மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 4 (2)

“ஆனா அடுத்து உன்ன பூக்கடையில் பார்க்கவுமே தெரிஞ்சிட்டு….. நான் என் ஃப்யூசர் வைஃப்ட்ட பேசிட்டு இருக்கேன்னு……  உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு அடுத்து லைஃப்ல வாழவும்தான் எனக்கு என்ன இருக்கும்ன்னு ஒரு  கேள்வி எனக்குள்ள….. என்னை எடுத்துதான் உன்னை செய்திருக்காங்கன்றது போல நீ…. ”

சொல்லிக் கொண்டிருந்த அவனும் கேட்டிருந்த இவளும் ஒரு வித உச்ச உணர்வு நெகிழ்ச்சியில் நிறைந்திருக்க….

அடுத்து அவனும் எதுவும் சொல்லவில்லை….இவளுக்கும் எதுவும் தேவையும் இருக்கவில்லை…. சில நொடி மௌன உற்சவம்…

தித்தித்த திக்குமுக்காடல்தான் என்றாலும் அளவிற்கு மேல் அதை தாங்க முடியாமல்….அதை தவிர்க்க எண்ணியவளாய்

“ஓஹோ….சார்க்கு பிடிச்சுட்டாலே ஃப்யூசர் வைஃபா….. எங்களுக்கெல்லாம் பிடிக்க வேண்டாமா?” கிண்டலாக பேச்சை திருப்பினாள் அன்றில்…

“என்னப் போலவே நீன்னு சொன்னனே…. எனக்கு நம்ம மேரேஜ் பிடிச்சுறுக்கது போல உனக்கும் பிடிச்சிருக்குதுன்றதும் அதுல ஒரு பார்ட்தான்….” அவன் இலகுவாகவே சொன்னாலும் அது நிஜ விளக்கம்.…

இவள் மனதை அவன் புரிந்து வைத்திருந்த வகை பிடித்தாலும்….“ஆக இப்ப கூட என்ட்ட கேட்கிறதா இல்லையா?….” விளையாட்டாய் இவள் சிலுப்பினாள்..…

உதடு பிதுக்கி இல்லை என்பது போல் இரண்டு பக்கமுமாய் தலையாட்டினான் அவன்…. சீண்டினான்.

“தானே முடிவெடுத்துக்கிற தான்தோன்றி ஆஃபீசர்லாம் எனக்கு தேவையில்ல… ”  கோபம் போல் மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அவனுக்கு முதுகு காண்பித்து இவள் இப்போது திரும்பிக் கொள்ள….

“பொதுவா என் அம்மா கோபமா இருந்தா நான் பின்னால இருந்து அவங்கள ஹக் பண்ணி….” அவன் சொல்லிக் கொண்டு போக…. அதிர்ந்து போய் அவசரமாய் துள்ளி திரும்பி நின்றாள் அவனைப் பார்த்து….  பிடிக்க நீட்டிய கையை கூட நிறுத்திக் கொண்டவன்தான்….இருந்தாலும்….

வாய்விட்டு சிரித்தான் அவன்…. பின் மிக மிக மென்மையாய்

“ஏய் அல்வாபொண்ணு இப்ப சொல்லு….. நாம மேரேஜ் செய்துக்க உனக்கு சம்மதமா? வில் யூ மேரி மீ….?” என காதல் மட்டும் குடியிருக்கும் குரலில் எந்த விளையாட்டுத்தனமும் இன்றி கேட்டான்.

எதாவது விளையாட்டாய் சொல்லலாமா என ஒரு கணம் தோன்றினாலும் அவன் கேள்வியின் ஆழம் உணர்ந்து மனம் அளவு முகமும் முழுதும் மலர்ந்திருக்க…..சின்ன சிணுங்கலும் சலுகையும் அதில் அங்கங்கு கலந்திருக்க…..சம்மதமாக தலை அசைத்தாள்…

இப்பொழுது அவன் தன் பாக்கெட்டில் இருந்து எதையோ எடுக்க….தர்மசங்கடமாய் பின்னிட்டாள் அன்றில்….

“சாரி…வெரி வெரி சாரி ஆதிக்…. இப்டி ஆஃப்டர் சர்ஜரி என்ன நீங்க பார்க்க வந்ததையோ….இல்ல இதுக்கு முன்ன நாம மீட் பண்ண ரெண்டு இன்சிடென்டையோ எங்க வீட்ல புரிஞ்சுப்பாங்க….. ஆனா ஜ்வெல் அது போல காஸ்ட்லியா எதையாவது இந்த ஸ்டேஜ்ல உங்கட்ட இருந்து வாங்கினா கண்டிப்பா ரொம்பவே வருத்தப்படுவாங்க….. ” அவன் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு இவளுக்கு இருந்தாலும் உறுதியாகவே மறுத்தாள் அவள்.

புரிந்து கொண்ட புன்னகை அவன் முகத்திலும்….

“இப்ப  விடுறேன்….. ஆனா வீட்ல பேசி முடிக்கவும் நான் சொல்ற இடத்துக்கு வரணும்…..நான் என்ன தந்தாலும் வாங்கிக்கனும்…”  அதே புன்னகையோடு  அதிகாரம் போல் கட்டளையிட்டான்….

“ஆமாமா…..நீங்க சொல்ற இடத்துக்கு வந்து நீங்க தர்றதெல்லாம் வாங்கிட்டுவான்னு என் அப்பா அனுப்பிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாங்க…..அதுக்கெல்லாம் கனகராஜ் பாண்டியன சம்மதிக்க வைக்கனும்னா அதுக்கு முன்ன நீங்க என்னை மேரேஜ்  செய்துறுக்கனும்….” இவள் பதிலடி கொடுத்த நேரத்தில்

தலை மீது வந்து கொட்டுகிறது ஆயிரமாயிரம் ரோஜா இதழ்கள்….

அதெப்படி இவள் வீட்டில் வந்து இவளுக்கே தெரியாமல் எப்படி செய்தான் என பேராச்சர்யமாய் இவள் நிமிர்ந்து பார்க்க…..மொட்டை மாடியிலிருந்து பூக்களை இவர்கள் இருவர் மீதுமாக கொட்டிக் கொண்டிருந்தது பஜ்ஜி.

‘ஹான் இதெல்லாம் இந்த பஜ்ஜியும் சேர்ந்து செய்த சதியா….? டேய் பஜ்ஜி கட்சி மாறிட்டியா நீ…?’ என பஜ்ஜிக்கும் சேர்த்து எதிரில் நின்ற தன்னவனையே இவள் முறைக்க…. ஆதிக்கோ மறுப்பாய் தலையாட்ட அதற்குள் மாடியிலிருந்து இறங்கி வந்திருந்தான் பஜ்ஜி…

“உங்க ரேஞ்சுக்கு ஒரு ஈரோப்யன் ஸ்டைல் ப்ரொபோசல் எதிர்பார்த்தேன்…….இவ்ளவு சிம்ப்ளா முடிச்சுட்டீங்களே மச்சான்” என்றபடி பஜ்ஜி இப்போது ஆதிக்கிடம் கைகுலுக்கினான்….அதை கண்டு கொள்ள  கூட செய்யாமல்

“டேய்ய்ய்ய்” என்றபடி அவனுக்கு சில அடிகளை வைத்தாள் அன்றில்…. பின்ன ஈரோப்யன் ஸ்டைல் வேணுமாமே….

அடுத்த பக்கம்