மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 4 (5)

“ஏய்….அந்த டமார செட் சொர்ணம் அத்த மாதிரி தெரியுது…..நீ முதல்ல உள்ள போ….”  என அவன் இவளை விரட்டிக் கொண்டிருந்தான்.

அந்த சொர்ண அத்தைய பார்த்தாலே இவளுக்கே உதறும்…. எல்லாதையும் காது மூக்கு கண்ணெல்லாம் வச்சு எல்லார் வீட்லயும் போய் ந்யூஸ் வாசிக்கும் பிபிசி அது…..

ஆதிக்கோடு அது கண்ணுல விழவா….???!!!

இவள் கால்கள் அதாகவே வீட்டின் உள்பக்கம் பார்த்து ஒரு அடி எடுத்து வைத்துவிட்டது இதற்குள்….

‘ஐயோ ஆதிக் இவட்ட பேசனும்னு சொல்லிட்டு இருந்தானே என அந்த நொடியே உணர்ந்து அவன் முகத்தை திரும்பிப்  பார்த்தாள்…. அவனவிட பஜ்ஜி சொல்றதான் நான் கேட்பேன்னு அவனுக்கு தோணுமோ…. என்ற பரிதவிப்பு அவள் முகத்தில் பட்டவர்த்தனமாய் இருந்தது..

ஆதிக் முகத்திலோ இப்போது ஒரு ஆறுதலூட்டும் புன்னகைதான் வந்திருந்தது…

“ நாளைக்குத்தான் நான் சென்னை கிளம்புறேன்….. ஈவ்னிங் தூத்துகுடில ஃப்ளைட்…..வீட்ல பெர்மிட் செய்வாங்கன்னா……முடிஞ்சா ரெண்டு பேரும் வாங்க ட்ராப் பண்ண… டூ இயர்ஸ் கழிச்சுதான் வெட்டிங்க்னா அடுத்து எப்ப பார்ப்போம்னு சொல்ல முடியாது இல்லையா…. ” என இவர்கள் இருவருக்குமாய் அழைப்பு வைத்து விடைபெற்றான் அவன்..… அதாவது தனியா பேச அதுதான் இப்போதைக்கு லாஸ்ட் சான்ஸ்னு சொல்றான்…..

இருதலை கொள்ளி எறும்பாய் தன்னவனை வழி அனுப்பினாள் இவள்…… அன்றிலுக்கு ஆதிக் அப்படி எதை இவளிடம் பேச நினைக்கின்றான் என கேட்டாக வேண்டும்….அதையும்விட இனி எப்ப பார்ப்போமோ என அவன் சொன்னது உயிர் வரை இவளை பாலையாய் மாற்றி பரிதியாய் எரியச் செய்தது… ஆக அவளுக்கு ஏர்போர்ட் போகவேண்டும் என கடும் உந்துதல்.

ஆனால் இதற்குள்ளாக அவளுக்கு ஒன்று தெளிவாகவே புரிந்திருந்தது….பஜ்ஜி  அப்படியெல்லாம் இவளை ஏர்போர்ட்டிற்கு கூட்டி சென்றுவிடமாட்டான்.

வள் நினைத்ததையே உறுதிப்படுத்தினான் அவளது பாசமலர் பஜ்ஜி…. ஆதிக் கிளம்பவும்

“என்ன ஜிங்ஜர் ஈட்டிங் குற்றால பார்டி ரேஞ்ச்ல இருங்கு மூஞ்சி….? என்னடா இவன் அவர உடனே மேரேஜ் பத்தி வீட்ல பேசாதன்னு சொல்லிட்டானேன்னுதான….” என பாய்ண்டிற்கு வந்தான்.

“இங்கபாரு மேரேஜ்னு வர்றப்ப நாம எல்லா பக்கத்தையும் யோசிக்கனும் அனி…. நெகடிவா சொல்றேன்னு பார்க்காத….. நம்ம ரத்தி டெலிவரி நியாபகம் இருக்கா….எல்லாம் நார்மல்னுதான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருந்தாங்க…..” அவன் விம் போட்டு விளக்கத் தொடங்க இவளுக்கு எல்லாம் தெளிவாகவே புரிந்தது….

ரத்தி பஜ்ஜியின் அக்கா…. லேபர் ரூம்க்கு அக்கா போன பிறகு, ஒரு ஸ்டேஜ்ல பாப்பா பிழைக்காது அப்பதான் அக்காவ காப்பாத்த முடியும்னுலாம் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க…. அப்பவே வீட்ல பாதி பேர் அழ ஆரம்பிச்சாச்சுன்னா…..

பாப்பா பிறந்த பிறகு “எல்லாம் நார்மல்தான்… பேபி வெளிய வர டைம் அதிகம் ஆனதில் ரைட் ஹேண்ட் கொஞ்சம்   ஸ்ட்ரெஸ் ஆகிட்டு…. அதனால கைல மூவ்மென்ட் வர டைம் ஆகும்” என சொல்ல… கிட்தட்ட எல்லோரும் அழுதாச்சு…. பாப்பாக்கு சில வாரங்கள் ஆனது வலது கையில் மூவ்மென்ட் வர… அது வரைக்கும் வீட்டில் ஜெபத்தை தவிர எதுவும் நடந்ததாக நியாபகம் இல்லை….

“அப்டி சிச்சுவேஷன்ல ஆதிக் மச்சான் பேரண்ட்ஸ் இருக்கிறப்ப  இந்த கல்யாண விஷயம் பேசினா எதோ ஒரு வகையில் இந்த கல்யாணம் பத்தி…. ஏன் உன்ன பத்தி கூட….கசப்பா பதிஞ்சுடாதா அனி….? இதுன்னா பாப்பா ஜோரா கைல வரவும் எல்லோரும் செம ஹேப்பியா இருக்கப்ப சொன்னா ரொம்பவே பாசிடிவா படும்…..

அதான் நம்ம வீட்ல கூட நாம இதை இப்ப பேச வேண்டாம்….பெரியத்தை இருக்க ஆர்வத்துல இப்பவே ஆதிக் மச்சான் வீட்டுக்கு கூப்டு சொல்லிடுவாங்க…….அதனால பேபி பிறந்துட்டுன்னு மச்சான் கூப்ட்டு சொல்லவும் நாம வீட்ல கல்யாண விஷயத்தை பேசுவோம்…… என தன் பக்க காரணத்தை சொன்னான் பஜ்ஜி…

“அதுக்கு முன்ன இப்ப உன்ன ஏர்போர்ட்டுக்கு கூட்டிட்டு போறதுன்னா….எதுக்கு போறோம்…யார பார்க்க போறோம்னு எல்லாம் வீட்ல சொல்லாம போகவேண்டி இருக்கும்….. அது உனக்கு சரியா படுதா என்ன? ”  என இவளையும் கேட்டான்.

“எது எப்டியோ…..அவங்க யாரோவா இருக்கப்பல்லாம் என்னை கூட கூப்டுட்டு சுத்தின…..இப்ப கண்ல கூட காட்ட மாட்டேன்ற….சரியான வில்ல லூசு…” என பதில் கொடுத்துவிட்டு போனாள் அன்றில். பஜ்ஜி ப்ளானை அவள் ஆமோதிக்கிறாள் என அதற்கு அர்த்தம்.

இவர்கள் இப்படி ஓர் திட்டத்தில் இருக்க…….நேரம் வேறு ஒரு கால்குலேஷனைப் போட்டது….

தொடரும்…

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 5