மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 2 (2)

“அக்கா துபைல இருக்கா…. நாளைக்கு மார்னிங் அவளுக்கு பேபிஷவர் பங்க்ஷன்…. அவளுக்கு இங்க உள்ள ஒரு பர்டிகுலர் பூ ரொம்ப பிடிக்கும்…அதை வாங்கிட்டு போகனுன்றதுக்காகத்தான் இங்க வந்தேன்…..  ஆனா பூ அடையாளம் தெரிய மாட்டேங்குது….” கொஞ்சமும் இவள் எதிர்பாரா ஒரு காரணத்தை சொன்னான் அவன்….

“ அக்காக்கு சர்ப்ரைஸா கொடுக்கனும்றதுதான் ப்ளான்…..அதான் அவள கூப்ட்டு கேட்க முடியல……அதோட பூ வாங்கன்னு இங்க வந்து நின்னுட்டு இருக்கேன்னு தெரிஞ்சா டென்ஷனாவா…. சென்னைல இருந்து நேர அங்க வந்துடுவேன்னு நினச்சுட்டு இருப்பா….அம்மா வேற அங்க அக்கா வீட்டுக்கு போய்ட்டாங்களா….அக்காக்கு தெரியாம அவங்கட்ட பேசவும் முடியாது….”

அவன் சொல்ல சொல்ல….. ஏதோ வகையில்  ஒரு இனிமையான  உணர்வு அன்றிலினுள்…. ஒருத்தன் அவன் அக்காவுக்காக இவ்ளவு அலைவானாமா? அதுவும் ஜஸ்ட் பூக்காக…

“சென்னைல ஜாதி மல்லின்னு சொல்வாங்கல்ல….. கிட்தட்ட அது போலதான் இருக்குமாம்…ஆனா முழுசா வைட் கலர்ல அதைவிட கொஞ்சம் பெருசா இருக்குமாம்……இங்க கிடைக்கிற பிச்சிப் பூவும் இல்லையாம்…. அதைவிட கொஞ்சம் திக்கா இருக்குமாம்… நைட் பூத்தாலும் காலைல வாடாம இருக்குமாம்…. நேம் சரியா நியாபகம் வர மாட்டேங்குது” அவன் விளக்கத்தில் பூவில் பி எச் டி ரேஞ்சில் சுத்திகிட்டு இருக்கும் அன்றிலுக்கே தலை சுத்தியது….

அதோடு அடுத்து கடையிலிருந்த ஒரு பூவையும் எடுத்துக் காண்பித்தான்… “கடக்காரர் அப்டின்னா இதாதான் இருக்கும் …ரெண்டு நாள்னாலும் வாடாதுன்றார்… ஆனா இதுல ஸ்மெல்லே இல்ல……அக்கா காலேஜ் ஃப்ரெண்ட் ஒரு அக்கா இங்க இருந்து வருவாங்க…..  அவங்கதான் அப்ப அப்ப அக்காக்கு பிடிச்ச அந்த பூவ கொண்டு வந்து கொடுப்பாங்க…. நைட் தனியா ட்ராவல் செய்றப்ப இவ்ளவு மணமான பூவ வைக்க மாட்டேன்னு காலேஜுக்கு மறு நாள் வச்சுட்டு வருவாங்கன்னு அக்கா சொன்ன நியாபகம்….” அவன் விளக்க..

“இருவாட்சின்றது போல இருக்குமா நேம்?” இவளுக்கு தோன்றியதைக் கேட்டிருந்தாள் அன்றில்…

ஆதிக் முகத்தில் ஆயிரம் மென் சூரியன்கள்….

“யெஸ் அதான்…. இங்க எங்க கிடைக்கும் அது?” அத்தனை ஆர்வமும் உற்சாகமும் அவன் முகத்தில்…

“அது….. கடையில எல்லாம் கிடைக்காது….. “ தயங்கிதான் சொன்னாள் இவள்..

பூக்காக வந்துட்டு அது கிடைக்காம போக வேண்டி இருக்குமே அவன்…

“கடையில இல்லன்னா எங்க கிடைக்கும்….. “ இது பஜ்ஜி…

“பொதுவா வீட்லதான் இங்க வளத்து பார்த்துறுக்கேன்…..விக்றதுக்கு மார்கெட்க்கு வராது……” தயங்கியேதான் இதையும் சொன்னாள் அன்றில்…… அவள் குரலிலிலும் முகத்திலும் வருத்தம்..

“ஓ” என்று அந்த பதிலை ஏற்ற ஆதிக்கின் முகத்தில் ஏமாற்றம் என்றால்

பஜ்ஜியோ “இங்க யார் வீட்ல பார்த்த?” என்றான்…

அவன் கேட்ட விதமே அங்க போக அவன் ரெடியாகிவிட்டான் என தெரிவிக்க

பேந்த முழித்தாள் அன்றில்…

உதவி செய்றது ஒன்னும் இவளுக்கு தப்பால்லாம் தெரியலைதான்….இருந்தாலும் யாருன்னே தெரியாத ஒருத்தன் கூட இங்க இவங்க ஆட்கள் வீட்டுக்கு போய் நிக்றது ரொம்பவுமே அபத்தமாக  பட்டது அவளுக்கு.

“வாங்க பாஸ்….. எங்க ஊருக்கு வந்துட்டு வெறும் கையோட போவீங்களா….? அதுவும் கன்சீவா இருக்கவங்களுக்குன்னு ஆசையா வாங்க வந்துட்டு….” பஜ்ஜியும் கொஞ்சம் எக்‌ஸ்ட்ரீமா எதையும் செய்றவன் தான்….. அவனும் களத்தில் இறங்க….

அடுத்த 10 ஆம் நிமிடம் அன்றிலின் அம்மா வழிப் பாட்டியின் பூர்வீக வீட்டை நோக்கி இவர்களது காரில் சென்று கொண்டிருந்தனர் மூவரும்..

“நைட்தான பாஸ் உங்களுக்கு ஃப்ளைட்….அதுக்குள்ள பறிச்சு கட்டிரலாம்….அனி பூ விஷயத்தில் எக்ஸ்‌பெர்ட்….ஃபாஸ்ட்டா பறிப்பா…செம ஃபாஸ்ட்டா கட்டவும் செய்வா….. “ இவட்ட கேட்காமலே இவ தலையில் பொறுப்பை போட்டு…. இதை சொல்லியே ஆதிக்கையும் சம்மதிக்க வைத்து கூட்டிப் போய்க் கொண்டிருந்தது திருவாளர் பஜ்ஜியாளர்.

அடுத்த பக்கம்