தனியா மாட்டினா அவனை அரச்சு தக்காளி சட்னி வச்சுடலாம்ன்ற அளவுக்கு பஜ்ஜி மீது அன்றிலுக்கு கோபம்…. பின்ன அம்மம்மா ஊருக்கு சும்மா போனாலே எப்பவும் எதிலும் ரொம்பவே கவனமா இருக்க வேண்டி இருக்கும்…
பஜ்ஜிட்டயே கூட ரோட்ல நின்னு பேசிட முடியாது….. விஷேஷத்துக்கு வந்த அத்தனை விருந்தாளிகள் இருக்ற வீட்டுக்குள்ள கூட…… அதுவும் பெரியம்மா…… அத்தை…..அம்மா….. மாமான்னு இவங்க முன்னால பஜ்ஜியும் இவளும் பேசினா கூட, சிலர் பஜ்ஜியையும் இவளையும் சேர்த்து எதாவது ஏறுமாறாய் சொல்லி வைப்பார்கள்… கடுப்படிக்கும்…
இதில் இரண்டு ஆண்களும் இவளுமாய் மட்டும் போய் நின்னால் எப்படி இருக்குமாம்….?
ஆதிக்கோடு பஜ்ஜி மட்டும் போவானாயிருக்கும் என நினைத்துதான் அம்மம்மா வீட்டு செடியை பத்தி இவள் சொன்னதே….. இவ பார்த்தவரையில் மிக பெரிய இருவாட்சி செடி அதுதான்….. இந்த பஜ்ஜி லூசு….. அறிவுகெட்ட மட சாம்ப்ராணி… இவ வந்து எல்லாம் செய்து கொடுப்பான்னு இவட்ட கேட்காமலே ஆதிக்ட்ட சொல்லிட்டு….
ஆதிக் முன்னிலையில் எந்த மறுப்பையும் ஒரு சிறு முக சுண்டுதலாகவோ முனகலாகவோ கூட காண்பிக்க இவளுக்கு மனமில்லை……. அது அவனுக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்னு சொல்றது போல இருக்குமே….. ஏனோ அது முறையாய் படவில்லை…
ஆக மனசுக்குள் மட்டும் முறுமுறுத்துக் கொண்டு காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்தாள் இவள்.
ஆதிக் பஜ்ஜிக்கு அருகில் முன் சீட்டில் அமர்ந்தவன்…. முதல் சில நிமிடங்களிலேயே இவர்கள் வந்திருந்த பெரியம்மாவின் காரைப் பற்றி பேச தொடங்கினான்…..
அந்த பஜேரோ ஸ்போர்ட் கார் இவளுக்கும் ஃபேவ்…. அதுமட்டுமல்ல….. கார்ல ஏறினாலே பெரும்பாலும் ரோட்ல போற கார்ஸ்….அதோட மாடல்ஸ்… ஃபீச்சர்ஸ்…..இஞ்சின்…..அதோட பவர்….அதுக்கு ஈக்வலான மத்த கம்பனி கார் எது…. இப்டித்தான் இருக்கும் இவளுக்கும் பஜ்ஜிக்குமான பேச்சு…. சின்ன வயதிலிருந்தே ரெண்டு பேருக்கும் கார் ரேஸ்னா பைத்தியம்….
வீட்ல மத்தவங்கள்ளாம் இவங்களப் பார்த்தா இந்த விஷயத்தில் தெரிச்சு ஓடுவாங்க….
ஆனா ஆதிக்கும் எக்ஸாக்ட்லி இவங்களப் போலவே இதையெல்லாத்தையும் பேசிக் கொண்டிருந்தான்…. எப்ப எதில் அவன் கூட இயல்பா இவ பேச ஆரம்பிச்சான்னு இப்ப யோசிச்சாலும் இவளுக்கு தெரியலை….
அதிலும்
“சின்ன வயசில் நாங்க ஷீமேக்கரோட ஸ்டான்ச் ஃபேன்ஸ்….. அவர மீட் பண்ணலாம்னு அப்போ ஒரு காம்படிஷன் அனவ்ன்ஸ் செய்திருந்தாங்க……18 இயர்ஸ்க்கு மேல உள்ளவங்கதான் பார்டிசிபேட் செய்யலாம்…. ஆனா நான் வேண்டாம்னு சொல்லியும் ஒரு கிரேஸ்ல இந்த அனி அவ அப்பா பேர்ல அப்ளை செய்தா…. க்விஸ்….ஸ்லோகன் ரைட்டிங்…அப்டிதான் எல்லா ரவ்ண்ட்ஸும்….. மெயில் மூலம்தான் எல்லாம்….. இது ஜோரா செய்யும் அதெல்லாம்….. கடைசில நம்பவே முடில இவ செலக்டட்….ஆனா போறது மாமாதான போகனும்…..
பட் மாமாக்கு இதெல்லாம் இஷ்டம் கிடையாது…. ஸ்விசர்லன்ட்க்கு ஃப்ரீ டிக்கெட் கொடுத்து ஷீமேக்கர மீட் பண்றதுக்கு வான்றான்…..மாமா என்னனா முடியவே முடியாதுன்னுட்டாங்க…. எனக்கு தெரியும், செலக்ட்டே ஆனாலும் இதுதான் நடக்கும் நம்ம வீட்லன்னு…. அதுக்குத்தான் முதல்லயே வேண்டாம்னு சொன்னேன்….. இவ சும்மா funனு சொல்லிட்டு…. கடைசி ‘போய் ஜஸ்ட் நாலு ஃபோட்டாவாது அவர் கூட எடுத்துட்டு வாங்கப்பா’ன்னு ஒரே அழுகை….. அதில் நாலு நாள் ஃபீவர் வேற….
அடுத்து அந்த கான்டஸ்ட் கன்டக்ட் செய்தவங்க டைம் முடிஞ்சுட்டு… நாங்க நெக்ஸ்ட் ஸ்கோர் வாங்கினவங்கள அனுப்பிகிறோம்னு சொன்ன பிறகுதான் அழுறதை நிறுத்தினா……” என இவளது ஷீமேக்கர் அனுபவத்தை பஜ்ஜி விளக்கவும்…
தன் வாலட்டை திறந்து ஒரு குட்டி கீ செய்னை எடுத்து நீட்டி…..” இந்தாங்க… இது உங்களோடது….அந்த கன்டஸ்ட் வின்னரா அவர மீட் பண்ண போனப்ப கொடுத்தார்…. நியாயபடி உங்களுக்குதானே கிடச்சுறுக்கனும்” என ஆதிக் கொடுத்த போதோ….
அதில் ஒரு கணம் இவள் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து…. பின் ஆனந்த உச்சத்தில் அவனை ஆச்சர்ய ரசனையோடு பார்க்க…. பின்ன இவ்ளவா இவள மாதிரியே ஒருத்தன் இருப்பான்…. இப்போது இவள் கண்களை தன் பார்வையால் சந்தித்த ஆதிக்கின் கண்களிலும் இவளைப் போன்றே அதே வகைப் பார்வை….
அதில் ஏனோ இவள் சற்றாய் தடுமாற….
அவனுமே இப்போது இவளிடமிருந்து விழியை விலக்கிக் கொண்டவன்
“எனக்கு புரியுறவரை….அநேகமா அந்த contestல உங்களுக்கு அடுத்த ஸ்கோர் வாங்கினது நானா இருப்பேன்னு நினைக்கிறேன்….. நானும் அப்பா பேர்லதான் அனுப்பி இருந்தேன்….. செலக்ட் ஆகி இருக்கோம்னு ஸ்விஸ் வர சொல்லவும்…. அப்பா என் சன்க்கு ஸ்பான்சர் எதுவும் வேண்டாம்….எல்லா செலவும் நான் பார்த்துக்குறேன்……ஜஸ்ட் கூட வர பெர்மிஷன் கொடுங்கன்னு எப்டில்லாமோ அவங்கள கன்வின்ஸ் செய்து என்னைய கூட்டிட்டுப் போனாங்க….. அந்த ஸ்னாப்ஸ் அந்த ஃபோல்டர்ல இருக்கு….” என தன் புற கதை சொன்னபடி தன் லேப்டாப்பை எடுத்து ஆன் செய்து…… பின்னாலிருந்த இவளிடம் கொடுத்து “அதுல பிக்சர்ஸ்ல ஷீமேக்கர்னு ஃபோல்டர் இருக்கு பாருங்க…..” என ஆதிக் கொடுத்த போதோ
இல்லை அடுத்து அதிலிருந்த ஃபோட்டோக்களை “ கார் ஸ்னாப்ஸ் இருக்கு பாருங்க அது அவரோட ரெகுலர் யூஸ் கார்ல எடுத்தது…. ஆக்சுவலி contestantஐ அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போறதாலாம் ப்ளான் கிடையாதாம்…. ஆனா எங்களை அவர் வீட்டுக்கு இன்வைட் பண்ணார்…. போயிருந்தோம்….. வீட்ல எடுத்த மாதிரி இருக்ற ஸ்னாபஸ்லாம் அதுதான்….. அவர் ரொம்ப ஃப்ரெண்ட்லி பெர்சன்….. அவங்க ரான்ச்க்கும் போனோம்…. அந்த horses இருக்ற போட்டோஸ்லாம் ரான்ச்ல எடுத்தது… ” என ஷீமக்கருடனான தனது ஃபோட்டோக்களை ஆதிக் விளக்கிய போதோ
அவைகளை ஆசை ஆசையாக பார்த்து முடிக்கவும் அடுத்த ஃபோல்டர் ஃபோட்டோக்களையும் பார்க்கவிடுவானா என கன்னாபின்னா ரேஞ்சில் ஒரு குறுகுறுப்பு இவளுக்கு எழுந்து வர…. “நெக்ஸ்ட் போல்டர் ஓபன் செய்தா என் ஃபேமிலி ஃபோட்டோஸ்லாம் இருக்கும் “ என அவன் அனுமதித்த போதோ….
பொதுவா தன் லேப்டாப் என்பது அன்றிலுக்கு அவளது டைரி போல்….. அதைப் பார்ப்பதும் அவள் மனதைப் பார்ப்பதும் ஒன்றுதான் என்பது போல தோன்றும் அவளுக்கு….. ரொம்பவும் பெர்சனல்….. யாரிடமும் அதை தூக்கி கொடுத்துவிடலாம் மாட்டாள்….
அவனோ எளிதாக தன்னதை தர……’மோசமா எதாவது அதில் இருந்தால் இப்படி தருவானாமா ?’ என்ற கேள்வியுடன் மற்ற ஃபோல்டர்களை அதில் இருந்த அவனது அம்மா அப்பா அக்கா மற்றும் நட்புகளுடனான அவன் தருணங்களை அவள் பார்த்து முடித்த போதோ…..
ஆதிக்குடனான இந்த பயணத்தை தான் ரொம்பவுமே விரும்புவதை உணர தொடங்கி இருந்தாள் அவள்.