மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 4

டவுளே!!! என நெற்றியில் கை வைத்துவிட்டாள் அன்றில்..…”இவனப் பத்தி எதுவுமே நினைக்க மாட்டேன்னு முடிச்சாச்சு…..இப்பவும்  இப்டி வந்தா என்னத்த சொல்ல ?” முனங்கலாய் புலம்பியவள் மீண்டுமாய் குனிந்து புத்தகத்தை படிக்க முயல….

“ என்ன சொல்றதா…? ம்… ஒரு ஐ லவ் யூ சொல்லலாம் இல்லைனா குறஞ்சபட்சம் ஒரு ஐ வான்ட் டூ மேரி யூவாது சொல்லலாம்…..” அடுத்து  ஆதிக்கிடமிருந்து இப்படி ஒரு பதில் வரவும்தான் தூக்கி வாரிப் போட எழுந்தாள் அவள்… முந்திய நொடி வரை ஆதிக்கின் உருவத்தை அக காட்சி என நினைத்திருந்தாளே….

இவள் திக்கி திகைக்க  விழிக்க….  அவள் பார்வை படிந்துகிடந்த அவன் முகமோ மொத்த குறும்பை குத்தகைக்கு எடுத்திருந்தது…..மென் சிரிப்போடு சற்றாய் கடிபட்டிருந்த அவன் கீழ் உதட்டில் காதலோடு ஒரு உரிமையும் தலைகாட்டி இருந்தது….

“ரெண்டு மூனு மாசம்மெல்லாம் வெயிட் பண்ண முடியாது…..இப்பவே கல்யாணம் செய்துப்போம்னு கூட சொல்லலாம்…” இன்னுமாய் அவன் தொடர

வந்திருப்பது அவன்தான் என்ற புரிதலுக்கே ஸ்தம்பித்திருந்தவள் சிந்தனைக்குள் சிறுக சிறுக அவன் வார்த்தையின் பொருள் சென்று விழுகிறது……பனிச் சிற்பமாய் படிவமெடுக்கிறது அவள் பெண்மை…. உருவற்ற நீர்ம நெருப்பருவி ஒன்றை சுமந்தலைகிறது அவள் தேகம்…. காற்றாய் கடுவெளியாய் இவள்….

இருந்த காதலும்  இத்தனை நாள் தவிப்புமாக சேர்ந்து ஒரு இயலாமையும் சில சுயபரிதாபங்களும் இப்போது இவளுள் எட்டிப் பார்க்க…..அதற்கு அத்தனைவகையிலும் காரணமான அவன் மீது கோபமும் கூடவே வருகின்றது…..அவை அனைத்தையும் காட்டிக் கொடுக்க அவள் கண்ணிலிருந்த கண்ணீரே முயற்சிக்கிறது…

சற்றாய் முகம் கசங்கி அவள் அழத் தொடங்கியதும்….

“ஹேய்  அனு…”என்றபடி இவளை நோக்கி தவிப்பாய் கை நீட்டியவன்…. சுற்று முற்றும் பார்த்தபடி தன் கையை கட்டுப் படுத்தினான்…

“சாரிமா… வெரி சாரி…..எல்லா தப்பும் என்னோடதுதான்”  என சம்பந்தமே இல்லாமல் கேட்டாலும் உணர்ந்தே மன்னிப்பும் கேட்டான்.

அதுவரைக்கும் எப்படியோ……ஆனால் அவன் சாரி என்றதும் அவன் என்ன செஞ்சானாம் சாரி கேட்க ? என அவனுக்கு வக்காலத்து வாங்குகிறதே இவள் மனது….

அவள் முகத்தில் அக்கேள்வியை படித்தான் போலும்…

“முதல் அண்ட் மோஸ்ட் இம்பார்டன்ட் தப்பு…. எங்க வீட்ல நம்ம வெட்டிங் ப்ரொபோசல் பத்தி பேச்சு ஆரம்பிச்சப்ப நான் வேண்டாம்னு சொன்னது….” சாரி என எழுதப்பட்ட மன்னிப்பு யாசிக்கும் முகபாவத்தோடு இப்படி ஒரு விஷயத்தை அவன் சொல்ல….

தலை வால் புரியாமல் விழித்தாள் பெண்……  நம்ம வெட்டிங்கா? வீட்ல ப்ரபோசலா? வேண்டாம்னு சொன்னியா? இப்டி எல்லாமே அவளுக்கு அடித்து பிறட்டும் கேள்வியாயிற்றே….

“ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத அனி….  வேலை வகையில ஒரு டூ இயர்ஸாவது போனாதான் மேரேஜ்க்கு சரியா இருக்கும்னு நினச்சேன்….சோ வீட்ல பேச்சு ஆரம்பிச்சப்ப வேண்டாம்னு சொல்லிட்டேன்….. ஆனா அடுத்துதான் உன்ன ப்ளைட்ல வச்சு பார்த்தேன்……ரொம்பவும் பிடிச்சுது..” அவன் இவளையே பார்த்தபடி விளக்க

வண்ண வண்ணமாய் வசந்தங்களாய் வந்து பிறக்கின்றன பெயரற்ற பல உணர்வுகள் என்றாலும்…. ஏன் என்ற கேள்வியை எய்தன  அவள் புருவங்கள்..…

அதன் இலக்கான ஆதிக்கோ “ ஒருத்தங்கள பிடிக்காததுக்கு ஆயிரம் ரீசன் சொல்ல முடியும்…..பிடிக்கிறதுக்கு என்ன ரீசன் சொல்ல….” என சற்றாய் ஒரு புரியாத நிலைக்குப் போனாலும்…

“எந்த ரீசனும் இல்லாம எல்லா வகையிலும் உன்ன பிடிச்சுது….ஒரு குட்டி பூந்தோட்டத்தை தூக்கி…..இந்தாடா இத பத்ரமா பார்த்துக்கோன்னு கடவுளே கைல கொடுக்ற மாதிரி ஒரு ஃபீல்…” அனுபவித்து சொன்னான் அவ்வார்த்தைகளை….

கண்டிடாத காதல் காட்டுக்குள் கால்தடமின்றி மிதந்தாலும்…..’போடா சும்மா சொல்ற……நீ என்ன ஃப்ளைட்ல வச்சு கண்டுக்கவே இல்ல…..’சிணுங்கவும் செய்தது  இவள் மனது…. இவ பார்க்கப்பல்லாம் அவன் சின்சியரா மூவில பார்த்துட்டு இருந்தான்…. சொல்லாம கொள்ளாம இறங்கியும் போயாச்சு

“அப்பவுமே இந்த மேரேஜ் வேண்டாம்னு தான் நினச்சேன்…” அவன் சொல்ல….

புரியாமல் பார்த்தாள் இவள்…

“வேலை வகைல இது மேரேஜ்ன்றதுக்கு  சரியான டைம் இல்லைன்றப்ப….. தெரியாத பொண்ணையே வேண்டாம்னு சொல்லிட்டு….. இப்ப பிடிச்ச பொண்ண மேரேஜ் செய்து கொண்டு வந்து வச்சு அவள கஷ்டப்படவிடவான்னு  தோணிச்சு….” அவன் லாஜிக்கை கேட்கவும் ஒரு பார்வை பார்த்தாள் அவள்…

‘எவ்ளவு நல்லவன்டா நீ’

அடுத்த பக்கம்