மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 4 (4)

வேலை விஷயமா டைம் வேணும்னு அவ்ளவு உறுதியாய் இருந்தவன் இவளுக்காக தன்னை மாற்றிக் கொள்கிறான் என்றால்….இவளும் அவனது சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்தானே என்ற அக்கறை ஒரு புறம்….

அதோடு பெரியப்பா ஆதிக் தன் வீட்டு பிஸினஸில் கூட குறிப்பிட்டுக் கொள்ளும் அளவில் இல்லை என சொன்னாரே… அதைப் போல அவரோ இல்லை மற்றவரோ ஆதிக் காதுபட ஒன்று சொல்லிவிட்டால் தன்னவனுக்கு எவ்வளவு வலிக்கும் என்ற நினைவு மறுபுறம்…

அதுதான் அப்போதைய அவள் உணர்வுகளை  ஆக்ரமித்ததால் அதன் திசையிலேயே சென்றது இவள் வார்த்தைகளும் சிந்தனையும்…..

இவளது வார்த்தைகள் காதில் விழவும் பளீரென மலர்ந்தான் ஆதிக்….

ஆனால் அடுத்த நொடி அது அவன் முகத்திலிருந்து காணாமல் போனது….

“உங்க வீட்ல இப்ப அலையன்ஸ் பார்க்க ஆரம்பிச்ச பிறகு…….நான் டைம் ஆகும்னு சொன்னா…..வேற இடம் பார்த்துக்குறோம்னு சொல்ல மாட்டாங்களா?” என கவலைப்பட்டான் அவன்…

“அதெல்லாம் பேசுற விதமா பேசிக்கலாம் மச்சான்…. எங்க சைட் ஒன்னும் இஷ்யூ ஆகாது…. இருந்தாலும் கேட்டுப் பார்த்துட்டு  சீக்கிரமே உங்கட்ட கன்ஃபார்ம் செய்துடுறேன்….. உங்க வீட்ல எப்டி யோசிப்பாங்கன்னு மட்டும் கவனிச்சு செய்ங்க” இது பஜ்ஜியின் பதில்…..

அதற்கு அன்றில் எதோ சொல்ல வர…..அதற்கும் முன்பாக பஜ்ஜியே  பேசினான்…

“சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மச்சான்…..இன்னைக்கே உங்க வீட்லலாம் இந்த ப்ரொபோசல் பத்தி பேசாதீங்க…..உங்க அக்காக்கு டெலிவரி வரைக்கும் எப்டியும் கொஞ்சம் இறுகித்தான் இருக்கும் உங்க அம்மா அப்பா மனநிலை…..குழந்தை பிறக்கவும் சொல்லுங்க….. எல்லா வகையிலும் சந்தோஷமா இருக்கும்…. எங்க வீட்ல இருந்தும் அப்பதான் பேச சொல்றதா இருக்கேன்….”

இது பஜ்ஜியின் சுபாவம்….ஒருத்தரை பிடித்துவிட்டால் அவங்களுக்கு எது நல்லது என இவனுக்கு படுகிறதோ அதை அப்படியே முகத்துக்கு நேராக கூறிவிடுவான்…. அதிகமாய் உரிமை எடுப்பது போல் இருக்கும் கேட்டிருப்பவருக்கு…

அன்றிலைப் பொறுத்தவரை பஜ்ஜியின் இந்த குணம் ரொம்பவும் அவளுக்கு உதவிகரமான ஒன்று….இதுவரை அவளுக்கு அது தவறாக தோன்றியதே இல்லை…. இப்போதும் அவன் சொல்லும் விஷயம் தப்பாக படவில்லைதான். ஆனால் ஆதிக் இடத்திலிருந்து யோசிக்கும் போது அவன் எப்படி எடுப்பான் என்று இப்போது தவிப்பாக இருக்கிறது….

ஆதிக் வருத்தப்பட்டான் என்றோ எரிச்சல்பட்டான் என்றோ எதுவும் இல்லை….

“ஓகே பிஜு.…அதெல்லாம் பார்த்து செய்துக்கலாம்” என சாதாரணமாகவே பதில் சொன்னான். ஆனால் அந்த கணம் இவள் மீது வந்து விழுந்து திரும்பியது அவன் பார்வை…… அதில் இவளிடம் மட்டுமாக பேச வேண்டிய விஷயம் இருப்பதை சுட்டிக்காட்டும் தவிப்பு இருந்தது….

இதில் உரையாடலின் தொடர்ச்சியாக…..அடுத்த நொடியே….

“ஓகே மச்சான்…. இன்னும் உங்க வீட்ல இருந்து இங்க பேசி முடிக்கிறதுக்கு முன்ன….இங்க நீங்க வந்திருக்கதைப் பார்த்தா……எங்க அத்தைங்க கூட சரின்னு எடுத்துப்பாங்க….. ஆனா  ஃபங்க்ஷனுக்கு வேற எதுவும் சொந்தகாரங்க வந்து….அவங்க இப்ப இங்க வந்தாங்கன்னா……நல்லா இருக்காது…. “ என பஜ்ஜி ஆதிக்கை கிளம்பவும் தூண்டினான்.

அன்றில் ரொம்பவுமே தவித்துவிட்டாள் இதில்…. பஜ்ஜி சொல்வது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும்…..ஆதிக் வீட்டுக்கு வந்து சென்றதை ரகசியமாக வைக்க அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை….. அவன் இவளது அம்மா பெரியம்மாவையெல்லாம் பார்த்துட்டு போறதே சரி எனப் பட்டது அவளுக்கு…. அதற்கும் மேலாக வீட்டிற்கு வந்திருப்பவனை எப்படி நாமே கிளம்பு என  சொல்லலாம்….?!!!!  ஆதிக்கிற்கு எப்படி இருக்கும்….?!!!!!! அதோடு இவளிடம் இப்பொழுதே சொல்லி ஆக வேண்டிய விஷயங்கள் அவனுக்கு இருக்கலாம்…..

ஆனால் ஆதிக் முன்னிலையில் பஜ்ஜியை கண்டிப்பது போல் எதையும் பேசவும் அவளுக்கு மனம் வரவில்லை…. தனிமையில் பஜ்ஜியிடம் இதை  சொல்லி வைக்க வேண்டும்….. ஆதிக்கிடம் தனியாய் இதற்கு இவள் மன்னிப்பு கேட்க வேண்டும்….. இவள் நினைத்து முடிக்கும் முன்..…

அதற்குள்  பஜ்ஜியின் கூற்றை முகம் மாறாமல் ஏற்று அப்படியே கிளம்பியும்விட்டான் ஆதிக்…..ஆனால் மீண்டுமாய் அவனின் அந்தப் பார்வை….உன்னிடம் எதையோ சொல்ல வேண்டும் என தவித்தது அது…

“உன்ட்ட மட்டுமா சில விஷயம் பேசனும் அல்வாபொண்ணு” என அவனோடு வாசல் புறம் பார்த்து இவள் நடக்க தொடங்கிய ஒரு நொடியில் இவள் காதில் விழுமாறு முனுமுனுக்கவும் செய்தான்….

‘என்ன சொல்வாள் இவள்? பஜ்ஜி கிடக்கான்….வாங்க நாம பேசலாம்….என சொல்லவெல்லாம் இவளுக்கு வருமா? ஆனால் ‘டேய் பஜ்ஜி ஒரு ஃபைவ் மினிட்ஸ்’ என கேட்க வரும்தான்… அதற்காக அவனைப் பார்த்தால்….

அடுத்த பக்கம்