நனைகின்றது நதியின் கரை 10

ன்று அரண் ஸ்வீடன் போக வேண்டும். Are என்பது ஊர் பெயர்…..அங்கு அந்த பனி சறுக்கு ஊரில் ஒரு விளம்பர பட சூட்டிங்……இவன் ஸ்பான்சருடையது…அங்கு சென்ற பின்புதான் தெரியும் இவனோடு சேர்ந்து நடிக்கும் இன்னொரு செலிப்ரிடி சுகவிதா என.

எவனுக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யனும்னு தோணுச்சாம்….அவளுக்கு அவன பிடிக்காதுன்னு உலகத்துக்கே தெரியும்….என்ற எரிச்சலுடன் தான் சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனான்.

ஆனால் அவனே எதிர்பாரா வண்ணம் அங்கு அவளைப் பார்க்கும் போது மனதிற்குள் சுகம் பரவித்தான் தொலைத்தது. ஏறத்தாழ ஒருவருடம் கழித்து, மானு திருமணத்திற்கு பிறகு இப்பொழுதுதான் பார்க்கிறான்.

அவளும் அவளது அம்மாவுமாக வந்திருந்தனர். அதனாலோ என்னவோ இன்று நாள் முழுவதும் சுகவி இவனை திட்டவோ முறைக்கவோ இல்லை….. அவளுக்குச் சொல்லும் வேலையை செய்ய வேண்டியது, போய் மொபைலுடன் அவளது அம்மா தோளில் சுருண்டு கொள்வது…இப்படியாக இருந்தாள் அவள். அவள் சந்தோஷமாக இல்லையோ…?

எது எப்படியோ அவள் இவன் புறம் திரும்பக் கூட இல்லை….

முதல் நாள் சூட்டிங் முடிந்தது. இன்னும் இரண்டு நாள் சூட்டிங் இருக்கிறது. ஆனால் இடையில் ஒரு வீக் எண்ட்…அந்த நாட்கள் நோ சூட்டிங்…..ஆக மறுநாள் அங்கிருந்து பனி சறுக்கு விளையாட சென்றான் அரண். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வென் பனிக்குள் புதைந்து கிடந்தது மலையும் தரையும்…. சில்லிட்ட குளிர்…

சில மணி நேரம் விளையாடிவிட்டு தங்கி இருந்த இடத்திற்கு திரும்பலாம் என அரண் நினைத்த நேரம் ஆரம்பித்தது ஒரு வித புயல் போன்ற காற்று….பனியை அள்ளி தூற்றிய படி…அதில் மாட்டுவது எத்தனை ஆபத்து என அவனுக்கு தெரியுமாததால் அங்கு தெரிந்த ஒரு log ஹவுசிற்குள்  நுழைந்தான்.

அபண்டட் ஹவுஸ் போலும்… கதவு பூட்டியிருக்கவில்லை….உள்ளே எதுவுமில்லை….வீடும் ஆங்காங்கே டேமேஜ்.

ஆனாலும் இப்போதைக்கு இது சேஃப் ஸோன்…..உள்ளே சென்று கதவு காற்றில் திறக்காத வண்ணம் பூட்ட என்ன செய்ய வேண்டும் என இவன் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது இவன் வந்த வழியாக வந்து கொண்டிருந்த சுகவிதாவும் அவளது அம்மா புஷ்பமும் கண்ணில் பட்டனர். பயத்தில் நடுங்கிப் போய் இருந்தாள் மகள்.

“aunty….இங்க வாங்க aunty….இந்த நேரத்ல வெளிய இருக்றது ரொம்பவும் ரிஸ்க்….”

இவன் இருக்கிற இடத்துக்கு வர நிச்சயமாக அந்த குட்டிக் குரங்கு ஒத்துக்காது….ஆனா aunty ஸூட்டிங் ஸ்பாட்டிலுமே இவனிடம் இலகுவான முகபாவத்துடன் ஒன்றிரண்டு கர்டியஸ் புன்னகை வார்த்தைகளுடன் தான் நடந்து கொண்டார். சூழ்நிலையை புரிந்து கொள்வாராய் இருக்கும்….

இல்லையெனில் அவர்களை இங்கு இருக்க சொல்லிவிட்டு இவன் கிளம்பிவிட வேண்டியது தான்.

பயத்தில் மிரண்டு போய் இருந்தாலும், அவன் நினைத்தது போலவே, சுகவிதா மறுக்க, அவளை கட்டாயமாக இழுத்துக் கொண்டு உள்ளே வந்தார் அவளது அம்மா….

அந்த மரவீட்டின் கதவை பனிக்காற்று திறக்க முடியாத வண்ணம் இவன் இழுத்துக் கட்டிவைத்துக் கொண்டிருக்கும் போதே….தன் பேக்கிலிருந்து எடுத்து, ஒரு சிறு கேஸ் ஸ்டவ்வை ஆன் செய்திருந்தாள் சுகவிதா. வெல் ப்ரிப்பர்ட்….

அவளது அம்மா சிரித்தார்….”அவ எல்லாத்துக்கும் பயப்படுவா…அதான் ரொம்ப ப்ரிகாஷியஸாவும் இருப்பா……நீங்களும் வந்து உட்காருங்க ….” தன் அருகில் இடம் காண்பித்தார்.

ஸ்விம்மிங் பூல் விஷயம் இவனுக்கு ஞாபகம் வந்து உறுத்தியது எனில்

“அம்மா…” பல்லைக் கடித்தாள் சுகவிதா.

“நம்ம ஸ்டவ்…..யாருக்குலாமோ ஷேர் பண்ண முடியாது..” மெல்லமாக முனங்கினாள். ஆனாலும் ஒரே அறைக்குள் இருந்து கொண்டு கேட்காமல் போக இவன் என்ன செவிடா?

சிரிப்பாக வந்தது அரணுக்கு…..இன்னும் ஸ்கூல் படிக்ற குட்டிப் பாப்பா மாதிரி…

“அந்த ஸ்டவ்வ வாங்கினது நான்….அது என் ஸ்டவ்….உனக்கு பிடிக்கலைனா தூரப் போ….” அவளது அம்மா புஷ்பம் அவளை சீண்டினார்.

அவர் காண்பித்த இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டான் அரண். இவனது நேரடிப் பார்வைக்கு வராதவாறு அவளது அம்மாவின் இடப்புறம் ஒண்டிய சுகவிதா தன் மொபைலுக்குள் புதைந்து போனாள்.

“இன்னும் டூ அவர்ஸ் இப்டி இருக்குமாம்…அப்றம் போகலாமாம்….” Are வெதர் ரிப்போர்ட் பார்த்து தன் தாயிடம் சொன்னவள் அதன் பின்னும் அந்த மொபலைத்தான் குடைந்து எடுத்தாள்.

“அப்றம் சொல்லுங்க தம்பி…..உங்களப் பத்தி ரொம்ப கேள்விப் பட்டுறுக்கேன்…..பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசை…இப்பதான் முடிஞ்சிருக்கு….” புஷ்பம் இவனிடமாக பேச்செடுத்தார்.

அரணுக்கு ஆச்சர்யமாய் இருந்தது, இவனிடன் சகஜமாக பேசுகிறாரே.

“உங்கம்மாவும் நீங்களும் எப்டி இருப்பீங்க…அப்டிதான் இவளும் இவங்க அப்பாவும்….கொஞ்சம் ஓவர் டோஸ்…….ஆனா உங்கப்பா கொஞ்சமாவது மிடில் பாய்ண்ட்ல இருப்பாங்களே அப்டித்தான் நான்….”

புன்னகைத்து வைத்தான் அரண்.

“அம்மா கிடையாது…நான் பிறந்தப்பவே அவங்க…….வீட்ல நானும் அப்பாவும் தான்…”

இவன் தன் சூழ்நிலையை இயல்பாய் விளக்க, புஷ்பத்தின் முகத்தில் தாய்மைக் கோடுகள்.

அடுத்த பக்கம்