மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3 (4)

இதில் இவள் சர்ஜரி முடிந்து வேறு வந்திருக்கிறாளா….. “இப்போதைக்கு பிள்ளைய இழுத்தடிக்காத…. காலேஜும்தான் முடிஞ்சுட்டுல்ல….இப்ப என்ன அவசரம்…..இங்கயே இருக்கட்டும்…. உடம்பை தேத்தி அனுப்புறேன்.” என்றுவிட்டார் இவளது அம்மாவிடம்.

அப்பா ஹார்ட் பேஷண்ட் என்பதால் எப்போதும் பக்குவம் பார்த்து சாப்பாடு கொடுக்க வேண்டும். அதனால் அம்மாவும் அப்பாவுடன் கிளம்ப…..

ஆக திருநெல்வேலியிலேயே தனிக்காட்டு ராஜாங்கம் நடத்தும் நிலை அன்றிலுக்கு…. அஃப்கோர்ஸ் அவளது ஆஸ்தான ப்ரஜை பஜ்ஜியும் இங்கதான் சுத்திட்டு இருந்துது…

ன்று வெகு நேரம் தன்னறைக்குள் படுத்து பாட்டு கேட்டுக் கொண்டிருந்த அன்றில்…..மெல்ல எழுந்து வெளியே வந்த நேரம்….டைனிங் ரூமிலிருந்து காதில் விழுகிறது பெரியப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த பெரியம்மாவின் குரல்…

“இதென்னங்க பேச்சு….. வீட்டுக்கு ஒரே பையன்…. பொம்பிள பிள்ளையையும் வெளிநாட்ல கல்யாணம் செய்து கொடுத்தாச்சு….அப்டின்னா வீட்ல இருக்க அத்தனை தொழிலையும் யார் பார்க்க போறதாம்…. பையன் தான….?  அப்றம் பையன் வேலைய பத்தி என்ன இருக்கு பேச…”

காதில் தானாக விழும் அதை கேட்டவாறே சென்று ஹாலில் இருந்த நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தாள் அன்றில்…

மனதில் ஆதிக் அக்காவையும் அப்ராட்லதான் மேரேஜ் செய்து கொடுத்றுக்கு…அவனும் அவங்க வீட்டு பிஸினசைதான் பார்ப்போனோ ? என ஆரம்பிக்கிறது நினைவு…

“அதெப்டி…. வீட்ல பிஸினஸ் இருக்குன்றதுக்காகவே சரின்னு ஆச்சா?….  கல்யாணம்னு வர்றப்ப பையன் அது மொத்தத்தையும் கவனிக்காட்டாலும்  எதாவது ஓரளவாவது  வேலைல இருக்கனும்ல….” பெரியப்பா இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்…

இங்கு இவள் மனக் கண்ணில் “அதெல்லாம் பார்த்துப்பேன்பா….அப்டியே எதுனாலும் உங்களுக்கு கால் பண்ணி கேட்டுகிறேன்….சும்மா இந்த டீல் என்ன ஆச்சு….. அந்த டெலிவரி என்ன ஆச்சுன்னு குழப்பமா நிம்மதியா போய் இருந்துட்டு வாங்க…” என்று ஏர்போர்ட்டில் அவனது அம்மா அப்பாவுக்கு பை சொல்லிக் கொண்டிருந்தான் ஆதிக்….

‘அதான இல்லனா இவன் மட்டும் இங்க தனியா என்ன செய்துகிட்டு இருக்கானாம்….?’ தனக்குள்ளாக யோசித்தபடி இவள் பேப்பரின் அடுத்த பக்கத்தை திருப்ப…..

“சரி அதுதான் போகட்டும்…. இவளப் பத்தி யோசிச்சியா நீ….? இவ்ளவு  சின்ன பிள்ளைக்கு போய் கல்யாணம் செய்து கஷ்டபடுத்தனும்னு பேசிட்டு இருக்க நீ…?” பெரியப்பாவின் அடுத்த கேள்வி இது….

‘வீட்ல யாருக்கோ கல்யாணம் பேச்சு ஓடுது’ என இவள் அறிவு அதை அர்த்தப்படுத்த…

அன்றில் மனக் கண்ணிலோ ஏற்கனவே சென்று கொண்டிருந்த கற்பனையின் தொடர்ச்சியாகவோ என்னவோ…. ஆதிக் திருமண கோலத்தில் சர்ச்சில் நின்று கொண்டிருந்தான்…. பக்கத்தில் நின்றிருந்த பஜ்ஜியோடும் வந்திருந்த மற்ற ஃப்ரெண்ட்ஸ் ரிலடிவ்ஸ் என மற்றவர்களிடமும் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்……இன்னும் வெட்டிங் செர்மனி தொடங்கி இருக்கவில்லை…

“இங்க பாருங்க எனக்கு உண்மையிலேயே கோபம் வந்துடும் இப்டி பேசினீங்கன்னா…. இவள கஷ்டப்படுத்துற மாதிரியான வீடாங்க அது……? ” பெரியம்மாவின் பதிலில் கோபமும் ஆதங்கமும் ஏறியே இருந்தது….

இப்போது இங்கு இவளது  மன காட்சியில் ஆதிக்கின் அம்மா அக்கா என எல்லோரும் கூட அவனது வெட்டிங் செருமனியில் காட்சி தந்தனர்….

திருமணப் பெண்ணின் பின் புற அலங்காரம் மட்டுமே இவளுக்கு தெரிகிறது….  இவங்க பக்க முறைப்படி கல்யாணப் பெண்ணுக்கு தலையில்  வைக்கவென பூ சரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆதிக்கின் அம்மா…

பீச் நிறத்தில் புஷு புஷுவென ஃப்ராக் போட்ட கொழுக் மொழுக் குட்டிப் பாப்பாவோடு பக்கத்தில் நின்றிருந்த தபி அக்காவோ…..

“அம்மாம்மா அவ ஏற்கனவே வச்சுருக்க பூ மேல சும்மா ஃபார்மாலிடிக்கு கொஞ்சமா வச்சு விடுங்கமா…..ஆசை ஆசையா பூ அலங்காரம் பண்ணி இருப்பா….அது மாறிட வேண்டாம்…” என சொல்லிக் கொண்டிருந்தார்…

பொண்ண நல்லா வச்சுகிறதுன்னா இதுதானாமா உனக்கு? என இங்கு இவள் அறிவு  இடித்துக் கொண்டாலும்…. என்னமோ இப்படி யோசிக்க இவளுக்கு பிடித்தே இருக்கிறது…

தொடர்கிறது திருமண காட்சி….

இப்போது மணப்பெண் சர்ச்சுக்குள் நுழைய ….அவளை ஆவலாய்  திரும்பிப் பார்க்கும் ஆதிக்கை பஜ்ஜி எதோ சொல்லி கிண்டல் செய்தபடி உரிமையாய் நாடி பிடித்து முன்னோக்கி திருப்பி வைக்கிறான்…. இங்கு இவளுக்குள் குழுமுகிறது வெட்கம்

அடுத்த காட்சியில்  மணப்பெண்ணின் முகம் முன்னிருந்த netted veilலை எடுத்து பின் புறமிட்ட ஆதிக்கின் கண்கள் இவள் கண்களை நோக்கிக் கொண்டிருந்தன….

கிணற்றில் இவள் கண் திறக்கவும் பார்த்தானே அதே வகைப் பார்வை….

தூக்கிவாரிப் போட எழுந்தாள் அன்றில்…..

எங்கு ஓடுகிறது இவள் மனம்…. ????!!! ஆதிக்கிற்கு கல்யாணமாம்…. மணப்பெண்ணாய் இவளாம்….!!!!!!!

அடுத்த பக்கம்