மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 7(4)

ப்ப கூட “ தம்பி நீ யோசிச்சு பாருடா…. உன் அளவுக்கு நம்ம அம்முவ யார் பார்த்துப்பா….. நம்ம வீட்லயே இருந்துப்பீங்க ரெண்டு பேரும்…..” என பஜ்ஜியிடம் புலம்பினார் பெரியம்மா…

இவ்ளவு ப்ரச்சனைக்கு பிறகு  ஆதிக் வீட்டிற்குள் செல்லும் அன்றிலை அவர்கள் நன்றாக நடத்த மாட்டார்களோ என்ற பயம் அவருக்கு…

அடுத்த அறையில் இருந்த அன்றில் காதில் இது விழ…. பஜ்ஜி கத்து கத்துன்னு கத்தப் போறான்னு அவ நினைக்க…..

நேர் எதிராய்..

“என்ன பெரி நீ…” என கொஞ்சினான் அவன்…. செம்ம சந்தோஷ மூடில் மட்டுமே இந்த பெரி எட்டிப் பார்க்கும் அவனுக்கு….உச்ச பாசத்திலும்தான்….

“இங்க பாரு பெரி….  காத்துக்குள்ளதான் முங்கி கிடக்கும் புல்லாங்குழல்…. ஆனா  எந்த  காத்தையும்  ம்யூசிக்கா மாத்தாது அது… தனக்கே தனக்கான காத்த மட்டும் அதுவும் அதுக்கான முறையில வரும்போதும் மட்டும்தான் அது பாட்டா பாடும்….. அப்டித்தான்  நம்ம அனி…. ஆதிக் கூட மட்டும்தான் அவளால இயல்பா சேர்ந்து  இருக்க முடியும்….” என தத்துவமாய் பொழிந்தான் அவன்.

“என் புல்லாங்குழல் இப்ப எந்த காலேஜ்லயோ செகண்ட் இயர்ல சுத்திட்டு இருக்கும்…… ஆண்டவா அது மெடிகல் காலேஜா மட்டும் இருக்க கூடாது…. இன்னும் 4 வருஷம் காயப் போட்றுவா “ என தனியாய் புலம்பிக் கொண்டும் சென்றான்….

எப்பவும் ஒரு அழுத்தமான சூழ்நிலைக்கு அடுத்து சார் ஹெட் செட்ல ஃப்ளூட் வழிய வழியதான் வலம் வருவார்….அப்ப இழுத்து வச்சு பேசிட்டாங்க அந்த பெரியம்மா…..

கேட்டிருந்த அன்றிலுக்கும் கூட இப்போது சிரிப்பு வந்தது….

கூடவே வேறு ஒன்றும் அவளை கிளறியது….

ஆதிக்கை எப்போதுமே அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்….. அவன் கண் இமைப்பதும் இமைக்காததும் கூட இவளை தாக்கும்….இப்போதோ இந்த பிரிவின் பின் இன்னுமே அது மிக மிக அதிகம்..……எந்நேரமும் தன் கண்ணுக்குள் அவனை பொதிந்து கொள்ளவும்…. அவனை சுற்றியே இயங்கிப் பழகவும்…..அவனை தன் உயிரில் சுமந்தழியவும் விருப்பமிருக்கிறது….. ஆனால் ஏனோ அவனிடம் முன்போல் இயல்பாய் இருக்க முடியவில்லை இவளுக்கு….

சென்னையிலிருந்து ஃப்ளைட்டில் வரும் போது ஜன்னல் ஓரத்தில் இவள் சுருண்டு கிடக்க….. மௌனம் மட்டுமே அங்கு ஆட்சி செய்தது….

இடையில்  ஒரு தருணத்தில் விமான பணிப்பெண் ஸ்னாக்‌ஸ் சர்வ் செய்ய…. இவள் ஒன்றும் வேண்டாம் என மறுத்து விட்டாள்….. காஃபியை வாங்கி இவள் முன் வைத்தது ஆதிக்தான்..

“இதையாவது குடி…..தலைவலிக்கு பெட்டரா இருக்கும்…” அவன் சொல்ல, அவனை ஒரு வலுவிழந்த பார்வை பார்த்துவிட்டு இவள் காஃபியை கையில் எடுத்துக் கொண்டாள்.

இவள் தலைவலியை புரிந்திருந்தவனுக்கு மற்றதும் புரிந்திருக்கும் என எங்கோ தெரித்தோடிய நினைவோடு சரி….. மனதில் கூட மௌனம்.

அவ்வளவுதான் அவனோடான உரையாடல்…..

இங்க வீட்டுக்கு வந்து பெரியம்மாவிடம் எல்லாம் பேசி முடித்த பின்….. இவளோட அம்மா அப்பாக்கு விஷயம் சொல்ல…..அவங்களும் சரி…..ஆதிக்  பேரெண்ட்ஸும் சரி…. அன்னைக்கே திருநெல்வேலி கிளம்பி வந்தாங்க…..

அவங்க வந்து சேரும் வரை வீட்டில் ஆதிக்கும் இவளும் பஜ்ஜியும் காத்திருக்க வேண்டிய சூழல்.…..  அப்போது பஜ்ஜியும் ஆதிக்கும் கலகலத்துக் கொண்டார்கள் என்று இல்லை  என்றாலும்….. பேசிக் கொண்டார்கள் இருவரும்…. அதுவும் ஒருவர் மீது மற்றவரின் பரஸ்பர நம்பிக்கையும் நல்லெண்ணமும் மீட்கப்பட்டு விட்டதால் இயல்பாகவே பேசிக் கொண்டார்கள்…..

இவளுக்கும்தான் ஆதிக் மீது முழு நம்பிக்கையும்…..உச்சபட்ச்ச காதலும் இருக்கிறது…..ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை பேச வரவில்லை……ஹாலில் சிறிது நேரம் சோஃபாவில் அவன் எதிரில்  அமர்ந்து இருந்தவள்…… இவள் இதழில் மட்டுமல்ல மனதிலும் கணத்து படுத்திருந்த மௌன சுமை தாளாமல்  எழுந்து  தோட்டத்திற்கு போய்விட்டாள்…

அடுத்த பக்கம்