மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3 (3)

அடுத்தென்ன அவசர அவசரமாய் இவள் நாகர்கோவிலிலுள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டாள். ஆரம்பத்திலேயே அப்பன்டிசாதான் இருக்கும் என அங்கு மருத்துவர்கள் பேச ஆரம்பிக்க….

“நாளைக்கு உங்க அக்கா ஃபங்க்ஷன்ல நீங்க இல்லனா சரியா இருக்காது ஆதிக்….. நம்ம கார எடுத்துட்டு கிளம்புங்க…. திருவனந்தபுரம் ஏர்போர்ட்ல தெரிஞ்சவங்க வந்து கீய வாங்கிப்பாங்க….. நான் இப்பவே கால் பண்ணி சொல்லிடுறேன்….” என ஆதிக்கிடம் கார் கீயை எடுத்துக் கொடுத்தான் பஜ்ஜி….

எப்படி பஜ்ஜியால் அப்படி ஒரு முடிவுக்கு வர முடிந்தது என இப்போது மட்டுமல்ல அப்போதும் கூட அன்றிலுக்கு அதிர்ச்சிதான்…

கிட்டதட்ட 35லட்ச ரூபாய் கார்.….. அதுவும் பெரியம்மாவோடது…..ஆதிக்கோ அறிமுகமாகி இரண்டு நாள் ஆகவில்லை….. இதில் எப்படி கொடுக்க…? என்ற ரீதியில் இவள் விழிக்க…

“தன்னப் பத்தி கூட யோசிக்காம உனக்காக கிணத்தில குதிச்சார்…..அப்டில்லாம் ஒன்னும் ஏமாத்திடமாட்டார்….” என பதில் வந்தது பஜ்ஜியிடமிருந்து….

அது…அதுதான் மிக மிக தப்பான ஒரு முடிவென இப்போது தெரிகிறது…..அப்போதோ  உனக்காக கிணத்தில் குதிச்சான் என்ற பதத்தில் இவளுமே டக் அவுட் ஆனாள்…

இதில் அன்று இரவு நல்ல பையனா ஆதிக் அந்த காரை இவர்களுக்கு தெரிந்தவரிடம் கொடுத்துவிட்டு துபாய் சென்றுவிட்டான்…

அடுத்த நாள் பஜ்ஜியிடம் பேசினானாம்…..இவளைப் பத்தி கூட விசாரித்தானாம். அதுதான் அப்போதைக்கு அவள் ஆதிக்கைப் பற்றி கேள்விப்பட்டது….

டுத்து வந்த நாட்களில் ஆதிக்கைப் பற்றி எதுவும் இவள் காதுகளுக்கு கிடைக்கவில்லை….  அதற்கு அவசியமும்தான் இல்லையே…. இது ரயில் சினேகம் போன்ற ஒரு நிகழ்வு அவ்வளவே….அடுத்து இதில் தொடர என்ன இருக்கிறதாம்…?

ஆனாலும் எதோ ஒரு வகை எதிர்பார்ப்பு இவளுக்குள்…..  என்ன எதிர்பார்க்கிறாள் என்றும் புரியவில்லை…..

பஜ்ஜி எதாவது சொல்வானா எனப் பார்த்தாள்…..  அவன்ட்டதான் ஆதிக் கான்டாக்ட் நம்பர் இருக்கே…..  ஆனால் பஜ்ஜியோ ஆதிக் என்ற ஒருவனைத் தவிர எல்லாவற்றையும் பேசினான்…..

ஆனாலும் ஏனோ இவளை சுத்தி ஆதிக் ஒரு மௌன மந்திரமாய் படிந்து கிடப்பது போல் ஒரு உணர்வு இவளுக்கு…

காரணம் என்னவென்றால்…. சர்ஜரி முடிந்து ஹாஸ்பிட்டலில் இருந்ததால் பெரும்பாலான நேரம்  படுக்கையில் படுத்து மட்டுமே இவள் இருக்க….

அப்போதெல்லாம் அதுபாட்டுக்கு  எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும் அவள் மனம், அந்த அனைத்திலும் அங்கு ஆதிக்கையும் கூடவே கூட்டி வந்தும் நிறுத்திக் கொண்டிருந்தது….

எதோ அந்த அனைத்திலும் அவன் இருப்பதாகவும்….. அதைப் பற்றி அவன் இப்படியாய் நினைக்கின்றான்….. அச்சூழலில் அவன் இப்படியெல்லாம் நடந்து கொள்வான் என்று தன்னிச்சையாகவே விரிந்து கொண்டு போனது இவள் மனக் காட்சிகள்….

“ட்ரெய்ன்ல டிக்கட்டே இல்லையாம்…” என யாரோ யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தால்……

சீனாவின் ரயில்வே நிலையங்களில், ட்ரெய்ன் வரும் முன்னேயே காத்திருக்கும் ரயில்  கம்பார்ட்மென்டில், ஏறி அமர்ந்து கொள்ள இவளுக்கும் பஜ்ஜிக்கும் வழி காட்டும் ஆதிக்கும்….  வரவும் நொடிகளுக்குள் அந்த பெட்டியை அப்படியே தன்னோடு சேர்த்துக் கொண்டு பறந்துவிடும் ட்ரெயினும்…..

இங்கு இவர்கள் வயல்களுக்கு மத்தியில் ஊர்ந்து செல்லும் ட்ரெயினில், வாசலருகில் முகத்தில் காற்று மோத  பஜ்ஜியோடும் இவளோடும் நின்று பேசியபடி பயணிக்கும் ஆதிக்கும்…. காட்சியாக விரியும் இவளுள்….

யாராவது இவள் அருகில் காஃபி குடித்தால்….  மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு நாளில்….. வீட்டில் எலக்ட்ரிகல் கெட்டிலில் டீ ரெடி செய்வதையும், ஸ்னாக்‌ மேக்கரில் எண்ணெய் இல்லாமல் ஸ்மைலி ஃப்ரெய் செய்வதையும் இவளுக்கு கற்றுக் கொடுக்கும் ஆதிக்கில் ஆரம்பித்து……

இவர்கள் வயலில் மதிய நேரத்தில் வேலை செய்பவர்களுக்காக விறகு கூட்டி அடுப்பெடுத்து டீயும் ஏழிலைக் கிழங்கும் தயார் செய்யும் நிகழ்ச்சியை பஜ்ஜியோடு பார்த்திருக்கும் ஆதிக்கில் வந்து நிற்கும் இவள் மனக் கண்.

அவனோடு கழிந்த நிஜ நேரங்களில் இவளை தாக்கிய….. அவனது விஷய ஞனங்களும்…. கிராமங்களின் பழக்க வழக்கங்கள்  பற்றி  தெரியாமல் இருந்த அவனது சுவரஸ்யமான அறியாமைகளும் இதற்கு காரணம் என இவள் நினைத்துக் கொண்டாள்.

ஆக சில சில நொடிகள் இந்த கற்பனை ஓட்டத்தைக் குறித்து சிலீர் சிலீர் என ஒரு இனம் புரியா பயம் உள்ளுக்குள் பந்தி பரிமாறினாலும்…..   தவறான எந்த விஷயங்களும் அதில் பிடிபடாததால்…..எல்லாவற்றிலும் பஜ்ஜி வேறு கூடவே இருந்ததால்…. அந்நினைவுகள் அவளுக்குள் கொட்டித் தீர்த்த மகிழ்ச்சியை அவள் ரசித்தே இருந்தாள்.

இந்த நிலையில் டிஸ்சார்ஜ் ஆகி பெரியம்மா வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்…. பெரியம்மாவுக்கு குழந்தைகள் கிடையாது என்பதாலோ என்னவோ….இவள் மீதும் சரி…இவளது கசின்ஸ் எல்லோர் மீதும் சரி…படு பாசமாய் இருப்பார்….

அடுத்த பக்கம்