மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 2(4)

ந்த மூவர் அணி அன்றிலின் அம்மம்மா ஊரான ஆவுடையனூரை அடைந்த போது அவர்கள் வீடிருந்த தெருவிலேயே யாருமில்லை….

அந்த வீட்டில் அம்மம்மா தாத்தா காலத்திற்கு பின்பே யாரும் இல்லைதான்….. ஆனால் பூர்வீக வீடு என்பதால் அதை  அதே தெருவிலிருந்த இவர்கள் உறவினர் ஒருவர் குடும்பத்திடம் பராமரிக்க சொல்லி சாவி கொடுத்திருந்தனர்….. அந்த தைரியத்தில்தான் அங்கே கிளம்பிச் சென்றது….

இப்போ அந்த சாவி கொடுத்திருந்த வீட்டில் ஆள் இல்லை…

“சரி வெயிட் பண்ணி டைம வேஸ்ட் செய்ய வேண்டாம்….. வாங்க போலாம்” என்றபடி படு கேஷுவலாய் பஜ்ஜி வீட்டின் கேட்டில் ஏறி தாண்டி குதித்திருந்தான் இதற்குள்…

ஒரு நான்கு வருடம் முன்புவரை இவளும் செய்வதுதான்…..கேட் திறந்திருந்தா கூட அதில் ஏறி உள்ள இறங்குறதுதான் கௌரவமா தெரியும் இவளுக்கும் பஜ்ஜிக்கும்…. ஆனா இப்ப எப்படியாம்?

அதுவும் தலைல பூ வைக்க இதுதான் சரியா இருக்கும்னு ஹால்ஃப் சேரி வேற கட்டிட்டு மார்கெட் வந்த ஆள் இவ…

மூஞ்சி சுருங்க முள்ளம் பன்றி பாவத்தோடு பஜ்ஜியை முறைத்துக் கொண்டிருந்தாள் இவள்….

அவனோ கேட்டுக்கு உள்புறமாக நின்று இவளைப் பார்த்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தான்….

“இரு எதாவது வழி இருக்குதான்னு பார்க்கிறேன்…” என்றபடி அடுத்து அவன் வீட்டுக்குள் போக…… இவளோடு வெளியில் நின்றிருந்த ஆதிக்கோ சுற்று முற்றும் பார்த்தவன்…. அருகில் கிடந்த ஏணியை எடுத்து வந்து குட்டையாய் இருந்த காம்பவ்ண்ட் சுவரில் சாய்த்தான்….

“இது ஓகேவான்னு பாருங்க…” என்றபடி…

இதுவுமே கொஞ்சம் கூச்சமாய் இருந்தாலும்….. இதைவிட பெட்டர் ஆப்ஷன் எதிர்பார்க்க முடியாது என்பதால்….. அவள் அதில் ஏறி சுவரின் உச்சியை அடைய….. அதை கண்ட பஜ்ஜி இப்போது உள்பக்கமாக இன்னொரு ஏணியை சாய்த்து வைக்க….

அடுத்து ஆதிக் கேட் வழியாக ஏறி குதித்து உள்ளே வரும் போது அவனுக்கு எதிராக உள்ளே நின்றிருந்தாள் இவள்.

அடுத்து பூப்பறிக்கும் படலம்…… வீட்டின் ஒரு புற முற்றத்தில்  பெரிதாய் இரும்பு கம்பிகளால் பந்தலிட்டு அதன் முழுவதுமாய் பரவிக் கிடந்தது இருவாட்சிக் கொடி….

மொட்டை மாடியிலிருந்து நேராக கொடியின் பந்தலில் இறங்கி பறிப்பதுதான் பூ பறிக்க இருக்கும் ஒரே ஆப்ஷன்…. வழக்கமாக இவள்  அப்படி பறிப்பதுதான்….

அதே போல் இன்றும் இவள் அப்படி பந்தலில் இறங்கி பறிக்கத் தொடங்கினாள்….. எதேச்சையாய் அவள் பார்வை  கீழிருந்த ஆதிக்கின் மேல் பட….. முழு அவனிலும் முகாமிட்டிருந்தது முழு ஆழ அக்கறை….. முகாந்திரமுள்ள  கவனம்….  தலைகாட்ட தடை விதிக்கப்பட்ட தவிப்பு….  எதற்காம்…?

அதன் பின்தான் அதை கவனித்தாள்…. பந்தலின் எந்த புறமெல்லாம் இவள் போகிறாளோ….அந்த புறமெல்லாம் கீழே அவன் நகர்ந்து கொண்டிருந்தான்….

பந்தல் தாங்காமல் இவள் கீழே  விழுந்துவிடுவாளோ என அவன் நினைப்பது மெல்லமாய்….மென்மையாய் புரிகின்றது இவளுக்கு…

எங்கோ ஒரு மொட்டவிழ்கிறது இவளுள்….

 

திய சாப்பாட்டிற்கு இங்கு வழி இருக்காது என்பதால்…. வரும் வழியிலேயே அதை ஹோட்டலில் வாங்கி  வந்திருந்தான் பஜ்ஜி…. ஆனால் இப்படி கை கழுவ கூட தண்ணி இல்லாத சூழல் இங்கு இருக்கும் என்பது சுத்தமாய் எதிர்பாரா ஒன்று…

ஆக இப்போது தண்ணீருக்காகவும்…..அதோடு பூ கட்டும் நாருக்காகவும்…..இவர்களது வயலுக்கு போவதென முடிவானது…

அங்கு பம்புசெட்கான மோட்டார் ரூம் சாவி அதன் நிலையின் மேல் புறத்திலேயே மறைத்து வைக்கப் பட்டிருக்கும் என அன்றிலுக்கு வரை தெரியுமாதலால்….போய் பம்ப் செட்டை ஆன் செய்து……அங்கிருந்தே சாப்பிட்டு…..

குலை வெட்டியபின் காய்ந்து நின்ற வாழை மரத்திலிருந்து நார் பிரித்து வேக வேகமாக பூ கட்டி என இவளின் நேரம்  பறந்தது என்றால்…

பஜ்ஜியும் ஆதிக்கும் இவளுக்கு பூக்கோலத்திற்கு தேவைப்படும் என எதேதோ பூக்களை பறிப்பதில் காலத்தை காலி செய்தனர்…

இதோடு இப்படியே கிளம்பி வந்திருந்தால் அடுத்து அவள் அழுத காலங்கள் எல்லாம் வராமலே சென்றிருக்குமோ…?

ஆனால் அன்று அதெல்லாம் தெரியவில்லை….

ஏற்கனவே இப்போது கிளம்பினால்தான்….நெல்லையில் சென்று டேக்சி எடுத்துக் கொண்டு ஆதிக் திருவனந்தபுரம் கிளம்ப சரியாக இருக்கும் என்ற நிலை….

அதில் “வந்ததே வந்துட்டோம்…..நம்ம தோப்பு இளநி ஒன்னு குடிச்சுட்டு போய்டலாம்…..அடுத்து  எப்ப சான்ஸ் கிடைக்கோ “ என ஆரம்பித்தான்  பஜ்ஜி…

கிணற்றை சுற்றிலுமே தென்னை மரம் தான் நிற்க்கும்…..அதில் ஒன்று மோட்டர்கான ரூமை ஒட்டி சாய்ந்து வளர்ந்திருக்கும்…..

பஜ்ஜிக்கு மற்ற மரத்திலெல்லாம் ஏறத் தெரியாது என்றாலும்…… மோட்டர் ரூம் டெரசிலிருந்து இந்த ஒரு மரத்துக்கு மட்டும் எப்போதும் ஏறிவிடுவான்…… ஆக இப்போதும் அவன் அந்த மரத்திலேறி இவர்களுக்காக காய்  பறிக்க…

அந்த ஒத்தை ரூம் டெரசில் நின்று ஆதிக்கும் அன்றிலும்  பஜ்ஜியை கவனித்துக் கொண்டிருந்தார்கள்….

கீழ விழுந்தா அடுத்து இருக்கிறது கிணறாச்சே…. பொதுவாக அந்த பகுதி கிணறுகளே படு ஆழமாய்தான் இருக்கும்…. அதில் இந்த கிணறோ எல்லாவற்றையும்விட ஆழமான ஒன்று….

அன்றிலுக்கு இந்த கிணறை பார்த்தாலே தலை சுற்றுவது போல் ஒரு ப்ரம்மை உண்டாகும்….ஆக அந்தபக்கம் அவள் திரும்ப கூட மாட்டாள்….

இதில் பஜ்ஜி அதற்கு நேராக மேலே மரத்தில் இருக்கவும்…. பதறி பதறி அவனையே பார்த்தபடி…. “கவனமா இருடா…..அந்தா அதமட்டும் பறி…..இந்த பக்கமா திரும்பாத….வரலைனா விட்டுடு….” என அவனுக்கு இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுத்துக்  கொண்டிருந்தவள்…..

ஒரு கட்டத்தில் அவனிடம் பேசியபடி மறந்து போய் பின் புறமாக நகர…..கைப்பிடி அற்ற அந்த டெரசிலிருந்து அப்படியே  கிணற்றுக்குள் விழுந்தாள்….

தொடரும்..

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3