மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 7(3)

ஆக வேலை எதுவும் உருப்படியா செய்யாம… எங்க இருக்கான்னு கூட வீட்ல சொல்லிட்டு போகாம சுத்ற பொறுப்பற்ற பையன் ஆதிக் என தோன்றிவிட்டது பெரியம்மாவுக்கு……. அக்காக்கு பூ வாங்கவென சென்னையில இருந்து திருநெல்வேலி வந்த கதை முன்பு பாசமாக தோன்றியது……இப்போது படு ஊதாரித்தனாமாய் பொறுப்பின்மையாய் பட்டது அவருக்கு…

என்னதான் வசதி சொத்துன்னு இருந்தாலும் இப்டி பொறுப்பில்லாம இருக்ற பையனுக்கு  அன்றிலுக்கு பிடிச்சுறுக்குன்ற ஒரே காரணத்துக்காக எப்படி பெண் குடுப்பதாம் என்ற எண்ணம் வந்து விட்டது அவருக்கு….

அதுவும் பார்த்த ஒரு நாள்ள பிடிச்சுதுன்னா…..பார்க்காத சில மாசத்துல மறந்துடும்….சும்மா வயசுல வர்ற ஒரு பாசிங் க்ளவ்ட் இது….. அன்றிலுக்கு பஜ்ஜிதான் சரி…எப்பவும் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துப்பான் என முடிவுக்கு வந்துவிட்டார் அவர்.

அந்நேரம்தான் கார் காணமல் போனதை சின்னதாய் சொல்லி இருக்கிறான் பஜ்ஜி….. உறுதியாய் எதுவும் தெரியாமல் ஆதிக்கை பற்றி தப்பா நினைக்க வச்ச மாதிரி ஆகிடுமே என நினைத்து…..ஆதிக்தான் கொண்டு போனான் என அப்போது பஜ்ஜி சொல்லி இருக்கவில்லை…… ஆனால்  கார் பாகிஸ்தான் சைட் சுத்துது…….டெரரிசம்னு எல்லாம் அவன் உளறிவைக்க…

பொறுப்பில்லாத ஆதிக்தான் பஜ்ஜிக்கு கூட தெரியாமல் கார தூக்கிட்டு போய்ட்டானோ….டெரரிஸ்ட் கூடல்லாம் அவனுக்கு லிங்க் இருக்கோ….அதான் எங்க போறேன் வரேன்னு கூட வீட்ல சொல்லாம சுத்றானோ…..என விபரீதமாக பயச் சிறகு விரிந்து விட்டது பெரியம்மாவுக்கு…

அவ்ளவுதான் தன் முடிவு தப்பே இல்லை என அவருக்கு தோன்ற….. அந்நேரம் பார்த்து ஆதிக் ஆக்சிடென்ட் ஆகி தூத்துகுடியில் இருப்பாதாக அவனது பெற்றோர் அழைக்க…. இந்த கல்யாணம் வேண்டாம் என மறுத்துவிட்டார்  பெரியம்மா…..

பொறுப்பில்லாத பையனை நம்ம தலையில் கட்டி வைக்க பார்த்தாங்களே என்ற கோபம் வேறு அவருக்கு…

இதில் அன்றிலுக்கு இது தெரிந்தால் காதல் கத்தரிக்கான்னு எதுவும் அவள் சொல்லி இன்னும் விஷயத்தை குழப்ப கூடாது என நினைத்தவர்….  விஷயத்தை யாரிடமும் சொல்லவே இல்லை…..இன்னும் சில மாதங்கள் போனால் அன்றில் நார்மலாகிவிடுவாள்….பஜ்ஜி பிசினசில் செட்டில் ஆகவும் அன்றில் பஜ்ஜி மேரேஜை நடத்திவிடலாம் என நம்பினார் அவர்.

அப்போதுதான் ஆதிக் வீட்டை தொடர்பு கொள்ளவென பஜ்ஜி அவரிடம் கேட்க வந்தது….. ஏதேச்சையாய் பார்ப்பது போல் ஆதிக் ஃபோட்டோவைக் காட்டி இது யார் என கேட்டு…. அவனை குழப்பி வாயை அடைத்துவிட்டார். அதுதான் அன்றிலை சமாளிக்க சரியான வழி என்பது பெரியம்மாவின் எண்ணம்.

இதில் சில மாதங்கள் கழித்து ஆதிக் அவரைப் பார்க்க வீட்டுக்கு வந்து நிற்க……அவனுக்குத்தான் டெரரிஸ்ட் லிங்க் அது இதென பயந்து கொண்டிருக்கிறாரே இவர்…… எங்க கல்யாணம் வேண்டாம்னு சொன்னதும் அன்றிலை தேடிப் போய் எதுவும் செய்துடுவானோ….. இப்பதான் நான் லவ் பண்ணிட்டனாலே  நீ என்னையத்தான் கல்யாணம் செய்தாகனும்…. இல்லனா ஆசிட் ஊத்தி கொல்லுவேன்…..  அரிவாளால போட்டுதள்ளுவேன்னு அலையுறாங்களே பையங்க….

இதுல இவனுக்கு டெரரிஸ்ட் கான்டாக்ட் வேற…..  என்ன வேணாலும் செய்ய துணிஞ்சுடுவானே என்ற பயம்….. ஆக அன்றில் இறந்து விட்டாள் என்று சொல்லி விடுவது படு  சேஃப் என தோன்றி விட்டது அவருக்கு….

இவைதான் நடந்து முடிந்த அனைத்து இடியாப்ப சிக்கலுக்கும் காரணம்….

ப்போது பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் பேச வேண்டியதை பேச….. சில கசமுசா…சில கண்ணீர்…பல சிரிப்பு என அடுத்து ஆதிக் அன்றில் திருமணம் உடனடியாகவே முடிவாகிவிட்டது……

இந்த டைம் ஆதிக்  நாளை தள்ளிப் போடவெல்லாம் கொஞ்சமும் தயாராக இல்லை…..  அவனும் அன்றிலும் திருமணத்தை ஆவுடையனூர் பூர்வீக வீட்டில் வைத்துக் கொள்ள விரும்ப…… ஹால் வென்யூ என அதற்கு கூட காத்திருக்க அவசியமின்மையால் அடுத்த இரு வாரத்தில் திருமணம் என நிச்சயிக்கப் பட்டது..

அடுத்த பக்கம்