மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 3 (2)

அவளுக்கு பிடித்திருப்பது அவனோடான பயணத்தையா……இல்லை அவனையேவா என ஒரு அபத்தக் கேள்வி அர்த்தமுடனும் அர்த்தமில்லாமலும் எட்டிப் பார்க்கிறது அவள் மன எல்லைக்குள்…

அப்போதுதான் அவளிருக்கும் கோலம் உறைக்க….. அவசரமாய் அருகிலிருந்த கம்பியை மத்திரமாக பற்றிக் கொண்டு பதறிப் போய் விலகினாள்.….

நேர் எதிராய் இருந்தது அவன் நிலை….ஒரு வித பரிதவிப்பும் பாசஅக்கறையுமாய் அதுவரை அவளை பார்த்துக் கொண்டிருந்த அவனிடம் இப்போதுதான் முழுவதுமாய் வந்தேறுகிறது நிம்மதி…

“இப்டித்தான் பிடிப்பியா…?”  சின்னதே சின்ன கண்டிப்புடன் கேட்டான் அவன்…

தண்ணிக்குள்ள காப்பாத்த வந்தவங்கள அசைய விடாம பிடிச்சுகிட்டா அஞ்சு நிமிஷத்தில ஜலசமாதி கேரண்டி ஆச்சே….அதைத்தான் அவன் கேட்டது…

“இனிமே இப்டி செய்ய மாட்டேன் “ அவசரமாக மறுத்தாள் இவள்….எங்கோ சிதறிக் கொண்டிருந்தவளுக்கு  குழப்பத்தில் இப்படித்தான்  பதில் சொல்ல வருகிறது.…

பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ கண்களில் பளீரென ஒரு காந்த மின்னல்…. பரவி படர்கிறது அவன் முகமெங்கும் குறும்பு…… மந்தகாச சிதறல் இதழ் தொடங்கி எல்லா இடமும்….சின்னதாய் தன் உதடு கடித்து அவன்….

கேட்க வந்த எதையோ கேளாதுவிடுகிறான் என்பது இவளுக்கு புரிகிறது…. ஆனால் அது என்னவாய் இருக்கும் என்று புரியவே இல்லை….

எது எப்படியோ அவன் அவளை ஒருமையில் அழைக்க துவங்கியது இங்கிருந்துதான் போலும்……

டுத்து பஜ்ஜி கொண்டு வந்த  கயிற்றின் உதவியால் ஒருவர் பின் ஒருவராக இவர்கள் வெளியேற…..

என்னதான் பகல் நேரம் என்றாலும்  ஒருவகை நடுக்கத்திலேயே இருந்தாள் அன்றில்…. உண்மையில் அவளை  நனைந்த உடையும் அது உண்டாக்கும் குளிருமெல்லாம் ஆட்டி வைக்கவில்லை….. இதய இடுக்குகளில் மாட்டிக் கொண்ட எதோ ஒரு சலனம் அவளை பந்தாடி கொண்டாடியது…

“தபி இந்த டைம்ல போடுறதுக்குன்னு வாங்கின ட்ரெஸ் இது….உனக்கு கண்டிப்பா ஃபிட்டா இருக்காதுதான்….. ஆனா எவ்ளவு நேரம் ஈர ட்ரெஸ்ல இருப்ப…” என அவனது அக்காவிற்காக வாங்கி இருந்த  அந்த சல்வார் செட்டை ஆதிக் அடுத்து கொண்டு வந்து நீட்டியபோது….. அதை கூட நேருக்கு நேராக பார்க்க தடுமாறினாள் இவள்…. எது சரி எது தவறு என எதிலும் யோசிக்க முடியா ஒரு நிலையில் அவள்…

“வாங்கு அனி…..சீக்கிரம் போய் மாத்திட்டு வா… ஆதிக்கு ஃப்ளைட்டுக்கு லேட் ஆகுது பாரு” என்ற பஜ்ஜியின் உந்துதலில்தான் அடுத்து அந்த உடைக்கு மாறி வந்தாள் இவள்…..

அடுத்து இவர்கள் முடிந்தவரை வேக வேகமாக கிளம்பினாலும்….இந்த களேபரத்தில் இழந்த நேரத்தை எதிலாவது ஈடு செய்யாவிட்டால் ஆதிக் ஃப்ளைட்டை பிடிக்க முடியாது என்ற நிலை…

இதில் இவர்கள் திருநெல்வேலி அடையும் போது அடித்து ஊற்றியது இடியுடன் கூடிய மழை…

“இதுக்கு மேல நீங்க டேக்சி தேடிலாம் போய்கிட முடியாது ஆதிக்…… சல்லுனு ஒரு  அழுத்து….. நம்ம கார்லயே போய்ட்டோம்னா மட்டும்தான் சரியா வரும்” சொன்ன பஜ்ஜி காரை நெல்லையில் நிறுத்தவே இல்லை…

நிலமைக்கு அதுதான் ஏற்ற முடிவென்பதால்….அன்றிலோ ஆதிக்கோ மறுப்பேதும் சொல்லவும் இல்லை….

அந்த மஞ்சளும் க்ரீமுமான சல்வாரின் துப்பட்டாவால் தன்னை இழுத்து மூடிக் கொண்டு பின் சீட்டில் சுருளாத குறையாக அமர்ந்திருந்தாள் அன்றில்…

கிணறு அனுபவத்துக்கு பிறகே ஒருவித ஜுர உணர்வில் இருந்தவளின் பேச்சுக்கள் பெருமளவு குறைந்திருக்க….

நேரம் செல்ல செல்ல தனக்கு எதோ சரியில்லை என் நன்றாகவே உணர துவங்கி இருந்தாள்…. ஆதிக்கை இனி பார்க்க முடியாது என்பது எதோ வகையில் பிசைகிறதோ அவளை….

ஓரிரு முறை ஆதிக்கும் சுற்றி வளைத்து அவளை தங்களது உரையாடல்களுக்குள் இழுக்கப் பார்த்தவன்…. ஒரு கட்டத்தில் என்னாச்சு அனி….. உடம்பு முடியலையா….? எங்கயாவது அடிபட்டு சொல்லாம எதுவும் இருக்கியா…? என கரிசனைபட…

“ நேத்தும்  ஹாஸ்பிட்டலுக்கு வர மாட்டேன்னுட்ட….. எதாவது முடியலையா லூசு….. வயிறுவலியோட வாய மூடிட்டு இருக்கியா?” பஜ்ஜியும் விசாரித்த அந்த நொடி ஆரம்பித்தது அந்த வலி….

மீண்டும் வயிறு வலி….நேற்று போல்தான் என்று சொல்லிவிட முடியாது..…அதை விட அத்தனை கொடுமையாய் வலித்தது….

வலியின் ஆரம்பத்தையே “ஹூம்..” என விக்கி மூச்சிழுத்து இவள் சமாளிக்க முயல….அடுத்த நிமிடம் காரை நிறுத்திவிட்டு பின் சீட்டுக்கு இவளருகில் வந்திருந்தான் பஜ்ஜி…

“பார்க்கிற முதல் ஹாஸ்பிட்டலுக்கு கார விடுங்க ஆதிக்…”

அடுத்த பக்கம்