மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 1(3)

“சா…சாரி…. பஜ்….என் கசின்னு  நினச்சுட்டேன்…”  இவள் திக்க..

“இட்’ஸ் ஓகே…” என்றபடி பதற்றத்தில்  இவள் தவற விட்டிருந்த டேபை எடுத்துக் கொடுத்தான் அவன்….

“உள்ள போனீங்கன்னா…பின்னால வர்றவங்களுக்கும் வசதியா இருக்கும்….” அவனது அடுத்த இன்ஸ்ட்ரெக்க்ஷனில்

அவசரமாய் போய் அந்த வின்டோ சீட்டில் ஐக்கியமானாள்…

அடுத்து பஜ்ஜி வாய பொத்தி சிரிச்சபடி பக்கத்தில் உட்கார்ற வரைக்கும் ஆன் ஆக மாட்டேன்னு அடம் பிடிச்ச தன் டேபை தவிர எதையும் இவள் நிமிர்ந்து பார்க்கவில்லை..

“அணில்க்கு செம பல்பு போல….” பஜ்ஜி தான்…

“எரிச்சல கிளப்பாத…. எங்கடா போன விட்டுட்டு…? ”

“ம்… மைசூர் பேலசுக்கு ஓசில கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க …சரி போய்ட்டுதான் வருவமேன்னு போயிருந்தேன்….” அவன் ஃபோன் பேசிக் கொண்டே மெதுவாக வந்திருப்பானாக இருக்கும்…..  அதை கவனிக்காமல் இவள்தான் வேகமாக வந்திருப்பாளாய் இருக்கும்…..அப்படின்னாதான் இப்படி பதில் வரும் என தெரியுமாதலால் அவனுக்கு ஒரு முறைப்பை கொடுத்துவிட்டு மீண்டுமாக தன் டேபுடன் போராட ஆரம்பித்தாள்…

‘ஐயையோ எவ்ளவு நேரமா தனியா பேசிட்டு வந்தனோ…. அதை வேற இந்த வீண்டோ சீட்ட வேண்டாம்னு சொன்னவன் கேட்ருப்பானோ’ இப்படி ஒரு தாட் அவளுக்குள் தாறுமாறாய் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறது…

ஃப்ளைட் கிளம்பவும்…பஜ்ஜி மொபைல்ல ஃப்ளூட் மியூசிக்கை போட்டு ஹெட் செட்டில் காதை அடைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டானாகில்…. இவளுக்கு அதற்கும் வழி இல்லை…. அதான் டேப் வர்க் ஆகலையே…

நேத்து நைட் தூங்காம படிச்சதுக்கு நியாயப்படி தூக்கம் சொக்கனும்…. ஆனா ஏனோ…. அந்த வின்டோ சீட்டை வேணாம்னு சொன்னவன் வகையில் ஒரு வித பரபரப்பு இவளுக்குள்…. பல்ப் வாங்கினமே …. நம்மளையே கவனிப்பானோ…. லூசுன்னு தோணுமோ…

தலையை கொஞ்சமும் அசைக்காமல் மெல்ல கண்ணை மட்டும் உருட்டி அவனைப் பார்த்தாள்….  தன் லேப்டாப்பில் எதையோ  சிந்தப் போகும் புன்னகையுடன் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்…. இவளுக்கு பிடித்த ஜேனட் ஓக் மூவி….

இவள் பார்வையை உணர்ந்தானோ….அனிச்சையாய் அவன் இவள் புறம் திரும்ப…..  சட்டென எதிர் புறமாய் திரும்பிக் கொண்டாள்….. ‘நான் உன்னலாம் பார்க்கவே இல்ல’

அதோடு பக்கத்தில் அமர்ந்திருந்த  பஜ்ஜியிடம் இருந்து இவள் புற ஹெட்போன் bud ஐ பிடுங்கி தன் காதில் வைத்தும் கொண்டாள்.. தூங்கிட்டா எவ்ளவு நல்லா இருக்கும்…. கண் மூடிக் கொண்டாள்.

ஆனால் இரண்டு நிமிஷம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை…. இவளுக்கு எப்பவும் இப்படி சோலோ  ப்ளூட் ம்யூசிக்கில் விருப்பம் கிடையாது….சும்மா இருக்றதுக்கு அதையாவது கேட்கலாம் என்று பார்த்தால்…. இன்னுமாய் போர் அடித்தது….

பசிக்கிறப்ப கண்ணில் பட்ட சிக்கன் பிரியாணி போல்….இப்போது அந்த விண்டோ சீட்காரன் கையில் இருந்த மூவி வேறு இவளை சுண்டி சுண்டி இழுத்தது….

அவளை மீறி சிறுது நேரம் பார்ப்பதும் பின் நிலை உணர்ந்து திரும்பிக் கொள்வதுமாய் இவள்…..  பத்து நிமிடம் பத்து யுகமாய் கழிய….

வயிற்றில் ஏனோ வலி…. முதலில் சற்று தாங்குமளவாய் ஆரம்பித்தது போல் தோன்றியது….. அடுத்த நிமிடத்துக்குள் இவள் சுருண்டு விழும் அளவு துள்ளி ஏறியது…

என்ன சொல்ல ஏது செய்ய என ஒன்றும் புரியவில்லை இவளுக்கு… ..கண்ணை இறுக மூடி முன்னிருந்த சீட்டில் தலையை முட்டி வைத்துக் கொண்டு ஒரு கையால் அடி வயிற்றையும் மறு கையால் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறாள் இவள்…

பஜ்ஜிட்ட கூட என்னதுன்னு சொல்ல என்றிருகிறது…. வயிறு வலின்னா பொதுவா என்னதுன்னு தோணுமோ அவனுக்கு… அதோட பஜ்ஜிட்ட சொன்னா அடுத்த சீட்காரன் வரைக்கும் காதில் விழுமே….  எப்படி எப்படியெல்லாமோ இவள் சமாளித்துப் பார்க்க….

இதற்குள் பஜ்ஜியை எழுப்புகிறான் அந்த விண்டோ சீட்காரன்… அதோட  ஏர் ஹோஸ்டஸை அழைக்கும் காலிங் லைட்டையும் ஆன் செய்திருந்தான்….

“உங்க சிஸ்டர்க்கு உடம்பு முடியல போல…” பஜ்ஜியிடம் சொல்லிவிட்டு…அதற்குள் வந்து லைட்டை ஆஃப் செய்து கொண்டே “ஹவ் மே ஐ ஹெல்ப் யூ” என்று நின்ற ஹோஸ்டசிடம்  “டாக்டர் யாராவது அவைலபிளா?” என்றும் கேட்டான்..

‘ஐயையோ இவன் சீன எக்‌ஸ்கலேட் செய்றானே….’ என ஒரு நொடி தோன்றினாலும் அடுத்து  வலி ஏறிக் கொண்டு போன வகையில் மறுப்பாய் இவளுமே வாய் திறக்கவில்லை….

அடுத்து என்ன பஜ்ஜி பதற..அந்த விண்டோ சீட்காரன் எழுந்து நின்று கொள்ள…யாரோ வர…என்னமோ கேட்க…. “ இத போடுங்க பெயின் அரெஸ்ட் ஆகிடும்…பட் லேண்டானதும் ஹாஸ்பிடல் போய்டுங்க மறக்காம…” என்ற படி அடுத்து ஒரு மாத்திரை இவளிடம் கொடுக்கப் பட்டது….

மாத்திரை எடுத்துக் கொண்ட சில நிமிடங்களில் இவள் வலி குறைந்து கொண்டு வருகிறதென்றால்…. தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு பஜ்ஜி இவள் அருகில் உட்கார்ந்தான்… அந்த வின்டோ சீட் காரனோ தன் லேப்டாப்பை பஜ்ஜிக்கு எதிராக இருந்த ட்ரேயில் வைத்து மூவியின் சப்டைட்டிலையும் ஆன் செய்துவிட்டான்…

அதாவது இவளும் பார்க்கும்படி வழி செய்தான்…

வேண்டாம் என மறுக்க ஒரு உந்தல் எழுந்தாலும்…. உடலளவில் துவண்டிருந்தவளுக்கு ஒரு டைவர்ஷன்  தேவை எனத் தோன்ற…  மௌனமாக அதை பார்த்தபடி அமர்ந்துவிட்டாள்…

எவ்வளவு நேரம் பார்த்தாளோ…..  எப்போதோ தூங்கி இருக்கிறாள்… மறுபடி அவள் விழிக்கும் போது…. பஜ்ஜி அவளை எழுப்பிக் கொண்டிருந்தான்…

“ இறங்கனும் அனி…. எழுந்துக்கோ” என… விழித்து எழுந்தவள் சுற்று முற்றும் பார்த்தால்…அந்த விண்டோ சீட்காரன்  எங்கும் இல்லை…. இவங்கதான் கடைசியா இறங்க போறாங்க போல…எல்லோரும் இறங்கி இருந்தனர்…

‘சே ஒரு தேங்ஸாவது சொல்லி இருக்கனும்’ என இவ்வளவு லேட்டாக தோன்றியது அவளுக்கு…

அடுத்த பக்கம்