மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 8(3)

“மாப்ள ஆஃபீஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர் ஸ்டேஷன் வரவும் காலைல ஒரு ஃபோன் வந்துச்சாம் அவர்  வைஃப்ட்ட இருந்து…” பெரியம்மா கதையை தொடங்கினார்…

பஜ்ஜி சொன்ன புல்லாங்குழலும் காற்றலையும் கான்செப்ட் கொஞ்சம் புரிவது போல் இருக்கிறது அவளுக்கு…. பெரியம்மாவுடன் எப்படியான ஒரு உறவு இவளுக்கு பிடிக்குமோ அதை அப்படியே ஸ்தாபித்து வைத்திருக்கிறானே இவளவன்….

“அடுத்தவங்க பேசுறத ஒட்டு கேட்கிறது தப்பு…” என்றபடி இப்போது தன்னவனை  இழுத்துக் கொண்டு மீண்டுமாய் அறைக்குள் வந்தது அன்றில்…

இறுக அணைத்திருந்தாள் அடுத்த நொடி தன்னவனை…

“ஹேய் அல்வா…. நம்மள ரெஸ்ட் மட்டும்தான் எடுக்க சொல்லி இருக்காங்க…” சீண்டினான் அவன். ஆனால் தானும் அவளை தன்னோடு வளைத்துக் கொண்டான்.

அவள் இன்னுமாய் அவன் மார்புக்குள் புதைந்தாளே தவிர பதில் என்று எதுவும் வரவில்லை….

“இனிமே இப்டி பிடிக்கமாட்டேன்னு வேற சொல்லி இருக்க நீ…” அடுத்தும் அவன் சொன்னான்.

தலையை நிமிராமல் வந்தது அவளிடமிருந்து வார்த்தைகள் “பொய் சொல்லாதீங்க…” இன்னுமாய் இறுகினாள் அவனோடு….

“கிணத்துல வச்சு சொன்னியே இனிமே இப்டி பிடிக்க மாட்டேன்னு…” அவன் நியாபகபடுத்த….

பளபளப்பை ஏந்திய கண்களை மட்டுமாய் அவன் முகம் நோக்கி நிமிர்த்திப் பார்த்தாள்….

‘அதுக்கு இப்டியாடா அர்த்தம் எடுப்ப?!!’

“அப்பவே சொல்ல நினச்சேன் அவசரப்பட்டு இப்பவே இப்டில்லாம் முடிவு செய்யாதன்னு…” இன்னுமாய் அவன் சீண்ட….

அன்று கிணற்றில்  கண்களில் பளீரென ஒரு காந்த மின்னலும்…. முகமெங்கும் பரவி படர்ந்திருக்கும் குறும்பும்……  இதழ் தொடங்கி எல்லா இடமும் மந்தகாச சிதறலுமாய்….சின்னதாய் தன் உதடு கடித்து அவன் பார்த்த பார்வை அப்படியே மனகண்களுள் வருகிறது இவளுக்கு….

கொஞ்சமேனும் முறைக்கத்தான் ஆசை….. சிறிதளவாவது அவன் பிடியிலிருந்து திமிரிக் கொள்ளவே எண்ணம்….பின்ன அப்பவே இவன் என்னதெல்லாம் நினச்சு வச்சுறுக்கான்…??!!!

ஆனால் அதெல்லாம் எதையும் செய்ய கூட முடியவில்லையே…..

எது செலுத்தியதோ இவளை….. அவன் பார்வை சுழலுக்குள் பயணித்தவளாய்

இதோ இப்போதும் அந்நாளின் அதே காந்த குறும்பும் மந்தகாச சிதறலுமாய் சின்னதாய் தன் உதடு கடித்து சிந்திக் கொண்டிருக்கிறானே அந்த சிரிப்பை…. தன் ஒற்றை விரல் நீட்டி ஸ்பரிசித்தாள்…. அவன் இதழை தொட்டாள்….

இந்த முறை அவனிடமிருந்து அவளால் விலக முடிகின்ற போது…. இரண்டு  நிமிடம் முடிந்திருந்தது…..

“போடா…. இனி உன் பக்கம் வரவே மாட்டேன்” அறையை விட்டு வெளியே ஓடிக் கொண்டிருந்தாள் அவள்.

“ஹேய் நீ மட்டும் செய்யலாம்……நான்னா கூடாதா?” தன் ட்ரேட்மார்க் சிரிப்போடு கேட்டபடி அவள் பின்னால் நடந்தான் இவன்..

“அதுவும் இதுவும் ஒன்னா…. ?“ தன் ஓட்டத்தை நிறுத்தவே இல்லை அவள்.

“என்ன விட்டுட்டு போனா உங்க அம்மா திட்டுவாங்க…”

“அவங்கட்ட சொல்லிப்பேன்…” மொட்டை மாடி தாண்டி படிகளைப் பார்த்து போய்க் கொண்டிருந்தாள் அவள்.

“ஏய் அல்வா என்ன உளறி வைக்கப் போற…?”

“அவங்க என்ன ரெஸ்ட் எடுக்கவே விடமாட்டேங்குறாங்கன்னுதான்…”  புடவையை ஒரு கையால் சற்று தூக்கிப் பிடித்தபடி படிகளில்  கடகடவென இறங்கிப் போனாள் அவள்.

சிரிப்பும் சிறு வெட்கமுமாய் சின்னதாய் தன் தலையில் அடித்துக் கொண்டான் ஆதிக்…. ‘இது போதாதாமா ‘

இதற்குள் அவள் தரை தளத்தை அடைந்திருந்தாள்….

அதே நேரம் வேஷ்டியை  மடித்துக் கட்டியபடி ஏதோ ஒரு பெரிய பாத்திரத்தை இரண்டு கைகளிலுமாக பிடித்து தூக்கியபடி இவளை கடந்த பஜ்ஜி…

“ஹையோ என் செகண்ட் இயர் புல்லாங்குழலே…” என்றுவிட்டுப் போனான்.

வைத்தாள் ஒன்று அவன் பின் தலையில்…..

‘இவனே கிண்டல் பண்றான்னா கீழ மத்தவங்க என்ன சொல்வாங்களாம்…..’

மீண்டும் தன்னவனை நோக்கி படியேறி ஓடினாள்.

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை.

 

8 comments

  1. Wow so sweet.bajji ya avlo pidichathu.ena our affection.athik and ani nalla pair.athepadi chellam unaku mattum ipidi konjurathu puthusu puthusa names kidaikuthu alva ponnu pal kutty nu so sweet.

  2. Indha full storyla enaku rmbaaaa pidichathu bajji thaan. Semmaaaaa…… Pullangulal concept nalla irunthathu and enaku puthusa therinjathu. Thanks for this story. elameaa positive characters no negative thoughts. Full of love.

  3. பஜ்ஜி அணில் பெயரே செமயா இருந்தது. இருவாட்சி பூ, கட்ட நார், பம்ப்செட், கிணறு என்று கிராமத்தையே கண்முண் கண்டது போல் இருந்தது. காதலை வெளிப்படுத்திய வார்த்தை வரிகள் அருமை. பஜ்ஜிக்கும் அன்றிலுக்கும் உள்ள உறவு அழகு . மொத்தத்தில் கதை நன்று.

Leave a Reply