மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 4 (3)

“ரெண்டு வீட்ல இருந்தும் சின்னதா ஒரு க்ரீன் சிக்னல் வரட்டும் பிஜு…..அடுத்து கவனிச்சுடலாம்…” அதற்குள்  இப்படி சொல்லி இருந்த ஆதிக்..….இவள் அடியில் இவள் என்ன நினைத்துவிட்டாள் என புரிந்தவனாய்

“நான் ரிங்க் கொடுக்றத மட்டும்தான் சொன்னேன்….அதுக்கு அப்றம் உள்ளத இல்ல” என சின்னதாய் இவளிடம் முனங்கினான்….

தன் நெற்றியில் அடித்துக் கொண்ட அன்றில் அடுத்து கையை முகத்தைவிட்டு எடுக்க அத்தனை கஷ்டப்பட்டாள்… முகம் வேறு அவளை மீறி சிவந்து படுத்தியது…

இவளிடம் முதுகு கொடுத்து அடி வாங்கிக் கொண்டிருந்த பஜ்ஜி எனப்படும் பிஜுவோ அடுத்து அவளை திரும்பிப் பார்க்கும் போது…எதோ நடந்திருக்கிறது என புரிந்து கொண்டவனாய்…. ஒன்றும் சொல்லாமல்…. அடுத்த காட்சிக்கு போனான்.

“சரி நீங்கதான்  கிஃப்ட் செய்ய கூடாது….. ஆனா நான் உங்க ரெண்டு பேருக்கும் செய்யலாம்…. இந்த மொமென்டோட மெமரிக்காக இதாவது இருக்கட்டும்.” என்றபடி பஜ்ஜி கொடுத்த பாக்சை அன்றில் ஈசியாக வாங்கிக் கொண்டாள்…

ஆதிக்கைப் பார்த்து ஒரு ப்ளீஸ் வகை முகபாவம் வேறு அவளிடம்….

அவனும் அலட்டல் எதுவும் இல்லாமல் இயல்பாய் வாங்கிக் கொள்ள…. திறந்து பார்த்தால்…..அன்றிலினுடையதில் ஆண்கள் அணியும் ப்ரேஸ் லெட்…. ஆதிக்கிடம் இவளுக்கான ப்ரேஸ்லெட்…

“ரிங் எக்சேஞ்ச் எத்தனை டைம் செய்வீங்களோ….சோ இது என் சார்பா…” என்ற பஜ்ஜியின் ரிக்வெஸ்ட்டில்…..

சற்றாய் வெட்கம் அவளை அவஸ்தை படுத்தினாலும்…அதை வெளிக் காட்டாமல் அன்றில் ஆதிக்கிற்கு அதை அணிவித்து..…அவன் அணிவித்ததையும் கூட ஏற்றுக் கொண்டாள்…..பஜ்ஜி அருகிலிருக்கும் போது இது எதுவும் தவறாகவும் தெரியவில்லை அவளுக்கு..…

“எப்டி பிஜு இவ்ளவு அரேஞ்ச்மென்டும்…? உங்கட்டன்னு இல்ல நான் யார்ட்டயுமே இதப் பத்தி சொல்லலையே” ஆதிக் ஆச்சர்யபட….

“இதெல்லாம் பெரிய விஷயமா மச்சான்….. அந்த கிணறு இன்சிடென்ட்க்கு பிறகே உங்க ரெண்டு பேருக்குள்ளயும் என்ன போகுதுன்னு கொஞ்சம் புரிஞ்சுது….

“ஆனா பெரியத்தை சொன்ன ப்ரபோசல் நிஜமா நீங்கன்னு தெரியாது…..இந்த அனி அந்த ஆட்டம் ஆடி ஹாஸ்பிட்டல் போகவும்…..விஷயத்தை இதுக்கு மேல இழுக்க கூடாதுன்னுதான் அவ அட்மிட் ஆனதை ரீசனோட உங்கள கூப்டு சொன்னேன்….

.நீங்க அப்ப பேசுன உங்க குரல்லயே தெரிஞ்சிட்டு…. எப்ப வேணும்னாலும் உங்கள இங்க எதிர்பார்க்கலாம்னு…. அதுல இன்னைக்கு  ஃப்யூ அவர்ஸ் முன்ன உங்களுக்கு கால் பண்ணப்ப உங்க நம்பர் வேற ஸ்விட்ச் ஆஃப்….அதுவும் இத்தனை மணிநேரம் ஆஃப்னதும்…. ஃப்ளைட்ல இருப்பீங்கன்னு ஒரு தாட்..…. சரின்னு ஒரு மெசேஜ் அனுப்பி வச்சேன் உங்க நம்பர்க்கு….அது எப்ப டெலிவர் ஆகுதோ…அப்ப நீங்க லேண்ட் ஆகிட்டீங்கன்னு தெரியுமே…….

இதுல கன்னிமாடத்துல உங்க கார் குழலி மட்டும்….. அதுவும்  யாரும் இல்லாம நந்தவன வாவிகரையில் தனியா உட்கார்ந்துட்டு இருக்கப்ப….. அபராஜிதனா அங்கதான் வருவீங்கன்னு அப்போ இருந்து நான் வெயிட்டிங்….” பஜ்ஜியின் விளக்கத்தில் ஆயிரம் கோடி ஆனந்தமும்….. வயதில் ஆதிக்கைவிட இளையவன் அல்லவா அவன்…. அதோடு ஆதிக் மீது ஒரு அபிமானம் மற்றும் இப்போது அனியின் வருங்காலம் என்ற உச்ச பட்ச மரியாதை வேறு….. ஆக தான் மதிக்கும் நபரிடமிருந்து தன் செயலுக்கான சிறு அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் சின்ன அளவு சிறுகுழந்தைதனமும் சேர்ந்தே இருந்தது…..

பஜ்ஜி சொன்ன வகையில் அன்றிலுக்கும் தன் மாமன் மகன் மீது எக்கசக்க பெருமிதமே…. எவ்ளவு ஷார்ப்பா யோசிச்சு செய்துருக்கான் என….. இவளைப் போலவே ஆதிக்கும் உணர்வான் என நினைத்து இவள் தன்னவன் முகத்தைப் பார்க்க….ஏனோ அவன் அதை ரசிக்கவில்லை என இவளுக்கு தோன்றியது….

“ஓ…குட்” என ஒரு  பதிலை மட்டும் கொடுத்தான் ஆதிக்.

ஏன்??? அதற்கான காரணத்தை கசக்க கசக்க ரொம்பவே மெல்ல தெரிந்து கொண்டனர் பஜ்ஜியும் அவளும்…

ஆனால் அன்று நொடிக்கும் குறைவான நேரத்தில் ஆதிக் பேச்சின் மொத்த திசையையும் மாற்ற…… இவள் அதில் எளிதாய் ஏமாந்து போனாள்…

“ ஆக்சுவலி  அக்கா ஃபங்க்ஷனுக்கு போனதும் அம்மா அப்பாட்ட இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம்னு சொல்லி உடனே அனி பேரண்ட்ஸ்ட்ட பேசி முடிக்க சொல்லனும்னுதான் நினச்சிருந்தேன்……அது நடந்துருந்துச்சுன்னா அனி இவ்ளவு கஷ்டபட வேண்டி இருந்திருந்திருக்காது……. ஆனா அக்காக்கு சின்ன காம்ப்ளிகேஷன்…. உடனே ஹாஸ்பிட்டல்ல அட்மிட் செய்துட்டாங்க…..ப்ராப்ளம்னு எதுவும் இல்லைனாலும்….. வீட்ல எல்லோரும் இப்பதான் ரிலாக்‌ஸ் ஆகி இருக்காங்க…..  சோ இதுவரை  என்னால வீட்ல மேரேஜ் பத்தி பேச முடியல…

இதுல அனி வேற  மேரேஜ் வேண்டாம்னு சொல்லி அழுது….உடம்பு முடியாம போய்ட்டுன்னு நீங்க சொல்லவும்….எனக்கு அவட்ட நேருக்கு நேரா பேசிட்டு….  அதுக்கு பிறகு ரெண்டு வீட்லயும் பேசுறதுதான் சரியா இருக்கும்னு பட்டுது….

இப்பதான் எல்லாம் தெளிவாகிட்டே…. இங்க இருந்து கிளம்பவும் அப்பாட்டதான்  பேசுவேன்…..இன்னைக்கு நைட்குள்ள அப்பா அனி அம்மா அப்பட்டா  மேரேஜ் பத்தி  பேசி முடிச்சுடுவாங்க….” என நடந்த மற்றும் நடக்க இருக்கின்ற காரியங்களை குறித்து அடுத்து  ஆதிக் பகிர்ந்த போது…. பஜ்ஜி சொன்னது ஆதிக்கிற்கு ஏன் பிடிக்கலைன்ற கேள்வி அன்றிலுக்கு மறந்து போயிருந்தது….

“கண்டிப்பா இப்பவே மேரேஜ்  இருக்கனும்னுலாம் இல்ல ஆதிக்….. இரண்டு மூனு வருஷம் கழிச்சுதான் உங்களுக்கு வசதியா இருக்கும்னாலும்  எனக்கு சம்மதம்தான்” என பேச துவங்கி இருந்தாள் அவள்.

அடுத்த பக்கம்