பதிவாகியிருக்கும். கொன்றவர் அனவரதன் என அலறும் டீவீஸ்… இத்தனைக்கும் மகள் 4 மணி நேரம் தன் அம்மாவோட ஃபோனைக் கூட அட்டென் செய்யலை என்பது அனவரதனுக்கு தெரியாது….

அரண் விஷயத்தில் கவனம் தேவை. அரண் எதுவும் மகளை மிரட்டுகிறானோ?

இப்படி ஒரு நினைவு அவர் மனதில் ஓடிக் கொண்டு இருக்கும் போதுதான் மன்யத்திற்கு அரண் க்ரூப்ஸோடு பிஸினஸ் டையப் பெரிய அளவில் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைக்கிறது.

கரெக்டாய் தப்பா புரிஞ்சுட்டார் அனவரதன்.

அரண் திரியேகன் தான் தன்னை இப்படி கடனில் கோல்மால் செய்து ட்ராப் செய்து,  மகளை கேட்டு மிரட்ட சொன்னதோ மன்யத்தை? இப்படித்தான் புரிந்தார் அனவரதன்.

ந்த நிலையில் மயக்கம் தெளிந்த சுகவிதா தன்னை ப்ரபாத் தான் வீட்டில் கொண்டு வந்து சேர்த்தான் என அறியவும் மறுநாள் அவனை தன்னை சந்திக்க வரச் சொன்னாள். இவளைப் பற்றி ஜீவாவுக்கு இன்ஃபோ கொடுக்கும் இவள் சைட் ப்ளாக்க்ஷீப்  இந்த வைட் பால்பாக்கெட் தானா?

மெசேஜை பார்க்க கூட இல்லாமல் இருந்த ஜீவா ஆன்டைம்க்கு மெசேஜ் பார்த்து இவளைத் தேடி வந்தானே…. சுகாவக் காணோம்னு இந்த பால்பாக்கெட் பதறிருப்பான்…பயந்து போய் ஜீவா மெசேஜ் பார்த்திருப்பான்….. ஆக இப்ப  இவ பால்பாக்கெட்டைப் போடுற போடுல ஜீவா இங்க தெறிச்சு வரனும்…

“நான் எப்டி உன் கூட வந்தேன்?” அதிகாரமாய் தொடங்கினாள்.

எதிரில் நின்ற ப்ரபாத் எல்லாவற்றிற்கும் எப்போதும் தயார். சுகவிய பிறந்ததுல இருந்து பார்த்து வளந்தவனாச்சே…..

நேற்று இருந்த சூழலில், இவளது மொட்டைப் பிடிவாதத்தில் அரண் சுகவியிடம் தன்னை காண்பித்துவிடத்தான் எண்ணி இருந்தான்….அதையே சமாளித்தாயிற்று. இப்பொழுது லோன் கதை முடியும் வரை அமைதியாய் இருக்கலாம் என தான் முடிவு,

அடுத்த பக்கம்