மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3 (6)

“என்னத்துக்கும் ஆகிட்டு போகுது….. என்னத்தான் யாருக்கும் பிடிக்கலையே….” அவரது கையை தட்டிவிட்டாள் இவள்… மனம் மட்டுமல்ல வயிற்றுப் புண்ணும் வலி வலி என ஓலமிட இப்படித்தான் நடந்து கொள்ள வருகிறது அவளுக்கு….

. “எப்ப அம்மு அம்மா அப்டி சொன்னேன்….” தழுதழுக்க கெஞ்சினார் பெரியம்மா….

“அதெல்லாம் அப்டித்தான்…..”  இதற்குள் வயிற்றை பிடித்தபடி அருகில் இருந்த சோஃபாவில் இவள் சுருண்டிருக்க

“பிள்ளய பிடிக்காமலா அம்மு எல்லோரும் கல்யாணம் செய்து கொடுக்காங்க…..”

“அவ வலியில அழுதுட்டு இருக்கா….பதிலுக்கு பதில் என்ன பேச்சு ஆனந்தி” என பெரியப்பாவும் பெரியம்மாவையே அதட்ட….

அடுத்து மருத்துவ மனையில்தான் கண் விழித்தாள் இவள்.

அலறி அடித்துக் கொண்டு இதற்குள் அம்மா ஊரிலிருந்து வந்திருந்தார்….

கடும் ஜுரம் கண்டிருந்தது இவளுக்கு…

கட்டிக் கொண்டு பெரியம்மாவிடம்….. “சாரி பெரிம்மா… தப்பா பேசிட்டேன்….ஆனா மேரேஜ் இப்ப வேண்டாம்” என சரண்டராகி இருந்தாள் இவள்…

MBA வுக்கான அப்ளிகேஷன் இவளுக்காக வாங்கி இருந்தான் பஜ்ஜி….

இன்னும் ஒரு மூனு வருஷத்துக்கு மேரேஜ் பத்தி யாரும் பேச மாட்டாங்க என்ற ஒரு விஷயம் மாத்திரம் இவளுக்கு இப்போதைய நிம்மதி…

இரண்டு நாள் கழித்து திரும்பவுமாய் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்திருந்தாள்….

து ஒரு மாலை நேரம்….பக்கத்து வீட்டில் பெண்ணுக்கு  பங்க்க்ஷன் என அம்மாவும்  பெரியம்மாவும் போயிருந்தனர்…. இவளுக்கு துணையாக பஜ்ஜி மட்டும் வீட்டில்…. முடிந்தவரை எதையும் யோசிக்காமல் இருக்க முயன்று கொண்டிருந்தாள் அன்றில்…

லவ் பண்றது தப்பா…? ஆதிக்கு இவ மனசில் இப்டி ஒரு எண்ணம் இருக்குதுன்னு எப்டி தெரியும்….? பஜ்ஜிட்ட சொன்னா என்ன…? இல்லனா பஜ்ஜிட்ட ஆதிக் நம்பர் வாங்கி ஆதிக்ட்டயே சொன்னாத்தான் என்ன…?

பொண்ணுனா ப்ரோப்ஸ் செய்ய கூடாதா? ஆனா செய்தா மத்தவங்கள விடு ஆதிக்கே இவள மதிப்பானா…? அதெல்லாம் போகட்டும் அவன மேரேஜ் செய்ய இவ வீட்ல சம்மதிப்பாங்களா? அவனப் பத்தி என்ன தெரியும்னு இப்டி அல்லாடுறேன் நான்…. இது ஜஸ்ட் ஒரு அட்ராக்க்ஷன்…. அர லூசுத்தனம்….மே பி பேவரிடிசம்…. என்னல்லாமோ நினைத்து களைத்துப் போன மனதால் எதையும் யோசிக்காதிருக்க முயன்று கொண்டிருந்தாள் அவள்…

அதற்காக கையில் கிடைத்த  ஒரு  நாவலை திறந்தபடி  தோட்டத்தின்  மத்தியில் அமைந்திருந்த வட்ட வடிவ ஆழமற்ற தொட்டி சுவரில்  அமர்ந்திருந்தாள்…..

இப்பொழுது இவள் அருகில் வந்து அமர்ந்தான்  ஆதிக்….

தொடரும்…

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 4