மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 2

றுநாள் காலையுமில்லா மதியமும் இல்லாத ஒரு 11 மணி அளவில் இவளும் பஜ்ஜியும் திருநெல்வேலி பூ மார்கெட்டிற்கு சென்றிருந்தனர்….. அடுத்த நாள் காலையில்தான்  புது வீட்டில் ஜெபம்….

பூவும் கலர் பொடியும் கொண்டு அலங்கார ரங்கோலிகள் போடுவதில் அன்றில் எக்‌ஸ்பெர்ட்….. காலேஜிலும் சரி வீட்டிலும் சரி எந்த விஷேஷம் என்றாலும் அதில் கண்டிப்பாக இவள் கைவண்ணம் இருக்கும்….

புது வீட்டை  அப்படி அலங்கரிப்பதற்காக பூக்கள் வாங்க வந்திருந்தாள் அவள்…. கடையில் கிடைக்கும் பூ வகைகள் மட்டுமெல்லாம் இதற்கு போதுமானதாய் தெரியாது இவளுக்கு….. விதவிதமான காட்டுப் பூக்களும் கிடைத்தால் அமர்க்களமாய் இருக்கும் என விரும்புவாள்….

சென்னையில் அதுக்கெல்லாம் எங்க வழி இருக்கு? ஆனா திருநெல்வேலிலயாவது அத அனுபவிச்சிடனுமில்ல…..

அதற்காக பக்கத்தில் உள்ள எதாவது காட்டுப் பகுதிக்கோ வயலுக்கோ செல்ல வேண்டும் என சொல்லியே அழைத்து வந்திருந்தாள் அவளது ஆஸ்தான ட்ரைவரான பஜ்ஜியை….

ஒரு கேங்கா போனா பூ பறிக்கவும் வசதியா இருக்கும்…. ட்ரிப் ஜாலியாவும் இருக்கும் என இவள் தன் மத்த கசின்களை எல்லாம் கூப்பிட்டுப் பார்த்தாள்தான்….. ஆனால் இந்த நொச்சு பிடிச்ச வேலைக்கெல்லாம்  யார் வருவா…. என தலை தெறிக்க தப்பிச்சு ஓடிட்டாங்க அவங்கல்லாம்….

சோ எத்தன அடிச்சாலும் தாங்கிறியேடா என்ற வகை பாச லுக்கோடு….. “என்ன எங்கடா கூட்டிட்டு போகப் போற…?” என இவள் ஆசை ஆசையாய் கேட்டுக் கொண்டிருக்கும் போதுதான் அந்த சத்தம் காதில் விழுந்தது….

“ஆர் யூ ஷ்யூர்….. இதுவா அது?…. “

துள்ளி விழாத குறையாக திரும்பிப் பார்த்தாள் இவள்….. யெஸ் அது அவனேதான்….. அந்த வி சீ ….. அதான் வின்டோ சீட்காரன்…

‘இவனும் திருநெல்வேலிக்குத்தான் வந்தானா…? ‘  என எதோ ஒன்று சற்றாய் துள்ளியது இவளுள்…

இவர்கள் பூ வாங்கிய கடைக்கு  அடுத்த கடையில் நின்று எதையோ படு ஆராய்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்…..

“அது நல்ல ஸ்மல்லோட இருக்கும்….. இங்க இப்டித்தான் கிடைக்குமா…?” அவன் விசாரணையை தொடர…

“ஹலோ ஆதிக் சார்… நீங்களா…?” என இதுக்குள் இடையிட்டிருந்தது இவங்க வீட்டு பஜ்ஜி…

‘ஓ ஆதிக்கா இவனோட நேம்….கொஞ்சம் ஃபெமிலியரா கொஞ்சம் வித்யாசமா இருக்குது…’ அன்றிலின் மனது அவன் பெயரை ஆராய்வதோடு நிற்காமல்

“ஹாய் வாட்ட  ப்ளசன்ட் சர்ப்ரைஸ்..” …. என இவர்களை பார்த்து  மலர்ந்து புன்னகைத்த  ஆதிக்கின்   கண்ணையும் கவனிக்கிறது……  அதில் ஒரு மின்னல் வந்து போனதோ….

இவர்களை சந்திப்பது அவனுக்கு பிடித்திருக்கிறது என்ற ஒரு நினைவு இவள் அடி மனதில் அடம் செய்தபடி நழுவிச் சென்றது…

இதற்குள் “என்ன சார்… எங்க ஊர் பூக்கு ஸ்மல் இல்லன்னு சொல்லிட்டு இருக்கீங்க…. பக்கத்தில நிக்குதே ஒன்னு…… அது காதுல விழுந்தா கடிச்சு வச்சுட போகுது “ என இவளை கன்னா பின்னாவென அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தான் பஜ்ஜி….

‘டேய்ய்ய்ய்ய்’ மானசீகமாய் மனதில் மொத்த துவங்கினாள் இவள் பஜ்ஜியை

இது ஒன்னு பஜ்ஜிட்ட….. தன்னைப் போல் பிறரை நினைன்றத அவன் இவ விஷயத்தில தப்பாம தப்பு தப்பா பாலோ பண்ணுவான்….. அவனப் பத்தி அவன் எப்டி அடுத்தவங்கட்ட பேசுவானோ அப்டியே இவள பத்தியும் பேசி வைப்பான்…

இவ ஒரு பொண்ணுன்றது அவன் மண்டையில் என்னைக்காவது உறச்சுருக்கான்னா….இல்லவே இல்ல….

ஆனால் இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது…. இவ ஒரு பொண்ணுனு இவளே உணர்ந்து நெளியுற அளவுக்கான நட்பையும் சந்திப்பையும் கூட பஜ்ஜி ஏற்படுத்திக் கொண்டதில்லை…. ஆனா இன்னைக்கு எதோ சரி இல்லையே….

“இந்த ஸ்மல்க்காகவே வருஷம் ஒரு டைம்மாவது  சென்னையில இருந்து இங்க வருவா…”   இன்னும் இவள டேமஜ் பண்றத பஜ்ஜி நிறுத்றதா இல்ல….

என்ன சொல்லி டாபிக்கை டைவர்ட் செய்ய என இவள் திணறிய நொடி…

“அது ஒரு சின்ன கன்ஃப்யூஷன்…. மத்தபடி  நானும் இந்த பூக்காக மட்டுமேதான் திருநெல்வேலி வந்தேன்”  என பதில் கொடுத்தான் ஆதிக்…  அவனை மீறி இவள் மீது  வந்து போனது அவன் பார்வை ஒரு நொடி….

இவள் என்ன நினைக்கவாம் இதற்கு?

அடுத்த பக்கம்