மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலை 7(2)

திக்கும் ரேயாவும் ஒன்றாய் உள்ளே நுழையவும் துள்ளி எழுந்துவிட்டார் பெரியம்மா….. அன்றிலைவிட அடிபட்ட பாவமும் அதிர்ச்சியும் அவரிடம்…

அடுத்து அவர் சொன்ன விளக்கத்தை என்னவென்று சொல்ல….??!!!!

ஆசை ஆசையாகத்தான் அன்றில் ஆதிக் திருமணத்தை அவர் விரும்பியது……ஆனால் ஆதிக்கை வழி அனுப்பிவிட்டு வந்த நாளிலிருந்து பஜ்ஜி சுத்தமாக சந்தோஷமாக இல்லை….. இரண்டு மூன்று வாரமாக இதைக் கவனித்த  அவருக்கு மெல்ல மெல்ல ஒன்று தோன்ற தொடங்கியது…… அப்போது வரை ஆதிக் பற்றி தகவல் எதுவுமில்லை என்பதால்தான் பஜ்ஜி  இப்படி இருக்கிறான் என்பது அவருக்கு தெரியாதே…

வீட்டில்  உள்ளவர்கள் பதறிவிடக் கூடாது என அன்றிலும் பஜ்ஜியும்  ஆதிக் பற்றி தகவல் இல்லை என்பதை யாரிடமும் சொல்லி இருக்கவில்லை….. எப்டியும் இன்னைக்கு கூப்டுடுவான் என தினமும் நாளை கடத்திக்  கொண்டிருந்தனரே….

பெரியம்மாவுக்கோ…. அன்றிலிற்கு பிறந்ததிலிருந்து  எல்லாமாயிருக்கும் மாமன் மகன் இந்த பிஜு….வயசு பசங்க என்னல்லாம் விளையாடுது…..ஆனா அன்றில் பூப்பறிக்க கூப்டா கூட யோசிக்காம கூட போற ரகம் இவன்…. அவ மேல அவன் பாசமா இருக்கான்னு நினச்சுட்டு இருக்க…..ஒரு வேள அவன் அவள காதலிக்கிறனோ… அவளுக்கு மேரேஜ்னு முடிவு செய்ததும் இப்படி சுருண்டுடானே என்ற  கேள்வி வந்திருக்கிறது மனதினுள்.

ஆதிக் கிளம்பிப் போகவும் நிச்சயதார்த்தம் சீக்கிரத்தில் இருக்கும்…..அது சென்னையில் நடக்க வேண்டும் என அன்றிலை சென்னை கூட்டிப் போயிருந்தனர் அவள் பெற்றோர்..….பஜ்ஜி மட்டும்தான் பெரியம்மா வீட்டில் இருந்த நபர்….ஆக அன்றிலும் அப்செட்டாக இருக்கிறாள் என அவருக்கு தெரியாது போக…..பஜ்ஜியை இப்படி யோசித்துவிட்டார் பெரியம்மா….

அன்றில் கல்யாணம் வேண்டாம்னதும் MBA அப்ளிகேஷனை வாங்கிட்டு வந்தவன் பஜ்ஜிதான்…… அதாவது இப்ப மேரேஜ் வேண்டாம்னு நினச்சுறுக்கான்…..  அன்றில் அழுறாளேன்னு வெறும் ஆறுதலுக்காக பஜ்ஜி அப்ளிகேஷன் வாங்கிய செயல் இப்போது இப்படி தோன்றி இருக்கிறது பெரியம்மாவுக்கு…

தன் முதல் வருமானத்தில் பஜ்ஜி அன்றிலுக்குத்தான் ப்ரேஸ்லெட் வாங்கி கொடுத்துறுக்கான்….. அந்த சொந்தகார லேடி அன்றிலுக்கு வரன் சொன்னதும் இந்த பஜ்ஜி மூஞ்சி எப்டி போச்சு….? முன்பு பாசமாகப் பட்டது….இப்போது வேறு வர்ணத்தில் தெரிந்தது…

ஆதிக்கை பஜ்ஜி மச்சான் என குறிப்பிடுவதை கவனித்த பெரியம்மா…..” அன்றில் மாப்ள எப்டிடா உனக்கு மச்சான்…..? அவர் உனக்கு அண்ணன்டா…” என ஆரம்பத்தில் முறை சொல்லி கொடுக்க…..”அண்ணனா எனக்கா?”  என பஜ்ஜி சொல்லிவிட்டு போனானாம்…

ஆக பஜ்ஜிக்கு ஆதிக்கை அன்றிலின் துணையாக பார்க்க பிடிக்கவில்லையோ என இப்போது தோன்றிவிட்டது பெரியம்மாவுக்கு…

பஜ்ஜியைப் பொறுத்தவரை அன்றில் மனதளவில் தங்கை….ஆக ஆதிக் மச்சான்…. இந்த விளக்கம் பெரியம்மாவுக்கு நேர் மாறாய் இப்போது புரிந்து வைத்திருக்கிறது…

அதோடு கல்யாணத்துக்கு அன்றில் சம்மதிக்கவும் ஆதிக் வீட்டுக்கு ஃபோன் செய்ய போனது பெரியம்மா……காரணமே சொல்லாம ஒத்தகால்ல நின்னு அதை தள்ளிபோட சொன்னது பஜ்ஜி….

இப்படி எல்லாவற்றையும் யோசித்து குழம்பிவிட்டார் பெரியம்மா…

குழந்தை இல்லாத அவருக்கு அன்றிலும் பஜ்ஜியும் இரண்டு கண்கள்…

அப்படி இருக்க பஜ்ஜிக்கு இப்படி ஒரு ஆசை இருக்கிறது என தெரிந்தபின்னும்….பெரியம்மா எப்படி இந்த ஆதிக் அன்றில் கல்யாணத்த பத்தி நினைக்கவாம்… தடுமாறிப் போனார்.

இந்த குழப்ப நேரத்தில் ஆதிக் வீட்டுக்கு நெருங்கிய உறவினர் ஒருவரை சந்திக்க நேரிட்டிருக்கிறது பெரியம்மாவுக்கு……  அன்றில் ஆதிக்கிற்குமாக திருமணம் செய்விக்கும் பேச்சு இருப்பதை அறியாத அவர்….. “முன்னால பார்க்க அந்த ஆதிக் நல்லபையனாதான் தெரியும்….. ஆனா இப்ப பார்த்தா வீட்டு தொழிலையும் பார்க்கல….. வெளியவும் எதுவும் செய்றானான்னு தெரியலை…..பையன் என்ன செய்றான்னு அவன் அப்பாட்ட கேட்டா…..சும்மா வாய வாய மெல்லுதான்….ஆதிக் பையன் எங்க இருக்கான்னே அவன் அப்பாக்கு தெரிஞ்ச மாதிரி இல்ல…” என மனதுக்கு பட்டதை சொல்லி வைத்திருக்கிறார்…

இதில் இன்னுமாய் பதறிப் போன பெரியம்மா சும்மா சுகம் விசாரிப்பது போல் ஆதிக் வீட்டிற்கு அழைத்து ஆதிக்கின் தற்போதைய பழக்கவழக்கங்கள் பற்றி துருவி இருக்கிறார்….. அந்த டைம் உண்மையில் ஆதிக் மருத்துவமனையில் சுயநினைவின்றி அடையாளம் கூட தெரியாமல் விழுந்து கிடந்த நேரம்…. அவன் பெற்றோருக்கே அது தெரியாது…

ஆக ஆதிக் இப்ப எங்கு இருக்கிறான் என்று கூட உறுதியாக சொல்ல முடியவில்லை அவன் பெற்றோரால்…. வேலை விஷயமா வழக்கம் போல எங்கயோ சுத்திட்டு இருக்கான் பையன்னு ஆதிக்  வீட்ல நினச்சுட்டு இருந்திருக்காங்க….

இதில் மற்றொரு விஷயம்……ஆதிக் பிஸினஸ் செய்யப் போவதாக சொல்லித்தான் அன்றில் பெரியம்மாவிடம் பெண் கேட்டிருந்தனர் அவன் பெற்றோர்…. அவன் போலீஸ் என்பதை எப்போதும் வெளியே சொல்ல அவர்களுக்கு விருப்பமும் இல்லை வழியும் இல்லை….ஆதிக்தான் சீக்ரெட் ஆஃபீசர் வெளிய சொல்லாதீங்கன்னு வேற சொல்லி வச்சுறுந்தானே…..

அடுத்த பக்கம்