மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 7(5)

அங்கு மரநிழலில் உட்கார  ஏதுவான இடம் அவன் முன்பு ப்ரபோஸ் செய்த அந்த இடம்தான்….அங்குதான் சென்று உட்கார்ந்திருந்தாள்….முன்பு நடந்த நிகழ்வுகளைத்தான் நினைத்தும் கொண்டிருந்தாள்…

ஆனால் ஆதிக்கும் சற்று நேரத்திற்கெல்லாம் அங்கு வர….. என்ன சொல்ல  எதை செய்ய என ஒன்றும்  தோன்றவில்லை இவளுக்கு…. இப்பொழுது கண்ணோடு கண் அவன் இவளைப் பார்க்க….. வெறுப்பில் ஓடுகிறாள் என நினைக்க முடியாதபடி மென் நடைதான் எனினும்……  நடந்து அங்கிருந்து வீட்டிற்குள் இவளுக்கான அறைக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.

அடுத்து சில மணி நேரமே சென்றிருக்கும்…… இப்போது இவள் அறைக்குள்ளேயே வந்தான் அவன்…. தரையில் முட்டு கூட்டி அமர்ந்திருந்த இவளுக்கு அருகில் அவனும் அமர்ந்தான்.

சிலீரென முதுகு தண்டில் ஜில்லிட்டாலும்…..எத்தனை கால கனவு இது……அவனோடு இப்படி அமர….. ஆனாலும் அடுத்து அவனிடம் பேச வரவில்லை இவளுக்கு…

“அனு” என்றான் அவன்…

தன் கற்பனையில் அவன் தன்னை அழைக்க விரும்பிய பெயர்….

கண்களை மட்டுமாக நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள்.

“உன் மேல எனக்கு கோபமோ வருத்தமோ நம்பிக்கை இல்லைனோ எதுவும் கிடையாது….. ஆனாலும் நான் உன்ட்ட இப்ப இத திரும்ப கேட்டாகனும்…. நம்ம ரெண்டு பேர் பேரெண்ட்ஸ்ட்டயும் நான் இப்ப நம்ம மேரேஜ பத்தி பேச போறேன்….. உனக்கு அது சம்மதமா?” இவள் கண்களைப் பார்த்து அவன் கேட்டான்.

மெல்ல எனினும் வலுசம்மதத்துடன்  ஆடியது இவள் தலை.

அவன் முகத்தில் சிந்தியது வழக்கமான மென் புன்னகை… காட்சி தந்தது ஆழ ஆனந்தம்….

“எனக்கும் உங்க மேல  கோபமோ  வருத்தமோ நம்பிக்கை இல்லைனோ  எதுவும் இல்ல….” மெல்ல வெகு அமைதியாக வந்தன வார்த்தைகள் இவளிடமிருந்து…

“ம்…தெரியும்….”இது அவன்…

“ஆனா முன்ன மாதிரி இருக்க முடியலையே….” உள்ளதை சொல்கிறாளா….குறைபடுகிறாளா  அல்லது காரணம் கேட்கிறாளா?

“அது இந்த டேவோட ஷாக்….. சரியாகிடும்” விளக்கம் அவனது…

“உங்கள இப்டி தப்பா நினச்சுட்டனேன்னு இருக்குது…” குற்ற மனப்பான்மைதான் உண்மையில் அவளை அமிழ்த்திக் கொண்டிருப்பது…..

“அப்டின்னா நான்தான் இருக்கதுலயே அதிகமா தப்பா நினச்சுட்டேன்…..நீயே இல்லனுல நினச்சுட்டேனே…” ஆதிக் சொல்ல

“அ..து…அதுல உங்க தப்பு என்ன இருக்கு…..? பெரியம்மாவே அப்டி சொல்றப்ப வேற என்ன செய்திருக்க முடியும்….” வேகமாக அவனுக்கு வக்கீலானாள் இவள்.

“அது போலதான் நீ நினச்சதும்…  எல்லோருக்கும் விஷயம் ஒவ்வொரு கோணத்துல மட்டுமே தெரியுற மாதிரி அமஞ்சுட்டு சூழ்நிலை அவ்ளவுதான்….” அவன் சொல்வதை ஏற்க முடிகிறதுதான் இவளுக்கு.

“உண்மையில் எனக்கு உங்க பெரியம்மா மேல கூட வருத்தம் இல்ல…… அவங்களுக்கு தெரிஞ்ச வகையில் உன்ன சேஃப் கார்ட் செய்ய ட்ரைப் பண்ணி இருக்காங்க…..என் பொண்ணுக்கு பார்க்கிற பையன் மேல சின்னதா உறுத்தல் இருந்தா கூட நான் கல்யாணம் செய்து கொடுப்பனா…? ” ஆதிக் இவள் அறையில் இருந்த இவளது பள்ளிகால புகைப்படங்களை சுற்றி ஆர்வமாக கண்களை ஓட்டியபடியே இதை கேட்க….

இவளுக்குள்  சூரியச் சுமையிலிருந்து நிலவின் பளுவுக்கு மன மௌனத்தின் கணம் மாறிக் கொண்டாலும் இன்னுமே ஏதும் இயல்பாய் பேச முடியவில்லை..….

இந்நிலையில் தான் இந்த பஜ்ஜி ஏதோ இவளும் ஆதிக்கும் மூங்கிலும் காற்றும் போல இயல்பா இசைந்து போறாங்கன்னு சொல்லிட்டு போறான்…

அடுத்து வந்த 15 நாட்கள் ஜெட்  ஃபாஸ்ட் ராக்கெட் ஃபாஸ்டில் கழிய….. ஆதிக்கும் இவளும் வெவ்வேறு ஊர்களில் இருந்த சூழலில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வாய்ப்புகள் அமையாமல் வெறும்  ஃபோன் பேச்சில் முடிந்து போயிருந்தன.

தொடரும்

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 8