மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 1(2)

“என்ன விளையாடுறியா….5 இன்டெர் டிபார்ட்மென்ட் அவார்ட்ஸ் இருக்குது….பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட் அவார்டும் உனக்குத் தான் இருக்கும்….ஒரு தலைவலிக்காக இதையெல்லாம் விட்டுட்டு போறேன்றியே…போட்டோஸ் பார்த்தா அப்பா எவ்ளவு சந்தோஷபடுவாங்க….” ரேயாவை கரம் பிடித்து இழுத்து அமரவைக்க முயன்றாள் சுகந்தி.

அனைவரும் அமர்ந்திருந்த வேளை மேடைக்கு மிக அருகில் இவள் மட்டுமாய் எழுந்து நின்று கொண்டிருந்ததால் அவனின் பார்வையில் தெளிவாக விழுந்தாள் ரேயா.

அவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் வேக வேகமாக அமர்ந்து கொண்டாள். கண்கள் இவளையும் மீறி அவன் முகபாவத்தை ஆராய்கிறது.

இவளை அவன் பார்த்துவிட்டான் என அவன் முகம் காட்டிக் கொடுக்கிறது.

ஆனால் ஒரு நொடியில் அவன் முக பாவம் இயல்பு நிலைக்கு மாறி, அவன் டிரேட் மார்க் புன்னகையை சூடிக் கொண்டது.

“ஹையோ! என்னமா இருக்கான்டி…..சீஃப் கெஸ்ட் ஒரு போலீஸ் ஆஃபீஸர்னதும் ஒரு முக்கால் கிழம் வரும்னு நினச்சேன்…க்ளீன் போல்டுபா நான்…”

யாரோ சொல்ல

“ஏய்! அவன் நம்ம சதுக்கபூதத்தோட  மருமகானாம்…..ஸ்டேஜ்க்கு பக்கத்துல வேற இருக்க….நீ பேசுறது மட்டும் அவர் காதுல விழுந்துதோ….?”

அடக்கினாள் மற்றவள்.

கல்லூரி சேர்மனைத்தான் அப்படி குறிப்பதுவது வழக்கம்.

கத்தியாய் காயத்தை குத்தி திருகியது அவ்வார்த்தை ரேயாவை…

அவனுக்கு மேரேஜ் ஆகிட்டா….?….

மூச்சு முட்டிக்கொண்டு வருகிறது. இனி தாங்காது. எழுந்துவிட்டாள்.

ஐந்தாவது.. அவார்டாவது…இவன் கையால் வாங்கவா? மூச்சு நின்றாலும் நின்று விடும். நோ வே….கிளம்ப வேண்டியது தான்.

கிளம்ப எத்தனித்தவளை நகரவிடாதவாறு ஒரு பெண் காவலர் வந்து நின்றார்.

“எஸ்பி சார் உங்களை கஸ்டடில எடுக்க சொல்லிருக்காங்க…”

“வா…ட்?!!!!!!!” பழி வாங்கிறியா ஆதிக்….இவ்ளவு கேவலமானவனா நீ?!!!

அவனை பார்வையால் வெறித்தாள்.

அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். புன்னைகையின்றி பாலைவனமாக அவன் முகம்.

ன்றிலுக்கு  அவனை சந்தித்த காலங்கள் மனகண்ணில் ஊற்றெடுத்தன….

அப்பொழுது அவள் UG முடித்திருந்தாள்…. அதாவது அன்றுதான் அவளது ஃபைனல் செமஸ்டரின் கடைசி பரிட்சை முடிந்திருந்தது….

சென்னைவாசியான அவள் அவசர அவசரமாக திருநெல்வேலி கிளம்பிக் கொண்டிருந்தாள்…… பெரியம்மா வீட்டு கிரஹப் ப்ரவேசம்….  அவங்களுக்கு இது முதல் வீடு இல்லைதான்…. இருந்தாலும்  ரொம்ப பெரிய வீடு இது….. அதோடு வெகு நாளைக்குப் பின் அனைத்து உறவினர்களும் சந்தித்துக் கொள்ள இருக்கும் வாய்ப்பு…… அதனால் விமரிசையாக இந்த விழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்  பெரியம்மா…

ஆக இவளது வீட்டில் அனைவரும் ஏற்கனவே அங்கு கிளம்பி சென்றாகிவிட்டது…… இவளுக்கு  போஸ்ட்போன் ஆகிப் போன ஒரு எக்‌ஸாம் இன்று என அறிவிக்கப்பட்டதால் அதை முடித்துவிட்டு  அவசர அவசரமாக வந்து  தூத்துகுடி ஃப்ளைட்டில் போர்டாகிக் கொண்டிருந்தாள்….

அப்டில்லாம் இவள தனியா எங்கயும் விட்ற மாட்டாங்க இவ வீட்ல….. ஆனா துணைக்கு இந்த பஜ்ஜி வந்துச்சுன்னா ஃப்ளைட்டுக்கு என்ன ராக்கெட்டுகே கூட அனுப்பி வைப்பாங்க…. அந்த பாசமாலர் பஜ்ஜி இப்பயும் இவ பின்னால வந்துட்டு இருக்குது… பதினஞ்சு சென்டிமீட்டர் இடைவெளியில்..

பஜ்ஜி  பிறப்பால் இவளது மாமா பையன்….. இவ வீட்டப் பொறுத்தவரைக்கும்  இவளோட அண்ணா….. இவளப் பொறுத்தவரைக்கும்…  மேத்ஸ் டீச்சர்,  ஆஸ்தான ட்ரைவர், அட்டென்டர், பி ஏ, பாடிகார்ட், கைட், சில சமயங்களில் அப்பா….பல நேரங்களில் அக்கா என அனைத்தையும் உள்ளடக்கிய நண்பன்….

ஜஸ்ட் மூனு மாசம்தான்  இவளுக்கு மூத்தவன்றதால… எல்கேஜில இருந்து இப்ப வரைக்கும் எல்லா க்ளாஸ்லயும் இவளப் பொறுத்தவரை மாறாத ஒரு விஷயம் ப்ளாக்போர்ட்னா….. இன்னொனு இவன்…. மாமா வீடும்  இவ வீட்டுக்கு அடுத்த வீடுன்றதால….. எப்பவும் எல்லாத்திலும் ஃபெவிகால் போட்டு ஒட்டின மாதிரி கூடவே இருப்பவன்…

ஏரோ ப்ரிட்ஜ் வழியாக  ஃப்ளைட்டுக்கு உள்ளே சென்ற அன்றில் இரண்டு பக்கமும் தன் சீட் நம்பரை தேடிக் கொண்டே நடந்தவள்…. அதைக் காணவும்

“போடா பஜ்ஜி….  நேத்தே வெப் செக்கின் செய்திருந்தன்னா வின்டோ சீட் கிடச்சுறுக்கும்ல….” தனக்காக அலாட் ஆகி இருந்த  மிடில் இருக்கைக்கு அடுத்த வின்டோ சீட்டை ஏக்கமாக பார்த்துக் கொண்டே  இவளுக்கு அடுத்து பின்னால் நின்றவனிடம் சிறுகுரலில் சிடுசிடுத்தாள்….

“இப்ப அந்த சீட்டுக்கு வர்றது லேடியா  ஜென்னானு பார்த்துட்டுதான் நான் உட்காரணும்…. ஏற்கனவே கால் வலிக்குது” என முனங்கியபடி தன் ஹேண்ட் லக்கேஜிலிருந்து டேபை எடுத்தவள்,  பின்புறமாக தன் பேக்கை நீட்டினாள்….  “பார்த்து வைடா….லேப்டாப் இல்லன்னு டொம்னு போட்றாத…”

அது மூனு பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு என்பதால்…. விண்டோ சீட்டுக்கு வருவது ஆணாய் இருந்தால் இவள் மறு ஓரத்தில் இருக்கும் அயல் சீட்டில் உட்கார வேண்டும்…. வருவது பெண்ணாயிருந்தால் அந்த பெண்ணிற்கு அடுத்து நடு இருக்கையில் அமர வேண்டும் என எண்ணம்….  அதற்கு காத்திருக்கத்தான் இந்த சலிப்பு…முனங்கல் எல்லாம்….

“நோ இஷ்யூஸ்…. நீங்க வின்டோ சீட் வேணும்னா எடுத்துக்கோங்க மேம்… நான் இந்த அயல் சீட்ட எடுத்துக்கிறேன்….” இப்படி ஒரு பதில் இவள் காதருகில் கேட்கவும்தான் பட்டென திரும்பிப் பார்த்தாள்….பதறியும் போனாள்…

பின்ன….? பக்கத்துல நிக்றது பஜ்ஜின்னு நினச்சு திரும்பிப் பார்க்காமலே பேக்க தூக்கி கொடுத்தாளோ மேல கேபின்ல லோட் பண்ண சொல்லி…..

அப்போதுதான் அவள் முதன் முதலாய் இந்த ஆதிக் அலைஸ் அதிரூபனைப் பார்த்தது…… ரொம்பவும் பக்கத்தில்  நின்றிருந்ததால் அவன் கழுத்து தாடை முகம் என எல்லாம் இவளுக்கு க்ளோசப் ஷாட்டில் கிடைக்க…..

இவளோட பேக்கை அவன்  மேலே லக்கேஜ் கேபினில் வைத்துக் கொண்டிருந்தாலும்…அதை தன் கையில் வாங்கவோ தடுக்கவோ முயற்சிக்காமல் அவசரமாக திரும்பிக் கொண்டாள்…

அடுத்த பக்கம்